உள்ளடக்கத்துக்குச் செல்

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்
கிமு 7500-இல் வளமான பிறை பிரதேசத்தில் வரலாற்றுக் முந்தைய புதியகற்கால களங்கள். மனிதக் குடியிருப்புகள் மெசொப்பொத்தேமியாவில் முழுமையாக பரவாத காலம்
புவியியல் பகுதிஅனதோலியா, லெவண்ட், மெசொப்பொத்தேமியா & சிந்து சமவெளி
காலப்பகுதிபுதிய கற்காலம்
காலம்கிமு 10,000 — கிமு 6,500 [1]
வகை களம்எரிக்கோ
முந்தியதுபண்டைய அண்மை கிழக்கின் இடைக் கற்காலம்
(கேபரான் பண்பாடு)
(நாத்தூபியன் பண்பாடு)
கியாமியான் பண்பாடு
பிந்தியதுஹலாப் பண்பாடு புதியகற்கால கிரேக்கம், பயும் () பண்பாடு
வரலாற்று காலத்திற்கு முன்னர் உலக வரைபடத்தில் வேளாண்மை தோன்றிய பகுதிகள்: வளமான பிறை பிரதேசம் (11,000 BP), சீனாவின் யாங்சி ஆறு மற்றும்மஞ்சள் ஆறு வடிநிலங்கள் (9,000 BP) நியூ கினிவின் மேட்டு நிலங்கள் (9,000–6,000 BP), நடு மெக்சிகோ (5,000–4,000 BP), வடக்கின் தென் அமெரிக்கா (5,000–4,000 BP), சகாரா கீழமை ஆபிரிக்கா (5,000–4,000 BP), வட அமெரிக்கா கிழக்கு பகுதி (4,000–3,000 BP).[2]

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (Pre-Pottery Neolithic (PPN) மேற்கு ஆசியாவின் பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த வளமான பிறை பிரதேசத்தில் உள்ள லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 10,000 - கிமு 6,500 வரை நிலவியது.[1][3][4][5]

இதன் பின்னர் இப்பகுதியில் இடைக்கற்காலத்தில் மலர்ந்த நாத்தூபியன் பண்பாட்டு காலத்தில் மக்கள் கால்நடை வளர்த்தல் மற்றும் பயிரிடுதல் முறை அறிந்திருந்தினர். மட்பாண்டாத்திற்கு முந்தைய புதியகற்காலப் பகுதி கிமு 6200 வரை விளங்கியது. பின்னர் மட்பாண்ட புதிய கற்காலம் துவங்கியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலப் பிரிவுகள்

[தொகு]

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (PPNA கிமு 10,000 – 8,800) மற்றும் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (PPNB கிமு 8,800 – 6500) என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.[1][5]

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)

[தொகு]
சுண்ணக்கல்லில் செய்த பெண் உருவம், பெக்கெரியா தொல்லியல் மேடு (கிமு 9000–7000)
ஆண் உருவம், பெக்கெரியா தொல்லியல் மேடு, (கிமு 9000–7000)
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்திய பிட்டுமன் மற்றும் சுண்ணக்கல்லில் செய்த ஆண் & பெண் சிற்பங்கள், (கிமு 9000–7000), பெக்கெரியா தொல்லியல் மேடு
சிக்காகோ பல்கலைக்கழக கீழ்திசை நிறுவன அருங்காட்சியகம்

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில் கிமு 9,000-களில் உலகின் முதல் நகரங்களான எரிக்கோ மற்றும் லெவண்ட் பகுதிகளின் தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்டது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)

[தொகு]

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தில் மக்கள் காட்டு விலங்குகளில் ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை போன்றவைகளை வீட்டு விலங்குகளாக வளர்த்தனர். தானியங்களை பயிரிடுதல் முறையை முதலில் கற்றனர். செய்தொழிலுக்கான கருவிகள் மற்றும் புதிய கட்டிட அமைப்புகளை கற்றிருந்தனர். கருங்கல், அரகோனைட்டு, கால்சைட்டு, படிகம் போன்ற கற்களிலிருந்து மட்பாண்டங்கள் செய்தனர். களிமண்னைக் கொண்டு பானைகள் செய்யும் முறை இக்காலத்தவர்கள் அறிந்திருக்கவில்லை.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (இ)

[தொகு]

தற்கால ஜோர்தான் நாட்டின் அம்மான் நகரத்தின் அருகே உள்ள தொல்லியல் களத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதியகற்காலத்தின் (இ) காலத்திய, கிமு 6,200 முந்தைய 15 அயின் காஜல் சிலைகள் அகழ்வாய்வுவில் கண்டெடுத்தனர். கிமு 6,200 முதல் நாடோடி அரேபியர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். இப்பண்பாடு பண்டைய எகிப்து மற்றும் லெவண்ட் முதல் மெசொப்பொத்தேமியா வரை பரவியிருந்தது.[6]

