சாட்டியக்குடி வேதநாதர் கோயில்
Appearance
சாட்டியக்குடி வேதநாதர் கோயில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில், ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூரிலிருந்து கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது.[1] இவ்வூர் மக்கள் வழக்கில் சாட்டியக்குடி என்றும் அழைக்கப்படுகிறது.[2]
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் வேதநாதர், வேதபுரீசுவரர், ரிக்வேதநாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேதநாயகி ஆவார்.[3]
சிறப்பு
[தொகு]சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் கூறப்படுகிறது. கோயிலின் திருச்சுற்றில் அவரது சிற்பம் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
- ↑ 2.0 2.1 திருச்சாட்டியக்குடி
- ↑ பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009