முருகமங்கலம்
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் தேவிகாபுரம் அருகில் அமைந்துள்ளது இவ்வூர். 15 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த படைவீட்டு சீர்மையின் முக்கிய வருவாய் பிரிவாக முருகமங்கலம் இருந்தது. இது முருகமங்கலம் பற்று என்று அழைக்கப்பட்டது. படைவீடும் முருகமங்கலம் பற்றைச் சார்ந்த ஊராகும். இவ்வூரில் தான் ராஜகம்பீரன் மலை காணப்படுகிறது. இவ்வூரில் தேவிகாபுரம் கோயில் தொடர்புடைய ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கற்களில் சூலம் பொறித்த பல கற்பலகைகள் இவ்வூரில் காணப்படுகின்றன. இவை சூலக்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூலக்கல் என்பது சிவன் கோயிலுக்குத் தானமாக விடப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்கும் சின்னமாகும். இவ்வூரில் உள்ள ஏரியில் ஏரி காத்த வீரனின் நடுகல் காணப்படுகிறது