உள்ளடக்கத்துக்குச் செல்

துர்காபாய் தேஷ்முக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்காபாய் தேஷ்முக் (Durgabai Deshmukh,15 ஜூலை 1909 – 9 மே 1981) இந்திய சுதந்திரப் போராளியாக இருந்தார், வழக்கறிஞர், சமூக தொழிலாளி மற்றும் அரசியல்வாதி. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் இந்தியாவின் திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

இராஜமுந்திரியில் துர்காபாய் தேஷ்முக் -இன் சிலை

பெண்கள் விடுவிப்புக்கான பொதுநல ஆர்வலராகவும்,1937ல் ஆந்திர மகளிர் சபையை (ஆந்திர மகளிர் மாநாடு) துவங்கிவைத்தார். அவர் மத்திய சமூக நல வாரியத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.1953இ்ல் சி.டி.தேஷ்முக்கை மணந்தார். சி.டி.தேஷ்முக், 1950-1956இல் இந்திய ரிசர்வ் வங்கியில் முதல் இந்திய கவர்னராகவும் இந்திய மத்திய அமைச்சரவையில் நிதி அம���ச்சராகவும் பணிபுரிந்தவராவார்.

வாழ்க்கை

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கையில் துர்காபாய் இந்திய அரசியலுடன் தொடர்பு கொண்டிருந்தார். 12 வயதில், அவர் ஆங்கில மொழி கல்வியை சுமத்துவதற்கு எதிராகப் பள்ளியை விட்டு வெளியேறினார். பெண்கள் இந்தி கல்வியை மேம்படுத்துவதற்காக ராஜமுந்திரியில் பாலிகா இந்தி பாத்ஷாலாவைத் தொடங்கினார்.

இந்திய தேசிய காங்கிரசு 1923 ல் அவரின் சொந்த ஊரான காக்கிநாடாவில் மாநாடு நடத்தியபோது, அவர் ஒரு தொண்டராகவும், காதி கண்காட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார். அனுமதிச் சீட்டு இல்லாமல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது பொறுப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றினார். அனுமதிச் சீட்டில்லாமல், ஜவஹர்லால் நேருவைத் தடுத்து நிறுத்திவிட்டார். கண்காட்சியின் அமைப்பாளர்கள் அவர் செய்ததைக் கண்டு கோபப்பட்டப்போது, அவர் அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதாக பதிலளித்தார். அமைப்பாளர்கள் நேருக்கு ஒரு அனுமதிச் சீட்டு வாங்கிய பின்னர்தான் நேரு உள்நுழைய துர்காபாய் தேஷ்மூக் அனுமதி கொடுத்தார். நேரு, தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் தைரியத்திற்காக அந்த பெண்ணைப் பாராட்டினார். பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர் மகாத்மா காந்தியைப் பின்பற்றினார். அவர் எப்போதும் நகைகள், ஒப்பனைப் பொருட்கள் அணிந்திருந்ததில்லை, அவர் ஒரு சத்தியாக்கிரகியாக இருந்தார். காந்தி தலைமையில் உப்பு சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு ��ுக்கிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். இயக்கத்தில் பெண் சத்தியாக்கிரகிகளை ஒருங்கிணத்தார். இதனால் பிரித்தானிய ராஜ் அதிகாரிகள் அவரை 1930 - 1933 ஆண்டுகளுக்கு மூன்று முறை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு துர்காபாய் தனது படிப்பை தொடர்ந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் 1930 இல் அரசியல் அறிவியல் துறையில் பி.ஏ மற்றும் அவரது எம்.ஏ.வை முடித்தார். அவர் 1942 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் தனது சட்ட பட்டம் பெற சென்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். துர்காபாய் பார்வையற்றவர்களின் நிவாரண சங்கத்தின் தலைவர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

விருதுகள்

[தொகு]
  • பால் ஜி ஹாஃப்மேன் விருது
  • நேரு இலக்கிய விருது
  • யுனெஸ்கோ விருது (எழுத்தறிவு துறையில் சிறந்த பணிக்காக)
  • பத்ம விபூஷன் விருது
  • ஜீவன் விருது மற்றும் ஜெகதீஷ் விருது

துர்காபாயால் நிறுவப்பட்ட நிறுவனங்கள்

[தொகு]
  • 1938-இல் ஆந்திரா மகிலா சபா
  • சமூக அபிவிருத்தி கவுன்சில்
  • 1962-ல் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, புது தில்லி
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்காபாய்_தேஷ்முக்&oldid=3925244" இலிருந்து மீள்விக்கப்பட்டது