குவெம்பு
குவெம்பு | |
---|---|
![]() | |
பிறப்பு | குப்பளி வெங்கடப்ப புட்டப்பா 29 திசம்பர் 1904 இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்கமகளூர் மாவட்டம், கருநாடகம் |
இறப்பு | 11 நவம்பர் 1994 மைசூர், கருநாடகம் | (அகவை 89)
புனைபெயர் | குவேம்பு |
தொழில் | எழுத்தாளர், பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
வகை | புனைவு |
இலக்கிய இயக்கம் | நவோதயா |
இணையதளம் | |
http://www.kuvempu.com/ |
குவெம்பு (Kuvempu) என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இல��்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2] புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.[3] இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.[3][4] இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.
பின்னர், பெங்களூர் மத்திய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
விருதுகள்
[தொகு]- ஞானபீட விருது - 1967[5]
- பத்ம பூசன் - 1958[6]
- சாகித்திய அகாதமி விருது - 1955[7]
- தேசிய கவி - 1964[7]
- ஆதிகவி பம்பா விருது - 1987[7]
- பத்ம விபூசண் - 1988[6]
- கர்நாடக ரத்னா - 1992[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Gentle Radiance of a Luminous Lamp". Ramakrishna Math. Archived from the original on 2006-08-22. Retrieved 2006-10-31.
- ↑ "Jnanapeeth Awards". Ekavi. Archived from the original on 2006-04-27. Retrieved 2006-10-31.
- ↑ 3.0 3.1 Rao, L. S. Sheshagiri (2012). Kuvempu. Sapna Book House Pvt. Ltd. ISBN 9788128017933. Retrieved 29 December 2017.
- ↑ "After burglary, Kuvempu museum steps up security". The Hindu. 25 November 2015. http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece.
- ↑ "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 13 October 2007.
- ↑ 6.0 6.1 "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 மே 2013. Retrieved 10 December 2010.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Culture p484-485" (PDF). A Handbook of Karnataka. Government of Karnataka. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. Retrieved 10 December 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website of kuvempu பரணிடப்பட்டது 2010-05-13 at the வந்தவழி இயந்திரம்
- Project Kuvempu பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Kuvempu Picture Album at Kamat's Potpourri
- Kuvempu Page at NIC Shimoga