ஜனபாதங்கள்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பிரபுத்துவ குடியரசுகள் ஜனபாதங்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ. ஊ. மு. 1200– பொ. ஊ. மு. 600 | |||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம், பிராகிருதம், பாளி | ||||||||||
சமயம் | வேத கால சமயம் பௌத்தம் சமணம் | ||||||||||
அரசாங்கம் | குடியரசுகள் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியாவின் இரும்பு யுகம் | ||||||||||
• நிறுவப்பட்டது | பொ. ஊ. மு. 1200 | ||||||||||
• மகாஜனபாதங்களாக இணைக்கப்பட்டது | பொ. ஊ. மு. 600 | ||||||||||
|
|
|
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
ஜனபாதங்கள் (Janapadas) (சமசுகிருதம்: जनपद) என்பவை வேத காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த நாடுகள், குடியரசுகள் (கனபதங்கள்) மற்றும் முடியரசுகள் (சாம இராச்சியங்கள்) ஆகும். வேத காலமானது பிந்தைய வெண்கலக் காலம் முதல் இரும்புக் ���ாலத்துக்குள் வரையிலான காலங்களைத் தொடுகிறது. இது பொ. ஊ. மு. 1500ஆம் ஆண்டு முதல் பொ. ஊ. மு. 6ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 16 மகாஜனபாதங்களின் வளர்ச்சியின் போது, பெரும்பாலான ஜனபாதங்கள் அதிக சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் இணைத்துக் கொள்ளப்பட்டன. எனினும், சில ஜனபாதங்கள் சுதந்திர நாடுகளாகத் தொடர்ந்தன.[1]
பெயர்க் காரணம்
[தொகு]ஜனம் (மக்கள்) மற்றும் பாதம் (காலடி) ஆகிய சொற்கள் இணைந்து ஜனபாதம் என்ற சொல் உருவானது.[2][3]
வளர்ச்சி
[தொகு]இலக்கிய ஆதாரங்கள் ஜனபாதங்கள் பொ. ஊ. மு. 1500 மற்றும் பொ. ஊ. மு. 500க்கு இடையில் செழித்திருந்தன என்று பரிந்துரைக்கின்றன. "ஜனபாதம்" என்ற சொல்லானது முதன் முதலில் ஐத்தரேய (8.14.4) மற்றும் சதபத (13.4.2.17) பிராமண நூல்களில் காணப்படுகிறது.[5]
வேத சம்கிதங்களில் ஜனா என்ற சொல்லானது ஒரு பழங்குடியினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் ஒரே மூதாதையர் மரபைக் கொண்டிருந்ததாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.[6] ஒரு மன்னனால் தலைமை தாங்கப்பட்டு இருந்த ஜனாவின் உறுப்பினர்களின் ஒரு பொதுவான அவையாக சமிதி இருந்தது. அதற்கு ஒரு மன்னனைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது அரியணையிலிருந்து இறக்கவோ சக்தி இருந்தது. மன்னனுக்கு ஆலோசனை கூறிய அறிவு மிகுந்த மூத்தோரின் ஒரு சிறிய அவையாக சபா இருந்தது.[7]
ஜனங்கள் என்பவை உண்மையில் பகுதியளவு நாடோடிகளாக இருந்த மேய்ச்சல் சமூகங்கள் ஆகும். ஆனால், நாடோடி வாழ்க்கையைக் குறைத்துக் கொண்ட போது குறிப்பிட்ட நிலப்பரப்புகளுடன் படிப்படியாக இவர்கள் தொடர்புபடுத்தப்பட்டவர்களாக உருவாயினர். ஜனங்களுக்குள் பல்வேறு குலங்கள் (இனங்கள்) வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு சொந்தத் தலைவர் இருந்தார். படிப்படியாகத் தற்காப்பு மற்றும் போர் முறைத் தேவைகளானவை ஜனங்களை ஜனபதிகளால் (சத்திரியப் போர் வீரர்கள்) தலைமை தாங்கப்பட்ட இராணுவக் குழுக்களை உருவாக்கத் தூண்டின. இந்த முன் வடிவமானது இறுதியாக வளர்ச்சியடைந்து ஜனபாதங்கள் என அறியப்படும் அரசியல் குழுக்கள் நிறுவப்படக் காரணமாகியது.[8]
