மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்
இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Minister of Natural Resources and Environmental Sustainability Menteri Sumber Asli dan Kelestarian Alam Malaysia | |
---|---|
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு | |
சுருக்கம் | NRES |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | கோலாலம்பூர் |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர் (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 |
முதலாமவர் | துன் டாக்டர் இசுமாயில் (Ismail Abdul Rahman) |
இணையதளம் | www |
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Natural Resources and Environmental Sustainability of Malaysia; மலாய்: Menteri Sumber Asli dan Kelestarian Alam Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது; ஊக்குவிப்பது; ஒருங்கிணைப்பது; இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.[1]
அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது; பாதுகாப்பது; காடு வளர்ப்பது; நிலச் சீரழிவுகளைத் தணிப்பது; போன்றவை குறிப்பிடத்தகவையாகும். மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அமைப்பு
[தொகு]- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர்
- பொதுச் செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- சட்டப் பிரிவு (Legal Division)
- நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டுப் பிரிவு (Strategic Planning and International Division)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொதுச் செயலாளர்
- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்கள்
[தொகு]மலேசிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
பாரிசான் நேசனல்
பாக்காத்தான் அரப்பான்
பெரிக்காத்தான் நேசனல்
தோற்றம் | பெயர் (பிறப்பு - இறப்பு) தொகுதி |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
ஓங் கீ குய் (Ong Kee Hui) (1914–2000) பண்டார் கூச்சிங் |
பாரிசான் நேசனல் (சரவாக் மக்கள் கட்சி) | உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் | 1974 | 1976 | அப்துல் ரசாக் உசேன் (II) | |||
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் | 1976 | 1982 | மகாதீர் முகமது (I) | |||||
இசுடீபன் யோங் (Stephen Yong Kuet Tze) (1921–2001) பாடவான் |
1982 | 26 அக்டோபர் 1990 | மகாதீர் முகமது (II · III) | |||||
லாவ் இயேங் டிங் (Law Hieng Ding) (1935–2018) சரிக்கே |
27 அக்டோபர் 1990 | 26 மார்ச் 2004 | மகாதீர் முகமது (IV · V · VI) அப்துல்லா அகமது படாவி (I) | |||||
அட்னான் சாத்தேம் (Adenan Satem) (1944-2017) பாத்தாங் சாடோங் |
பாரிசான் நேசனல் (பூமிபுத்ரா கட்சி) | இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் | 27 மார்ச் 2004 | 14 பிப்ரவரி 2006 | அப்துல்லா அகமது படாவி (II) | |||
அசுமி காலிட் (Azmi Khalid) (பிறப்பு. 1940) பாடாங் பெசார் |
பாரிசான் நேசனல் (அம்னோ) | 14 பிப்ரவரி 2006 | 18 மார்ச் 2008 | |||||
டகளஸ் உங்கா எம்பாஸ் (Douglas Uggah Embas) (பிறப்பு. 1955) பெத்தோங் |
பாரிசான் நேசனல் (பூமிபுத்ரா கட்சி) | 19 மார்ச் 2008 | 15 மே 2013 | அப்துல்லா அகமது படாவி (III) நஜீப் ரசாக் (I) | ||||
ஜி. பழனிவேல் (Palanivel Govindasamy) (பிறப்பு. 1949) கேமரன் மலை |
பாரிசான் நேசனல் (மஇகா) | 16 மே 2013 | 29 சூலை 2015 | நஜீப் ரசாக் (II) | ||||
வான் சுனைடி துவாங்கு ஜாபார் (Wan Junaidi Tuanku Jaafar) (பிறப்பு. 1946) சாந்துபோங் |
பாரிசான் நேசனல் (பூமிபுத்ரா கட்சி) | 29 சூலை 2015 | 9 மே 2018 | |||||
இயோ பி இன் (Yeo Bee Yin) (பிறப்பு. 1983) பக்ரி |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் | 2 சூலை 2018 | 24 பிப்ரவரி 2020 | மகாதீர் முகமது (VII) | |||
துவான் இப்ராகிம் (Tuan Ibrahim Tuan Man) (பிறப்பு. 1960) குபாங் கிரியான் |
பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) | சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சர் | 10 மார்ச் 2020 | 24 நவம்பர் 2022 | முகிதீன் யாசின் (I) இசுமாயில் சப்ரி யாகோப் (I) | |||
நிக் நசுமி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad) (பிறப்பு. 1982) செத்தியா வங்சா |
பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர்) | இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் | 3 திசம்பர் 2022 | 12 திசம்பர் 2023 | அன்வார் இப்ராகிம் (I) | |||
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் | 12 திசம்பர் 2023 | பதவியில் உள்ளார் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "To spearhead sustainable electricity supply industry and natural resources governance for the wellbeing of the nation". www.ketsa.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- Continental Shelf Act 1966 பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் [Act 83]
- Small Estates (Distribution) Act 1955 பரணிடப்பட்டது 2018-06-19 at the வந்தவழி இயந்திரம் [Act 98]
- Aboriginal Peoples Act 1954 பரணிடப்பட்டது 2018-08-27 at the வந்தவழி இயந்திரம் [Act 134]
- Strata Titles Act 1985 பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம் [Act 318]