விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்
மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.
“ | எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக
ஏனென் றறிந்துசேர் சுட்டு |
” |
— செல்வா |
ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்
பொதுவாகக் கலைக்களஞ்சியம் போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் விக்கிப்பீடியா என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:
- விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
- ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
- நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
- இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
- தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
- எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற காரணங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் இணையத் தேடுபொறிகளில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
- பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
- வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.
எப்போது
எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை இங்கு காணலாம்.
எத்தகு சான்றுகள்
சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த தமிழ் ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.
- மூல நூற்கள்: தொல்காப்பியம், திருக்குறள், நன்னூல்
- நம்பிக்கை வாய்ந்த ஊடகங்கள்: பிபிசி, தமிழ்நெற்
- தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம்
- மதிப்புபெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூற்கள்: யாழ் நூல்
- ஆய்விதழ்கள்
சான்றுகளைப் பெற
நூல்கள்
- உங்கள் வீட்டிலுள்ள நூல்கள்
- அருகிலுள்ள நூலகம். கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களில் தேட: http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
- மதுரைத் திட்டம்[1]
- நூலகம் திட்டம்[2]
- குடென்பெர்க் திட்டம்[3]
- பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்)
- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- தமிழ்நாடு அரசின் பாடநூல்கள்[4]
- கேரள அரசின் பாடநூல்கள்[5]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள 1959–2000 வரையில் உள்ள சிறு நூலினை ( 68 பக்கங்கள் ) அடிப்படையாகக் கொண்டே அந்த நூலில் உள்ளவாறே தொகுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் வீட்டில் உள்ள நூலகளின் அடிப்படையில் வருகின்றது.
அகரமுதலிகள்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்கும் மின்னூல்கள்[6] மற்றும் அகரமுதலிகள் [7]
- தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகள்[8]
- திராவிட மொழிச் சொற்களின் சொற்பிறப்பியல் தரவு[9]
ஆய்விதழ்கள்
- கூகுள் இசுகாலர்[10]
- சைட்சீயர்[11]
- ஆவணம்
- ஆய்விதழ் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
செய்தி ஊடகங்கள்
பிற சான்றுகள்
எங்ஙனம்
இவற்றில் ஒன்றை பின்வருமாறு கட்டுரையில் இணைக்க வேண்டும்:
“ | எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref> | ” |
கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:
== மேற்கோள்கள்== <references />
கீழுள்ள குறுக்கு வழியையும் பயன்படுத்தலாம்.
{{Reflist}}
- அல்லது
{{^}}
- அல்லது
{{மேற்கோள்}}
- அல்லது
{{மேற்கோள்பட்டியல்}}
எடுத்துக்காட்டுகள்
| year = 1992 | month = | title = The Ecology of Seed Dispersal ( ) | journal = Seeds: The ecology of regeneration in plant communities | volume = இரண்டாம் பதிப்பு | issue = | pages = 85-110
- பரிதிமாற் கலைஞர்: "தமிழ்மாமலை பரிதிமாற் கலைஞர்" (pdf). தமிழரசு. தமிழ்நாடு அரசு. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-12.
{{cite web}}
: Text "pages-64-67" ignored (help)
- எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967: டி என், கோபாலன். "காயாத கானகத்தே". நினைவில் நின்றவை (பிபிசி): pp. எட்டாவது பாகம். http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml. பார்த்த நாள்: 2007-11-03.
- மௌ டம்: வில்சன், மேரி; டிராவசெட், அன்னா (PDF). http://www.imedea.uib.es/natural/terrestrial_ecology/publications/seed_dispersal.pdf. பார்த்த நாள்: ஜூன் 15, 2006.(ஆங்கில மொழியில்)
துணைத் தலைப்பு
மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பினை கட்டுரையில் இட வேண்டும்.
சான்றுகள், மேற்சான்றுகள், ஆதாரங்கள், சான்றாதாரங்கள், குறிப்புகள், அடிக்குறிப்பு என எழுதுவது பொருத்தமானதன்று.
- கட்டுரையில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்குச் சுட்டப்படும் சான்றுகளே மேற்கோள்கள் (References) எனப்படும்.
- மேற்கோள்கள் சுட்டப்படாமல் குறிப்பிடப்படும் சான்றுகளை உசாத்துணை எனும் துணைத் தலைப்பின்கீழ் பட்டியலிடலாம்.
துணை செய்யும் கருவிகள்
- விக்கிப்பீடியா:புரூவ் இட், (ProveIt!) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.