சில ஜனங்கள் தமது சொந்த ஜனபாதங்களாக வளர்ச்சியடைந்த அதே நேரத்தில், மற்றவை ஒரு பொதுவான ஜனபாதத்தை உருவாக்குவதற்காக ஒன்றாகக் கலந்தன எனத் தோன்றுகிறது. சுதா மிசுரா என்ற அரசியல் அறிவியலாளர் பாஞ்சால ஜனபாதத்தின் பெயரானது அது ஐந்து (பஞ்ச) ஜனங்களின் இணைவு என்பதைப் பரிந்துரைக்கிறது என்கிறார்.[9] ஆரம்ப நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஜனங்கள் (அஜா மற்றும் முதிபா போன்றவை) பிந்தைய நூல்களில் எந்த ஒரு குறிப்பிடுதலையும் பெறவில்லை. இந்த சிறிய ஜனங்கள் வெல்லப்பட்டு பெரிய ஜனங்களுடன் அங்கமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன என்ற கோட்பாட்டை மிசுரா முன் வைக்கிறார்.[9]
ஜனபாதங்கள் படிப்படியாக கி. மு. 500 வாக்கில் கலைக்கப்பட்டன. வட இந்தியாவில் மகதம் போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சி இவற்றின் கலைப்புக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறலாம். தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியில் பாரசீகர்கள் மற்றும் கிரேக்கர்கள் போன்றோரால் நடத்தப்பட்ட அயல்நாட்டுப் படையெடுப்புகளும் இதற்குக் காரணமாக அமைந்தன.[10]
இயற்பண்பு
[தொகு]இக்காலத்தில் வட இந்தியாவில் உச்சபட்ச அரசியல் ஒருமமாக ஜனபாதங்கள் இருந்தன. இந்த அரசியல் அமைப்புகள் பொதுவாகக் முடியரசுகளாக இருந்தன. எனினும், ஒரு சில ஒரு வகைக் குடியரசு அமைப்பைப் பின்பற்றின. இதில் ஆட்சியாளர்கள் மரபு வழியாகப் பதவிக்கு வந்தனர். இராச்சியத்தின் தலைவர் இராஜா அல்லது மன்னர் என்று அழைக்கப்பட்டார். ஒரு புரோகிதர் மற்றும் சேனானி (இராணுவத்தின் தளபதி) ஆகியோர் மன்னனுக்குத் துணையாக இருந்தனர். மேலும், இரண்டு பிற அரசியல் அமைப்புகளும் இருந்தன. அவை மூத்தோர்களின் ஒரு மன்றம் எனக் கருதப்படும் சபா மற்றும் ஒட்டு மொத்த மக்களின் ஒரு பொது அவையான சமிதி ஆகியவை ஆகும்.[11]
இராச்சியங்களின் எல்லைகள்
[தொகு]பெரும்பாலும் ஆறுகள் இரண்டு அண்டை இராச்சியங்களின் எல்லைகளாக இருந்தன. வடக்கு மற்றும் தெற்குப் பாஞ்சாலம், மேற்கு (பாண்டவரின் இராச்சியம்) மற்றும் கிழக்குக் (கௌரவரின் இராச்சியம்) குரு தேசம் ஆகியவற்றை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சில நேரங்களில் இராச்சியங்களை விடப் பெரிய காடுகள் ஜனபாதங்களின் எல்லைகளாக இருந்தன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பாஞ்சாலம் மற்றும் கோசலைக்கு இடையில் இருந்த நைமிசாரண்யக் காட்டை எடுத்துக் கொள்ளலாம். இமயமலை, விந்தியச்சலம் மற்றும் சகியத்திரி போன்ற மலைத் தொடர்களும் இவற்றின் எல்லைகளாக இருந்தன.
