அஜுதியா நாத் கோஸ்லா
அஜுதியா நாத் கோஸ்லா | |
---|---|
ஒடிசாவின் ஏழாவது ஆளுநர் | |
பதவியில் 1962 செப்டம்பர் 16 – 1966 ஆகத்து 5 | |
முன்னையவர் | யேஷ்வந்த் நாராயண் சுக்தங்கர் |
பின்னவர் | கலீல் அகமது |
பதவியில் 1966 செப்டம்பர் 12 – 1968 சனவரி 30 | |
முன்னையவர் | கலீல் அகமது |
பின்னவர் | சௌகத்துல்லா ஷா அன்சாரி |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை (நியமனம்) | |
பதவியில் 1958 ஏப்ரல் 3 – 1964 ஏப்ரல் 2 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புது தில்லி | 11 திசம்பர் 1892
இறப்பு | 1984, 92 வயது |
தேசியம் | இந்தியன் |
விருதுகள் | பத்ம பூசண் (1954) |
நினைவகங்கள் | |
தேசியம் | இந்தியன் |
கல்வி | இளங்கலை, 1912 குடிசார் பொறியியல், 1916, இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி பின்னர் 'தாம்சன் கட்டிடப் பொறியியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) |
பணி | பொறியாளர், கல்வியாளார் மற்றும் சமூக ஆர்வலர் |
விருதுகள் |
|
அஜுதியா நாத் கோஸ்லா (Ajudhia Nath Khosla ) (1892 திசம்பர் 11 - 1984) [1] இவர் ஓர் இந்திய பொறியியலாளரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் இந்தியாவின் மத்திய நீர்வழி பாசன மற்றும் ஊடுருவல் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[2]
கோஸ்லா புதுதில்லியில் பிறந்தார். மேலும் 1954 முதல் 1959 வரை ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[3] இவருக்கு 1954 இல் பத்ம பூசண் மற்றும் 1977 இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[4] இவர் 1958இல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1959 இல் அதை விட்டு விலகி இந்திய திட்டமிடல் ஆணையத்தில் சேர்ந்தார்.[5][6][7] இவர் 1962 செப்டம்பர் முதல் 1966 ஆகத்து வரையும் மீண்டும் 1966 செப்டம்பர் முதல் 1968 சனவரி வரையிலும் ஒடிசாவின் ஆளுநராக இருந்தார்.[8] 1961 முதல் 1962 வரை இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்தார்.[9]
கல்வி
[தொகு]பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜலந்தரிலேயே மேற்கொண்டார். 1908இல் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பின்னர், 1912இல் லாகூரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் 1913 இல் தாமசன் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் (இப்போது இந்திய தொழில்நுட்பக் கழகம், ரூர்க்கி ) சேர்ந்தார். 1916இல் ஒரு கட்டிடப் பொறியாளராக வெளியேறினார்.
தொழில்
[தொகு]1916 இல் பட்டம் பெற்ற பிறகு, பஞ்சாப் பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசனத் துறையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சில ஆண்டுகளில், இந்திய பொறியியலாளர்கள் சேவை நிறுவப்பட்டு, (1919) பக்ரா அணை திட்டத்தின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்காக இவருக்கு முதல் பணி (1917 செப்டம்பர் – 1921 மார்ச் ) ஒதுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், இவர் இந்திய பயணப் படையுடன் நியமிக்கப்பட்ட அதிகாரியாக மெசொப்பொத்தேமியாவுக்குச் சென்று 18 மாதங்கள் செலவிட்டார். அங்கு பணியாற்றும் போது (1918-1920) இவர் ஆறுகள் மற்றும் பரந்த பள்ளத்தாக்குகளில் துல்லியமாக சமன் செய்வதற்காக கோஸ்லா வட்டை உருவாக்கினார். 1921 முதல் 1926 வரை இவர் சுலைமங்கே தடுப்பணையை நிர்மாணிப்பதில் ஈடுபட்டார்.[10]
1931ஆம் ஆண்டில் கோஸ்லா அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் மண் மறுசீரமைப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் அணை வடிவமைப்பில் சமீபத்திய நுட்பங்களைப் படிக்க நியமிக்கப்பட்டார். திரும்பியதும் இவர் சத்லஜ் பள்ளத்தாக்கு கால்வாய்களின் பஞ்சநாத் தலைமைப் பணிக்கு அனுப்பப்பட்டார்.[11] 1936 சூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், அபீசாபாத் பிரிவின் பொறுப்பாளராக இருந்தபோது, 'தி டிசைன் ஆப் வையர்ஸ் ஆன் பெர்மியபுள் பவுன்டேசன்' என்ற தனது மகத்தான படைப்பை எழுதினார். இந்த வெளியீடு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இத்தகைய கட்டமைப்புகளின் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்தியது.