- மேற்கோள் வடிக்கும் கருவி − ஆய்விதழ்கள், செய்தி ஊடகங்கள், முதலிய பொதுவாக சுட்டப்படும் மேற்கோள்களை வடிவமைத்துத் தருவது
- மற்றொரு பயனுடைய கருவி − ISBN போன்ற குறியெண் இருந்தால் முழு சான்றுகோள் தரவுகளையும், விக்கிப்பீடியாவில் இடத்தகுந்த வடிவில் தருகின்றது. உள்ளிடக்கூடிய குறியெண்கள் DrugBank ID, HGNC ID, ISBN, PubMed ID, PubMed Central ID, PubChem ID, அல்லது URL ஆகியவை. தேவையான விக்கிப்பீடியா சான்றுகோள் வடிவையும் தேர்ந்தெடுக்கலாம்.
- en:WebCite - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.
- விக்கி நிரல் தருவி − புத்தகங்களை அடையாளம் காட்டும் ஐஎஸ்பிஎன் முதலியவற்றைக் கொண்டு மேற்கோள் சுட்டப் ���யன்படும் விக்கி நிரலைத் தருவது
- வெர்சிமிலஸின் விக்கி நிரல் தருவி கூகிள் ஸ்காலரில் தேடுவதற்கு ஒரு இடைமுகம் தருகிறது. தேடல் முடிவுகளில் ஒவ்வொன்றிலும் {{wikify}} என்ற இணைப்பு இருக்கும். அதை அழுத்தியவுடன் அந்தத் தரவை மேற்கோள் காட்டுவதற்குத் தேவையான விக்கிநிரல் கிடைத்துவிடும். பிப்டெக்கிலிருந்து (BibTex) {{cite}} வார்ப்புருக்களுக்கு மாற்றம் செய்யும் வசதியும் இதில் உண்டு.
- WPCITE - ஒரே சொடுக்கில்{{cite news}} தகவல்களில் பகுதியை அடிக்குறிப்பு வடிவில் சேர்க்க உதவும் பயர் பாக்சு சேர்க்கை. உருவாக்கியவரின் பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.
- Wikicite ஓர் இலவச மென்பொருள். இதன்மூலம் தொகுப்பாளர்கள் தங்கள் விக்கி பங்களிப்புகளை மேற்கோள் வார்ப்புருக்கள்கொண்டு மேற்கோளிட உதவுகிறது. இது விசுவல் பேசிக் .நெட்கொண்டு எழுதப்பட்டுள்ளது.ஆகவே விண்டோஸ் இயங்குதளத்தில் .நெட் சூழலில் அல்லது பிற இயங்குதளங்களில், மோனோ) சூழலில் பங்காற்றுபவர்களுக்கே பயனாகும். இந்த மென்பொருளின் மூல நிரலிகள் இலவசமாக கிடைக்கின்றன.உருவாக்கியவரின் பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.
- en:OttoBib.com ஐஎசுபிஎன் எண்களை உள்ளீடாகக் கொடுத்தால், புத்தகங்களின் பட்டியலை அகரவரிசையில் எம்எல்ஏ நடை, ஏபிஏ நடை, சிகாகோ நடை கையேடு/துராபியான், பிப்டெக்ஸ், அல்லது விக்கிப்பீடியா வடிவமைப்பில் (நிரந்த இணைப்புகளுடன்) உருவாக்கிடும் ஓர் இலவச கருவி.
- en:Zotero மொசில்லா பயர் பாக்சு கட்டுரைகளைத் தேடி அவற்றை எளிதாக விக்கிப்பீடியாவில் மேற்கோள் வார்ப்புருக்களாக Ctrl-Alt-C மூலம் ஒட்ட துணை புரிகிறது.
- en:User:CitationTool - மேற்கோள்களில் உள்ள பிழைகளைக் களைய உதவுகிறது.
- en:User:Fictional tool - இணைய மேற்கோள்களை சரிசெய்ய உதவும் கருவி
மேற்கோள்கள்
- ↑ http://projectmadurai.org/
- ↑ http://noolaham.org
- ↑ http://www.gutenberg.org/wiki/Main_Page
- ↑ http://www.textbooksonline.tn.nic.in/
- ↑ http://www.education.kerala.gov.in/tamilmedium.htm
- ↑ http://tamilvu.org/coresite/html/cwdirlb1.htm
- ↑ http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=&OptSearch=Full&id=All
- ↑ http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil
- ↑ http://starling.rinet.ru/cgi-bin/response.cgi?root=config&morpho=0&basename=\data\drav\dravet&first=1
- ↑ http://scholar.google.com
- ↑ http://citeseer.ist.psu.edu/
- ↑ http://www.dinamani.com/
- ↑ http://www.bbc.co.uk/tamil/
- ↑ http://tamil.cri.cn/
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |