அசிரியப் பேரரசின் காலக்கோடுகள்
Appearance
அசிரியப் பேரரசின் காலக்கோடுகள், வடக்கு மெசொப்பொத்தேமியாவில் நிறுவப்பட்ட பண்டைய அசிரியப் பேரரசு கிமு 2500 முதல் 2025 முடிய ஆண்டது. பின்னர் கிமு 1392 – 934 முடிய மத்திய அசிரியப் பேரரசு, சுமேரியா உள்ளிட்ட முழு மெசொப்பொத்தேமியாவை ஆண்டது. கிமு 911 – 609 முடிய பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளை புது அசிரியப் பேரரசு ஆண்டது. முடிவில் அசிரியப் பேரரசு ஈலாமியர்களால் 609-இல் வீழ்த்தப்பட்டது.[1][2]
அசிரியப் பேரரசுகளின் காலக் கோடுகள்
[தொகு]- கிமு 2500 - 2025 - வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பண்டைய அசிரியர்கள���ன் ஆட்சிக்காலம்
- கிமு 2025 - அசிரியாவின் ஷாம்சி அதாத் அமோரிட்டு மக்களை விரட்டியடித்து, அசூர் நகரத்தை தலைநகராக கொண்டு வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பழைய அசிரிய இராச்சியத்தை நிறுவுதல்.
- கிமு 1680-இல் ஹுரியத் மக்கள் அசிரியாவை கைப்பற்றுதல்
- கிமு 1472 மித்தானி இராச்சியத்தினர், அசிரியாவை தன் நாட்டுடன் இணைத்தல்.
- கிமு 1400 - மித்தானி இராச்சியத்தினரிடமிருந்து அசிரியர்கள் விடுவித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆட்சி புரிதல்
- கிமு 1353 - 1318 அசிரிய மன்னர் முதலாம் உபாலித் இட்டைட்டுப் பேரரசை வென்று, அசிரியாவின் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தல்.
- கிமு 1353 - 1318 - முதலாம் அசூர்-உபாலித், மித்தானி இராச்சியத்திடமிருந்து அசிரியவை விடுவித்து மத்திய அசிரியப் பேரரசை நிறுவினார்.
- கிமு 1307 - 1275 - முதலாம் அதாத் நிராரியின் ஆட்சி
- கிமு 1250 - அசிரியாவின் மன்னர் ஷால்மனேசர் மித்தானி இராச்சியத்தையும், அதன் கூட்டாளிகளையும் வெல்தல
- கிமு 1245 - அசிரிய மன்னர் துக்குல்தி-நினுர்தா இட்டைட்டு இராச்சியத்தை வீழ்த்துதல்.
- கிமு 1244 - 1208 - அசிரிய மன்னர் துக்குல்தி-நினுர்தாவின் ஆட்சி
- கிமு 1115 - 1076 - அசிரிய மன்னர் திக்லத்-பிலேசர் பினீசியாவைக் கைப்பற்றுதல்
- கிமு 911 - புது அசிரியப் பேரரசு நிறுவப்படல்
- கிமு 884 - 859 -அசிரிய மன்னர் இரண்டாம் அசூர்பனிபால், தலைநகரத்தை, அசூர் நகரத்திலிருந்து நிம்ருத்துக்கு மாற்றுதல். புது அசிரியப் பேரரசை நிறுவுதல்.
- கிமு 879 - 627 -அசூர் நகரம் மொசொப்பதோமியர்களின் அன்மீகத் தலமாக விளங்குதல்
- கிமு 841 இஸ்ரேல் போன்ற நாடுகள் அசிரியாவிற்கு கப்பம் கட்டுதல
- கிமு 746 - மன்னர் ஐந்தாம் அசூர் நிராரி அரண்மனைப் புரட்சியால் கொல்லபட்டார். எனவே மூன்றாம் திக்லத் பிலேசர் முடிசூட்டிக் கொண்டார்.
- கிமு 745 - 727 - மூன்றாம் திக்லத் பிலேசர் ஆட்சி காலம்
- கிமு 729 - அசிரியா மற்றும் பபிலோனியாவின் பேரரசராக இருக்கும் போதே பேரரசர் மூன்றாம் திக்லத் பிலேசர் ஆட்சியை விட்டு விலகினார்.
- கிமு 722 - இஸ்ரேலை அசிரியா கைப்பற்றியது.
- கிமு 722 - 705 - இரண்டாம் சர்கோன் ஆட்சி, தலைநகரை கல்ஹுவிலிருந்து சாருக்கின்னுக்கு மாற்றினார்.
- கிமு 722 - 705 - இரண்டாம் சர்கோன் அசிரியாவின் அரியணை ஏறினார்.
- கிமு 722 - 612 - அசிரியாவை சர்கோனியா வம்சத்தினர் ஆண்டனர்.
- கிமு 719 - 717 - அசிரியாவிற்கும், அராத்து இராச்சியத்திற்கும் இடையே எல்லைப் போர் நடைபெற்றது.
- கிமு 710 - 707 - இரண்டாம் சர்கோன் பாபிலோனிருந்து அசிரியாவை ஆண்டார்.
- கிமு 705 - 681 - சென்னசெரிப்பின் ஆட்சிக் காலம்
- கிமு 676 - சிதியர்கள் மற்றும் மின்னியர்கள் அசிரியாவை தாக்குதல்
- கிமு 671 - அசிரியர்கள் பண்டைய எகிப்து இராச்சியத்தை கைப்பற்றுதல்
- கிமு 669 - 668 - அசூர்பனிபால், புது அசிரியப் பேரரசின் அரியணை ஏறுதல்.
- கிமு 668 - 627 - அசூர்பனிபாலின் ஆட்சிக் காலம், அசிரியாவின் இறுதி மன்னர்
- கிமு 648 - எலமைட்டுகள் மற்றும் அசிரியர்களுக்கும் இடையே போர்
- கிமு 609 - புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியடைதல்
இதனையும் காண்க
[தொகு]- மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்
- சுமேரியா
- அக்காதியப் பேரரசு
- பாபிலோன்
- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்