தெற்கு ஆசியா

[தொகு]
தெற்காசியா வரை பரவுதல்
கிமு 10,000 முதல் கிமு 3,800 முடிய பண்டைய அண்மை கிழக்கு முதல் சிந்துவெளி வரை காணப்பட்ட தொடக்க புதிய கற்கால களங்கள்
கிமு 10,000 முதல் கிமு 3,800 முடிய பண்டைய அண்மை கிழக்கு முதல் சிந்துவெளி வரை காணப்பட்ட தொடக்க புதிய கற்கால களங்கள்[7]

தெற்காசியாவில் கிமு 7,500 முதல் கிமு 6,200 முடிய விளங்கிய மட்பாண்டத்திற்கு முந்தைய துவக்க புதிய கற்காலத்திய தொல்லியல் களங்கள், இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பீர்த்தனா எனுமிடத்தில் கண்டறியப்பட்டது.[8] பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தின் கச்சி மாவட்டத்தில் மெஹெர்கர் (கிமு 6,500 முதல் கிமு 5,500 வரை ) தொல்லியல் களத்தில் கோதுமை, பார்லி வேளாண்மை செய்ததையும், ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்ப்புத் தொழிலில் மேற்கொண்டதை அறியமுடிகிறது.[9]

மட்பாண்டத்திற்க்கு முந்தைய புதிய கற்காலத்தில் மெசொப்பொத்தேமியா பகுதிகளுக்கும், அதன் கிழக்கே அமைந்த சிந்துவெளி நாகரீகப் பகுதிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இரு நாகரிகப் பகுதிகளிலும் பார்லி வேளாண்மை, கால்நடைகளை வளர்த்தல் பொதுவான தொழிலாக இருந்ததிருந்தது.[9]படிகக் கல்லால் செய்த மட்பாண்டங்கள் இவ்விரு பகுதிகளில் காணப்படுகிறது.[9]

தென்னிந்தியாவில் புதிய கற்காலம் கிமு 6,500-இல் தொடங்கி, பெருங்கற்காலம் தொடக்கமான கிமு 1,400 வரை விளங்கியது.[10]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Chazan, Michael (2017). World Prehistory and Archaeology: Pathways Through Time (in ஆங்கிலம்). Routledge. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-80289-5.
  2. Diamond, J.; Bellwood, P. (2003). "Farmers and Their Languages: The First Expansions". Science 300 (5619): 597–603. doi:10.1126/science.1078208. பப்மெட்:12714734. Bibcode: 2003Sci...300..597D. 
  3. Kuijt, I.; Finlayson, B. (Jun 2009). "Evidence for food storage and predomestication granaries 11,000 years ago in the Jordan Valley". Proceedings of the National Academy of Sciences of the United States of America 106 (27): 10966–10970. doi:10.1073/pnas.0812764106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:19549877. Bibcode: 2009PNAS..10610966K. 
  4. Ozkaya, Vecihi (June 2009). "Körtik Tepe, a new Pre-Pottery Neolithic A site in south-eastern Anatolia". Antiquitey Journal, Volume 83, Issue 320.
  5. 5.0 5.1 Richard, Suzanne Near Eastern archaeology Eisenbrauns; illustrated edition (1 Aug 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-083-5 p.244 [1]
  6. Zarins, Juris (1992) "Pastoral Nomadism in Arabia: Ethnoarchaeology and the Archaeological Record," in Ofer Bar-Yosef and A. Khazanov, eds. "Pastoralism in the Levant"
  7. Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (7 May 2014). "The Near-Eastern Roots of the Neolithic in South Asia" (in en). PLOS ONE 9 (5): 1-20. doi:10.1371/journal.pone.0095714. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:4012948. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0095714. 
  8. Coningham, Robin; Young, Ruth (2015). The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE–200 CE. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-316-41898-7. {{cite book}}: |work= ignored (help)
  9. 9.0 9.1 9.2 Material was copied from this source, which is available under a Creative Commons Attribution 4.0 International License Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (7 May 2014). "The Near-Eastern Roots of the Neolithic in South Asia" (in en). PLOS ONE 9 (5): 1–6. doi:10.1371/journal.pone.0095714. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:4012948. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0095714. 
  10. Eleni Asouti and Dorian Q Fuller (2007). TREES AND WOODLANDS OF SOUTH INDIA: ARCHAEOLOGICAL PERSPECTIVES.

மேலும் படிக்க

[தொகு]
  • Ofer Bar-Yosef, The PPNA in the Levant – an overview. Paléorient 15/1, 1989, 57-63.
  • J. Cauvin, Naissance des divinités, Naissance de l’agriculture. La révolution des symboles au Néolithique (CNRS 1994). Translation (T. Watkins) The birth of the gods and the origins of agriculture (Cambridge 2000).

வெளி இணைப்புகள்

[தொகு]