திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°02′17″N 78°31′18″E / 11.038035°N 78.521580°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | நந்தி க்ஷேத்திரம், அரசவனம், கோகழி, துறைசை, மகா தாண்டவபுரம், கோமுத்தித் தலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், சிவபுரம், பிரமபுரம், தருமபுரம், கஜாரண்யம்[1] |
பெயர்: | திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாவடுதுறை |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாசிலாமணீசுவரர், கோமுத்தீசுவரர் |
தாயார்: | ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை |
தல விருட்சம்: | அரச மரம் |
தீர்த்தம்: | கோமுத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர், மாணிக்கவாசகர் |
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [2]
தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் (மாசிலாமணி ஈசுவரர்) கோயில் அமைந்துள்ளது [3]. இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜ கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப்புற நுழைவாயிலில், புதிதாக மூன்று நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது [4]. மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்[5].
மூர்த்திச் சிறப்பு
[தொகு]சு��ம்பு மூர்த்தியாக விளங்கிடும் இக்கோயிலின் மூலமூர்த்தி கோமுக்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார். அம்பாள் ஒப்பில்லாமுலைநாயகி ஆவார். இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் என அழைக்கப்படுகின்றது. துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
திருமூலர்
[தொகு]திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது.[6]
கோயிற் சிறப்புகள்
[தொகு]- சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது.[6]
- சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.[6]
- திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம் [6]
- முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்[6]
தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி
[தொகு]தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்[6]
இவற்றையும் பார்க்க
[தொகு]திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் குத்தாலம் உத்தவேதீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 36 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 36 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 147
- ↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=315
- ↑ http://www.dinamani.com/edition/story.aspx?Title=ஆவடுதுறையில்%20அணைத்தெழுந்தான்!&artid=360722&SectionID=152&MainSectionID=152&SectionName=Vellimani&SEO=
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்
படத்தொகுப்பு
[தொகு]-
கொடிமரம்
-
நந்தி
-
நந்தி (வலப்புறம்)
-
நந்தி (இடப்புறம்)
-
பலிபீடம்
-
அம்மன் சன்னதி