உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் தாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான வ��க்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் டேரியஸ்
மன்னர்களின் மன்னர்
பேரரசர்
பாரசீகப் பேரரசர்
எகிப்திய பார்வோன்
மூன்றாம் டேரியஸ் படம்
அகாமனிசியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 336–330
முன்னையவர்நான்காம் அர்செஸ்
பின்னையவர்பேரரசர் அலெக்சாந்தர் (மாசிடோனியப் பேரரசர்)
எகிப்தின் பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 343 – 332
முன்னையவர்நான்காம் அர்தசெராக்சஸ
பின்னையவர்பேரரசர் அலெக்சாந்தர்
பிறப்புகிமு 380
பாரசீகம்
இறப்புகிமு சூலை, 330 (வயது 49-50)
பாக்திரியா
புதைத்த இடம்
துணைவர்ஸ்டேடிரியா
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் ஸ்டேடிரியா
டிரைபெட்டீஸ்
மரபுஅக்கிமீனியா வம்சம்
தந்தைஒஸ்தெனசின் அர்சமெஸ்
தாய்சிசிகாம்பிஸ்
மதம்சொராட்டிரிய நெறி

மூன்றாம் டேரியஸ் (Darius III) (பிறப்பு:கிமு 380 – இறப்பு:கிமு 330), இவரது இயற்பெயர் அர்தசத்தா Artashata மற்றும் கிரேக்கப் பெயர் கோடோமன்னஸ் (Codomannus) ஆகும்.[1][1] அகாமனிசியப் பேரரசர் நான்காம் அர்தசெராக்சிற்குப் பின்னர், இவர் பாரசீகப் பேரரசின் அரியணையில் கிமு 336-இல் ஏறியவர், கிமு 330 முடிய 6 ஆண்டுகள் மட்டுமே அரசாண்டவர். இவரே அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசர் ஆவார்.

இவர் கிமு 343-இல் எகிப்தை கைப்பற்றி எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்ச பார்வோன் ஆக முடிசூட்டிக் கொண்டார். மேலும் சிசிலி தீவை கைப்பற்றி எகிப்திய மாகாணத்துடன் இணைத்துக் கொண்டார்.

இவரது ஆட்சிக் காலம் முழுமையும் பண்டைய எகிப்து, போனீசியா, ஐயோனியா பகுதிகளில் கிரேக்கர்களும், எகிப்தியர்களும் தொடர்ந்து அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர். இக்கிளர்ச்சிகளை மாகாண ஆளுநர்களால் அடக்க இயலவில்லை. இதனால் மூன்றாம் டேரியசின் பேரரசு ஆட்டம் கண்டு கொண்டிருந்த நிலையில், கிமு 334-இல் பேரரசர் அலெக்சாந்தர் எகிப்து, போனீசியா, அனதோலியா, சிரியா, மெசொப்பொத்தேமியா பகுதிகளை கைப்பற்றி, இறுதியாக பேரரசர் மூன்றாம் டேரியசின் அகாமனிசியப் பேரரசின் தலைநகரமான பெர்சப்பொலிஸ் நகரத்தை தீக்கிரையாக்கினார். மூன்றாம் டேரியஸ் அலெக்சாந்தரின் படைவீரர்களிடமிருந்து பாக்திரியா பகுதிக்கு தப்பிச் செல்லும் போது, பாக்திரியா மாகாண ஆளுநர் பெஸ்செஸ்சால் கொல்லப்பட்டார்.[2] [3]

இதன் மூலம் பேரரசர் அலெக்சாந்தர் பண்டைய அண்மை கிழக்கு, பண்டைய எகிப்து துருக்கி மற்றும் பாரசீகப் பகுதிகளை மாசிடோனியப் பேரரசின் கீழ் கொன்டு வந்தார்.

அகாமனிசியப் பேரரசர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Heckel, Waldemar (2002). The Wars of Alexander the Great. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1841764733. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Darius III, KING OF PERSIA
  3. Darius III

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Darius III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Prevas, John. Envy of the Gods: Alexander the Great's Ill-fated Journey across Asia. Da Capo Press, 2004.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தாரா&oldid=3998688" இலிருந்து மீள்விக்கப்பட்டது