நகரங்களும், கிராமங்களும்
[தொகு]சில இராச்சியங்கள் ஒரு முதன்மை நகரத்தைக் கொண்டிருந்தன. அந்நகரங்கள் ஜனபாதங்களின் தலைநகரங்களாகச் சேவையாற்றின. எடுத்துக்காட்டாக, பாண்டவர்களின் இராச்சியத்தின் தலை நகரம் இந்திரப்பிரஸ்தம் ஆகும். கௌரவர்களின் இராச்சியத்தின் தலைநகரம் அத்தினாபுரம் ஆகும். வடக்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமானது அகிச்சத்ரா ஆகும். அதே நேரத்தில் தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரமானது கம்பில்யா ஆகும். கோசலை தன் தலைநகரத்தை அயோத்தியில் கொண்டிருந்தது. முதன்மை நகரம் அல்லது ஆட்சி செய்யும் மன்னனின் அரண்மனை அமைந்துள்ள நகரமான தலைநகரம் தவிர்த்து, சிறு பட்டணங்களும், கிராமங்களும் இராச்சியம் முழுவதும் பரவியிருந்தன. மன்னரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் வரியானது அவ்விடங்களில் இருந்து வசூலிக்கப்பட்டது. மற்ற மன்னர்கள் மற்றும் கொள்ளைக்காரப் பழங்குடியினங்களில் இருந்து வரும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிப்பதை இதற்குப் பதிலாக மன்னர் செய்தார். மேலும், படையெடுத்து வரும் அயல் நாட்டு நாடோடிப் பழங்குடியினங்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளித்தார். குற்றம் செய்தவர்களைக்குத் தண்டனை கொடுத்ததன் மூலம் தனது இராச்சியத்தில் சட்டம் ஒழுங்கையும் மன்னர் நடைமுறைப்படுத்தினார்.[12][13]
நிர்வாகம்
[தொகு]ஜனபாதங்கள் சத்திரிய ஆட்சியாளர்களைக் கொண்டிருந்தன.[14] இலக்கியக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனபாதங்கள் மன்னருடன் சேர்த்து பின்வரும் அவைகளால் நிர்வாகம் செய்யப்பட்டன என வரலாற்றாளர்கள் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர்:
- சபா (மன்றம்)
- தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் அல்லது மூத்தோரின் (பெரும்பாலும் ஆண்கள்) ஒரு மன்றத்தை ஒத்த அவையானது மன்னனுக்கு ஆலோசனைகளைக் கூறியது. அவர்கள் நீதி தொடர்பான செயல்களைச் செய்தனர். கானாக்கள் அல்லது குடியரசு ஜனபாதங்கள் கான-இராச்சியம் என்று அழைக்கப்பட்டன. இவற்றிற்கு மன்னர்கள் கிடையாது. மூத்தோரின் அவையானது இதன் நிர்வாகத்தை நடத்தியது.[1]
- பௌர சபா (செயல் மன்றம்)
- பௌர சபா என்பது தலைநகரத்தின் (புரம்) அவை ஆகும். இது நகர நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டது.[15]
- சமிதி (பொது அவை)
- ஒரு சமிதி என்பது பொதுவாகக் குடியரசு அல்லது நகர அரசின் அனைத்து முதிர் வயதுடையவர்களையும் கொண்டிருந்தது. ஒட்டு மொத்த நகர அரசுக்கும் ஒரு முக்கியமான கருத்து கூறப்பட வேண்டும் எனும் போது ஒரு சமிதியானது கூட்டப்பட்டது. விழாக்களின் போது திட்டமிடவும், நிதி பெறவும், விழாக்களை நடத்தும் நேரத்திலும் ஒரு சமிதி கூட்டப்பட்டது.
