கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | |
---|---|
2014 இல் பொன்னம்பலம் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் 2004–2010 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் 2001–2004 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் 16 சனவரி 1974 |
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி |
முன்னாள் கல்லூரி | இலண்டன் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Gangaser Ponnambalam, பிறப்பு: சனவரி 16, 1974), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் ஆவார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலத்தின் மகனும், ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெயரனும் ஆவார்.[3]
கஜேந்திரகுமார் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1995 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் "லிங்கன் இன்" கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டில் இலங்கை வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.
அரசியலில்
[தொகு]கஜேந்திரகுமார் 2000 சனவரி 5 இல் அவரது தந்தை குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியலில் இறங்கினார்.[3] 2001 அக்டோபர் 20 இல், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை ஆரம்பித்தன.[4][5] 2001 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் இக்கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.[6] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[7]
2010 மார்ச்சில், இவர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.[8][9] பொன்னம்பலம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேமமு வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவரது அமைப்பைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[10][11] 2011 பெப்ரவரியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை.[13][14] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னம்பலம் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.[15][16][17]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2001 நாடாளுமன்றம்[6] | யாழ்ப்பாண மாவட்டம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 29,641 | தெரிவு | ||
2004 நாடாளுமன்றம்[7] | யாழ்ப்பாண மாவட்டம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 60,770 | தெரிவு | ||
2010 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2015 நாடாளுமன்றம் | யாழ்ப்பாண மாவட்டம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2020 நாடாளுமன்றம்[18] | யாழ்ப்பாண மாவட்டம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | 31,658 | தெரிவு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Members: G. G. Ponnambalam". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ "Govt. precipitating a humanitarian crisis' - Gajendrakumar Ponnambalam". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2013-04-03.
- ↑ 3.0 3.1 Jeyaraj, D. B. S. (4 ஆகத்து 2015). "Tiger Diaspora backs Gajendrakumar Ponnambalam". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/82053/tiger-diaspora-backs-gajendrakumar-ponnambalam.
- ↑ D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html.
- ↑ "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. பார்த்த நாள்: 16 September 2020.
- ↑ 6.0 6.1 "Parliamentary General Election - 2001 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: தேர்தல் திணைக்களம். p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
- ↑ 7.0 7.1 "Parliamentary General Election - 2004 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 189. Archived from the original (PDF) on 4 March 2010.
- ↑ D. B. S. Jeyaraj (17 April 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 28 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html.
- ↑ "Tamil National Peoples Front launched in Jaffna". தமிழ்நெட். 1 March 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31285. பார்த்த நாள்: 16 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 - Notice Under Section 24(1) - General Elections of Members of the Parliament" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1643/07. Colombo, Sri Lanka. 2 March 2010. p. 205A. Archived from the original (PDF) on 1 November 2014.
- ↑ "Results of Parliamentary General Election – 2010" (PDF). Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 200. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ "TNPF announces Central Committee, prepares party constitution". தமிழ்நெட். 24 February 2011. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33589. பார்த்த நாள்: 16 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 - Notice Under Section 24(1) - General Elections of Members of the Parliament" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 236A. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
- ↑ "Parliamentary Election - 2015 - Composition of the Parliamant". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original on 27 September 2015.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 16 September 2020.
- ↑ D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 16 September 2020.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020.
- 1974 பிறப்புகள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்