உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு

ஆள்கூறுகள்: 02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E / 2.92611; 101.68861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு
Ministry of Rural and Regional Development
Kementerian Kemajuan Desa dan Wilayah

(KKDW)

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சகம்
அமைச்சு மேலோட்டம்
அமைப்பு17 நவம்பர் 1959; 65 ஆண்டுகள் முன்னர் (1959-11-17)
முன்னிருந்த அமைச்சு
  • * Ministry of Rural Development (MRD)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்No. 47, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா
02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E / 2.92611; 101.68861
பணியாட்கள்11,499 (2023)[1]
ஆண்டு நிதிMYR 11,040,786,900 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • * ரூபியா வாங்
    (Rubiah Wang), துணை அமைச்சர்
அமைச்சு தலைமை
  • * ரம்லான் அருன்
    (Ramlan Harun),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.rurallink.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு

மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு (மலாய்: Kementerian Kemajuan Desa dan Wilayah Malaysia; (KKDW) ஆங்கிலம்: Ministry of Rural and Regional Development Malaysia) என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்குப் பொறுப்பான அமைச்சு ஆகும்.

மலேசியாவின் கிராமப்புற வளர்ச்சி; வட்டார வளர்ச்சி; சமூக வளர்ச்சி ஆகிய முக்கியமான மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் அமைச்சாக விளங்குகிறது.

பொது

[தொகு]

மலேசியா முழுவதும் உள்ள கிராமப்புறச் சமூகங்களை முன்னேற்றுவது, இந்த மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் பொறுப்பாகும். சீரான கிராமப்புற வளர்ச்சியின் மூலம் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க இந்த அமைச்சு திட்டம் வகுத்துள்ளது.[3]

நிலையான சூழலில் மனித மூலதனம்; உள்கட்டமைப்பு; மற்றும் போட்டிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் முற்போக்கான கிராமப்புறச் சமூகத்தை உருவாக்கலாம் என்பது இந்த அமைச்சின் தலையாய நோக்கமாக உள்ளது.[3]

பொறுப்பு துறைகள்

[தொகு]
  • கிராமப்புற வளர்ச்சி (Rural Development)
  • வட்டார வளர்ச்சி (Regional Development)
  • சமூக வளர்ச்சி (Community Development)
  • பூமிபுத்ரா (Bumiputera)
  • ஒராங் அசுலி (Orang Asli)
  • ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் (Rubber Industry Smallholders)
  • நில ஒருங்கிணைப்பு (Land Consolidation)
  • நில மறுசீரமைப்பு (Land Rehabilitation)

அமைப்பு

[தொகு]
  • ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர்
    • ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி துணை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • பெரு நிறுவன தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • சட்டப் பிரிவு (Legal Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
          • மாநில அலுவலகங்கள் (KPLB State Offices)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
          • உத்திசார் திட்டமிடல் பிரிவு (Strategic Planning Division)
          • ஊரக முன்னேற்றத்திற்கான நிறுவனம் (Institute for Rural Advancement)
          • முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் கண்காணிப்பு பிரிவு (Investments and Subsidiaries Monitoring Division)
          • கிராமச் சமூகப் பிரிவு (Rural Community Division)
          • கிராமப்புறத் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு (Rural Entrepreneurship Development Division)
          • சமூகப் பொருளாதார பிரிவு (Community Economy Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
          • உள்கட்டமைப்பு பிரிவு (Infrastructure Division)
          • ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (Coordination and Monitoring Division)
          • மக்கள் நலப் பிரிவு (People's Welfare Division)
          • நிலம் மற்றும் வட்டார வளர்ச்சிப் பிரிவு (Land and Regional Development Division)
          • தொழில்நுட்ப பிரிவு (Technical Division)
        • மூத்த பிரிவு செயலாளர் (மேலாண்மை சேவைகள்)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவு (Administrative and Asset Management Division)
          • நிதி பிரிவு (Finance Division)
          • கொள்முதல் பிரிவு (Procurement Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)

கூட்டரசு துறைகள்

[தொகு]
  • சமூக மேம்பாட்டுத் துறை
  • ஒராங் அசுலி மேம்பாட்டுத் துறை

கூட்டரசு நிறுவனங்கள்

[தொகு]
  • மக்களுக்கான நம்பிக்கை மன்றம்
  • கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்
  • மத்திய திராங்கானு மேம்பாட்டு வாரியம்
  • தென் கிளாந்தான் மேம்பாட்டு வாரியம்
  • தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு வாரியம்
  • பினாங்கு வட்டார மேம்பாட்டு வாரியம்'

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ministry of Rural and Regional Development (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
  2. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan - Deputy Prime Minister and Minister of Rural and Regional Development". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
  3. 3.0 3.1 "Ministry of Rural and Regional Development (Kementerian Kemajuan Luar Bandar dan Wilayah) Malaysia - Ministry of Rural and Regional Development is responsible for advancing rural communities throughout Malaysia. The ministry intends to form a progressive society through consistent rural development. It also aims to generate a progressive rural community through strengthening human capital, infrastructure and competitive economy in a consistent environment". MALAYSIA CENTRAL (ID). 9 September 2011. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]