- ஜனபாதா
- ஜனபாத அவயானது ஜனபாதத்தில் எஞ்சியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒரு வேளை கிராமங்களை இது பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிராமங்கள் ஒரு கிராமினியால் நிர்வாகம் செய்யப்பட்டன.[15]
"பௌர-ஜனபாதா" என்று அழைக்கப்பட்ட ஒரு பொதுவான அவை இருந்தது என சில வரலாற்றாளர்கள் கோட்பாடுகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், ராம் சரண் சர்மா போன்ற பிறர் இக்கோட்பாட்டுடன் ஒத்துப் போவதில்லை. பௌர சபா மற்றும் ஜனபாதா ஆகிய அவைகள் இருந்தன என்பதே ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக உள்ளது.[16]
இராச்சியங்களுக்கு இடையிலான தொடர்பு
[தொகு]
|
ஒரு இராச்சியத்திற்கு எல்லைக் காவல் என்று யாரும் கிடையாது. எல்லைப் பிரச்சனைகள் மிக அரிதாகவே ஏற்பட்டன. ஒரு மன்னர் ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்தலாம். இது திக்விஜயா என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் அனைத்து திசைகளையும் வெற்றி கொள்வது என்பதாகும். ஒரு மன்னர் மற்றொரு மன்னரை ஒரு யுத்தத்தில் தோற்கடிக்கலாம். இந்த யுத்தங்கள் ஒரு நாளுக்கு நீடித்தன.[19] வென்ற மன்னரின் முதன்மை நிலையைத் தோற்கடிக்கப்பட்ட மன்னர் ஒப்புக் கொள்வார். சில நேரங்களில், தோற்கடிக்கப்பட்ட மன்னர் வெற்றி பெற்ற மன்னருக்கு திறை செலுத்துமாறு கூறப்படும். இத்தகைய திறையானது ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக அவை செலுத்தப்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் தோற்கடிக்கப்பட்ட மன்னர் தன்னுடைய சொந்த இராச்சியத்தை ஆளுவதற்குச் சுதந்திரம் கொடுக்கப்படுவார். தோற்ற மன்னருடன் எந்த வித தொடர்பையும் பேணாமல் அவர் தன் இராச்சியத்தை ஆள்வார். ஒரு இராச்சியம் மற்றொரு இராச்சியத்தை இணைக்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை. மன்னருக்காக இந்த நடவடிக்கைகளை ஒரு இராணுவத் தளபதி பெரும்பாலும் நடத்தினார். ஒரு இராணுவ படையெடுப்பும், திறை செலுத்துவதும் பெரும்பாலும் ஒரு பெரிய சடங்குடன் (இராசசூய வேள்வி அல்லது அசுவமேத யாகம் போன்ற) படையெடுக்கும் மன்னரின் இராச்சியத்தில் நடத்தப்படும். இந்தச் சடங்குகளுக்குத் தோற்கடிக்கப்பட்ட மன்னரும் ஒரு நண்பனாகவும், கூட்டாளியாகவும் அழைக்கப்படுவார்.[20]
புதிய இராச்சியங்கள்
[தொகு]ஒரு பெரிய இனமானது ஒரு தலைமுறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மன்னர்களைப் பெற்றெடுத்த போது புதிய இராச்சியங்கள் உருவாக்கப்பட்டன. தங்களது ஏராளமான இராச்சியங்கள் மூலம் வட இந்தியா முழுவதும் ஆட்சி செய்ததில் குரு இன மன்னர்கள் மிகுந்த வெற்றிகரமானவர்களாகத் திகழ்ந்தனர். ஒவ்வொரு வெற்றிகரமான தலைமுறைக்குப் பிறகும் இந்த இராச்சியங்கள் உருவாக்கப்பட்டன. இதே போல் நடு இந்தியாவில் யாதவர் இன மன்னர்கள் ஏராளமான இராச்சியங்களை உருவாக்கினர்.[21]
கலாச்சார வேற்றுமைகள்
[தொகு]மேற்கு இந்தியாவின் பகுதிகள் சற்றே வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்ட பழங்குடியினங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. குரு மற்றும் பாஞ்சால இராச்சியங்களில் இருந்த பெரும்பான்மை நடைமுறை வழக்குடையோரான வேத கலாச்சாரத்தவரால் வேதம் சாராதவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். இதே போல் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் சில பழங்குடியினங்கள் கருதப்பட்டன.[22] வேதம் சாராத கலாச்சாரம் இடையே பழங்குடியினங்கள், குறிப்பாக காட்டுமிராண்டி இயல்பைக் கொண்டவை, மிலேச்சர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டனர். இமயமலை தாண்டி வடக்கே இருந்த இராச்சியங்கள் குறித்து பண்டைக்கால இந்திய இலக்கியத்தில் மிகச் சிறிதளவே குறிப்பிடப்பட்டுள்ளது. ச��னா என்று அறியப்பட்ட ஒரு இராச்சியமாகச் சீனா குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் மிலேச்ச இராச்சியங்களுடன் குழுப்படுத்தப்பட்டது.
