உள்ளடக்கத்துக்குச் செல்

இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வில்வவனம், சற்குணேசபுரம், மங்களநாயகிபுரம், மணக்கோலநகர்
பெயர்:இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:இடும்பாவனம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சற்குணநாதர்(சற்குணேசுவரர் ,கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்)
தாயார்:மங்களநாயகி(மங்கள வல்லி, கல்யாணேசுவரி)
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்:காமிய ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்மந்தர்

இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இத்தலத்தின் இறைவன் சற்குணநாதர், இறைவி மங்களநாயகி.

சிறப்புகள்

[தொகு]

இத்தலத்தில் இடும்பன் வழிபட்டான் என்பதும் இடும்பனின் சகோதரி இடும்பியை வீமன் மணம் புரிந்தான் என்பதும் தொன்நம்பிக்கைகள். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சி பெற்ற தலங்களில் ஒன்று. பிதுர்முக்தித் தலம்.[1]

வழிபட்டோர்

[தொகு]

இக்கோயிலிலுள்ள இறைவனை பிரமன், அகத்தியர், யமன், ஸ்ரீராமர் வழிபட்டுள்ளனர்.

தேவாரப்பாடல்

[தொகு]

இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:


நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்தலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 272

வெளி இணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]