பங்களிப்புகள்
[தொகு]பொறியாளராக
[தொகு]- இவர் தனது முறைகளை டிரிம்யூ தடுப்பணையின் வடிவமைப்பிற்குப் பயன்படுத்தினார் . மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் (1937-1939), 4-5 ஆண்டுகளுக்கு இயல்பான காலத்திற்கு எதிராக அதைக் கட்டினார் .
- இவர் 1939இல் கண்காணிப்பு பொறியாளராகவும், 1943இல் தலைமை பொறியாளராகவும் பணியாற்றினார். மேலும் இரு பணிகளிலும், பக்ரா அணை திட்டத்தை கவனித்து வந்தார்.
- புதிதாக அமைக்கப்பட்ட மத்திய நீர்வழிகள், நீர்ப்பாசனம் மற்றும் ஊடுருவல் ஆணையத்தின் முதல் தலைவராக 1945இல் நியமிக்கப்பட்டார்.
- கடக்வஸ்லாவில் உள்ள பூனா ஆராய்ச்சி நிலையத்தை மத்திய நீர் மற்றும் மின் நிலையமாக உருவாக்கினார்.
- இவர் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் ஈராகுத்து அணையைப் போன்ற முக்கிய நீர்வள திட்டங்களை நிர்மாணித்தார்.
- இவர் 1963இல் ஓய்வு பெறும்வரை பக்ரா கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசகர் குழுவின் துணைத் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றினார்.
- பாக்கித்தானுடனான சிந்து நீர் தகராறுக்கான பேச்சுவார்த்தைகளில் பல ஒப்பந்தங்களை கொண்டுவருவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
கல்வியாளராக
[தொகு]- இவர் கட்டிடப் பொறியாளர் கல்லூரியின் முதல் இந்திய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் (பின்னர் ரூர்க்கி பல்கலைக்கழகம் என்றும் பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம், ரூர்க்கி என்றும் பெயர் மாற்றப்பட்டது).
- இவர் இரண்டு சிறப்பு பொறியியல் துறைகளின் நிறுவனர் ஆவார். அவை பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் பிரபலமாக்கியுள்ளன: நீர்வள மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் பூகம்ப பொறியியலில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி.
அரசு
[தொகு]- 1959ஆம் ஆண்டில் திட்டக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற அப்போதைய இந்தியப் பிரதமரால் அழைக்கப்பட்டார்.
- 1962ஆம் ஆண்டில் ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்ட முதல் தொழில்முறை பொறியாளர் இவர்.
அங்கீகாரம்
[தொகு]- பத்மா விபூசண், 1977
- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, 1974
- பத்ம பூசன், 1954
- இவரது படித்த கல்லூரியின் மூலம் கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Indian states since 1947". worldstatesmen.org. 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
Ajudhia Nath Khosla (b. 1892 - d. 1984)
- ↑ "Engineer". scientistindia.com. 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
As Chairman of the Central Waterways Irrigation and Navigation Commission,
- ↑ "University of Roorkee, formerly: Indian Institute of Technology (IITR), Roorkee (Rurki) | Colleges in Roorkee (Rurki) Uttarakhand (Uttaranchal)". punjabcolleges.com. 2012. Archived from the original on 9 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
as Vice Chancellor of the University from 1954 to 1959.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ "Our Governors Raj Bhavan Orissa". Archived from the original on 13 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2016.
- ↑ Khosla, Ajudhia Nath (Engineer - Civil) Biography
- ↑ Orissa Government Biography
- ↑ "Post Held of Dr. Ajudhia Nath Khosla". ws.ori.nic.in. 2012. Archived from the original on 22 June 2007. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
Post Held
- ↑ "INSA Past Presidents". insaindia.org. 2012. Archived from the original on 29 January 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
Dr Ajudhia Nath Khosla 1961-62
- ↑ "Engineers". பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
- ↑ "Excerpts from "A Tribute to Roorkee Luminaries" by C.P. Gupta". IIT Roorkee. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.