ஜனபாதங்களின் பட்டியல்
[தொகு]வேத இலக்கியப் படி
[தொகு]பண்டைக்கால இந்தியாவின் ஐந்து பிரிவுகளை வேதங்கள் குறிப்பிடுகின்றன:[23]
- உதிச்ய (வடக்குப் பகுதி)
- பிரச்ய (கிழக்குப் பகுதி)
- தக்சிண (தெற்குப் பகுதி)
- பிரதிச்ய (மேற்குப் பகுதி)
- மத்திய-தேச (நடுப் பகுதி)
வேத இலக்கியமானது பின்வரும் ஜனங்கள் அல்லது ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது:[24]
ஜனா அல்லது ஜனபாதா | சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடிப் பெயர் | பகுதி | இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை | அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை |
---|---|---|---|---|
அஜா | அஜா | நடு | ✓ | |
அளினா | அளினா | மேற்கு | ✓ | |
அம்பஷ்தா | அம்பஸ்தா | நடு | ||
ஆந்திரா | ஆந்த்ரா | தெற்கு | ||
அங்கா | அங்கா | கிழக்கு | ✓ | |
அனு | அனு | மேற்கு | ✓ | |
பாலீகா | பல்ஹிகா | வடக்கு | ✓ | |
பளனா | பளனா | மேற்கு | ✓ | |
பரத்வாஜா | பரத்வாஜா | நடு | ✓ | |
பாரதம் | பாரதா | நடு | ✓ | |
பேடா | பேடா | நடு | ✓ | |
போதா | போதா | நடு | ||
சேதி | சேதி | நடு | ✓ | |
துருகுயு | துருகுயு | மேற்கு | ✓ | |
காந்தாரி | காந்தாரி | மேற்கு | ✓ | ✓ |
கம்போஜா | கம்போஜா | வடக்கு | ||
கெஷின் | கெசின் | நடு | ||
கீகடா | கீகடா | கிழக்கு | ✓ | ✓ |
கிராதா | கிராதா | கிழக்கு | ||
கோசலா | கோசலா | கிழக்கு | ||
கிரிவி | க்ரிவி | நடு | ✓ | |
குந்தி | குந்தி | நடு | ||
கலிங்கா | கலிங்கா | கிழக்கு | ✓ | ✓ |
குரு | குரு | நடு | ✓ | ✓ |
மகதா | மகதா | கிழக்கு | ✓ | |
மகாவ்ரிஷா | மகாவ்ரிசா | வடக்கு | ✓ | |
மத்ஸ்யா | மத்ஸ்யா | நடு | ✓ | |
முஜவனா | முஜவனா | வடக்கு | ✓ | ✓ |
முதிபா | முதிபா | தெற்கு | ||
நிசாதா | நிசாதா | நடு | ||
பக்தா | Paktha | மேற்கு | ✓ | |
பாஞ்சாலா | பன்கலா | நடு | ||
பர்ஷு | பர்ஸு | மேற்கு | ✓ | |
பர்வதா | பர்வதா | நடு | ✓ | |
ப்ரிது | ப்ரிது | மேற்கு | ✓ | |
புலிந்தா | புலிந்தா | தெற்கு | ||
புந்த்ரா | புந்த்ரா | கிழக்கு | ||
புரு | புரு | மேற்கு | ✓ | |
ருசமா | ருசமா | நடு | ✓ | |
சால்வா | சால்வா | நடு | ||
சதவந்தா | சதவந்தா | தெற்கு | ||
சபரா | சபரா | தெற்கு | ||
சிக்ரு | சிக்ரு | நடு | ✓ | |
