சைவ நெறி இலக்கியங்கள்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவ சமயத்தினைப் பற்றிய இலக்கியங்கள் சைவ நெறி இலக்கியங்களாகும். இவை சைவ நெறிப் பற்றியும், சிவபெருமான் பற்றியும் புகழ்ந்து பாடவும், சைவ நெறியை பரப்பவும் இயற்றப்பட்டன. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிற்றிலக்கியம், பெருங்காப்பியம், சைவப் பனுவல்கள் என்று பல சைவ இலக்கியங்கள் இயற்றப்பட்டன. பொ.ஊ. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது என முனைவர் இரா.செல்வகணபதி குறிப்பிடுகிறார்.[1]
ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர், நாயன்மார்கள், நால்வர் போன்றோர் சைவ சமயத்தின் பெரும் நூல்கள் இயற்றியவர்கள்.
திருமுறை சார்ந்த நூல்கள்
[தொகு]பல்லவர் காலத்திலும், அதன் பிறகும் இயற்றப்பட்ட சைவ இலக்கியங்களின் தொகுப்பினை பன்னிரு திருமுறைகள் என்கிறோம். இந்த திருமுறையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கிய நூல்கள் திருமுறை சார்ந்த நூல்களாக அறியப்படுகின்றன.
- பன்னிரு திருமுறைகள்
- திருமுறைத் தொடர்
- திருத்தொண்டர் புராண சாரம்
- திருப்பதிக் கோவை
- திருப்பதிகக் கோவை
- திருமுறை கண்ட புராணம்
- சேக்கிழார் புராணம்
- திருத்தொண்டர் திருநாமக்கோவை
சைவ சித்தாந்த நூல்கள்
[தொகு]உந்தி களிறோ டுயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம்-வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று
எனும் வெண்பா மூலம் சைவ சிந்தாந்த நூல்கள் பதினான்கு என்பதை அறியலாம். [2]
- திருவுந்தியார்
- திருக்களிற்றுப்படியார்
- சிவஞான போதம்
- சிவஞான சித்தியார்
- இருபா இருபது
- உண்மை விளக்கம்
- சிவப்பிரகாசம்
- உண்மைநெறி விளக்கம்
- திருவருட்பயன்
- வினா வெண்பா
- போற்றிப் பஃறொடை
- கொடிக்கவி
- நெஞ்சு விடு தூது
- சங்கற்ப நிராகரணம்
பிற சைவ சித்தாந்த நூல்கள்
[தொகு]- சித்தாந்த சாத்திரம்
- சொக்கநாத வெண்பா
- சொக்கநாத கலித்துறை
- சிவபோக சாரம்
- முத்தி நிச்சயம்
- சோடசகலாப் பிராத சட்கம்
மொழிபெயர்ப்பு சைவ நூல்கள்
[தொகு]- சிவார்ச்சனா சந்திரிகை
- அரிகரதாரதம்மியம்
- பஞ்சரத்ன ஸ்லோகங்கள்
- சுருதி ஸுக்தி மாலை
- சிவதத்துவ விவேகம்
- சிவபர ஸ்லோகங்கள்
- பரப்ரம்ம தச சுலோகீ
- ஈச்வர குரு த்யானங்கள்
தல புராணங்கள்
[தொகு]- திருவிளையாடற் புராணம்
- மதுரைக் கலம்பகம்
- மதுரைக் கோவை
- மதுரை மாலை
- காஞ்சிப் புராணம்
- கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
- கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
- சிதம்பர மும்மணிக் கோவை
- திருவாரூர் நான்மணி மாலை
- சிதம்பர செய்யுட் கோவை
- காசிக் கலம்பகம்
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- பிரபந்தத்திரட்டு
- இரட்டைமணி மாலை
வீரசைவ நூல்கள்
[தொகு]- சித்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- ஏசு மத நிராகரணம்
- இட்டலிங்க அபிடேகமாலை
- கைத்தல மாலை
- குறுங்கழி நெடில்
- நெடுங்கழி நெடில்
- நிரஞ்சன மாலை
- பழமலை அந்தாதி
- பிக்ஷாடன நவமணி மாலை
- சிவநாம மகிமை
- வேதாந்த சூடாமணி
- திருத்தொண்டர்மாலை
- ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
பொது சைவ நூல்கள்
[தொகு]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.nakkheeran.in/users/TamilClassicalConference.aspx?TCC=37 பரணிடப்பட்டது 2015-12-24 at the வந்தவழி இயந்திரம் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=525 தமிழாய்வு