உள்ளடக்கத்துக்குச் செல்

மூலனூர் சோழீஸ்வரசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சோழீஸ்வரசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:மூலனூர், தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:சோழிஸ்வரர்
தாயார்:சௌந்தரநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மூலனூர் சோழீஸ்வரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மூலனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் சோழிஸ்வரர், சௌந்தரநாயகி சன்னதிகளும், விநாயகர் தட்சணாமுர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)