சிவா | சிவா | மேற்கு | ✓ | |
சிவிக்னா | சிவிக்னா | நடு | ||
சிறிஞ்சயா | சிறிஞ்சயா | நடு | ✓ | ✓ |
திரித்சு | திரித்சு | நடு | ✓ | |
துர்வாசா | துர்வாசா | மேற்கு | ✓ | |
உஷினரா | உசினரா | நடு | ✓ | |
உத்தர குரு | உத்தர குரு | வடக்கு | ||
உத்தர மத்ரா | உத்தர மத்ரா | வடக்கு | ||
வைகர்ணா | வைகர்ணா | வடக்கு | ✓ | |
வங்கா | வங்கா | கிழக்கு | ||
காசி | காசி | கிழக்கு | ||
வரசிகா | வரசிகா | நடு | ✓ | |
வாசா | வாசா | நடு | ||
விதர்பா | விதர்பா | தெற்கு | ✓ | |
விதேகா | விதேகா | கிழக்கு | ||
விசனின் | விசனின் | மேற்கு | ✓ | |
வ்ரிசிவந்தா | வ்ரிசிவந்தா | மேற்கு | ✓ | |
யது | யது | மேற்கு | ✓ | |
யக்சா | யக்சு | நடு | ✓ |
புராண இலக்கியம்
[தொகு]புராணங்கள் பண்டைக் கால இந்தியாவின் ஏழு துணைப் பிரிவுகளைக் குறிப்பிடுகின்றன:[25]
- உதிச்யா (வடக்குப் பகுதி)
- ப்ரச்யா (கிழக்குப் பகுதி)
- தக்சிணபாத (தெற்குப் பகுதி)
- அபரந்தா (மேற்குப் பகுதி)
- மத்திய-தேசா (நடுப் பகுதி)
- பர்வத-சிரயின் (இமயமலைப் பகுதி)
- விந்திய-ப்ரஷ்தா (விந்திய மலைப் பகுதி)
சுதாமா மிசுரா என்ற அரசியல் அறிவியலாளரின் ஆய்வுப் படி, புராண நூல்கள் பின்வரும் ஜனபாதங்களைக் குறிப்பிடுகின்றன:[26]
ஜனபாதம் | பகுதி | புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா? | மாற்றுப் பெயர்களும், அமைவிடங்களும் | ||||
---|---|---|---|---|---|---|---|
மச்ச (உட்பிரிவு 114) |
வாயு (உட்பிரிவு 45) |
மார்க்கண்டேய (உட்பிரிவு 57) |
வாமன (உட்பிரிவு 13) |
பிரம்மாண்ட (உட்பிரிவு 16) | |||
அபிரா (வடக்கு) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
அபிரா (தெற்கு) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
அபிசகா (அபிசகா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | அபங்கா (வாயு), ஔபதா (மார்க்கண்டேய), அலாசா (வாமன) | |
அகுகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | குககா (மார்க்கண்டேய), குகுகா (வாமன) | |
அலிமத்ரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | அனிபத்ரா (மார்க்கண்டேய), அளிபத்ரா (வாமன) | ||
ஆனர்த்தா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | அவந்த்யா மார்க்கண்டேய, வாமன |
அந்தகா | நடு | ✓ | |||||
ஆந்திரா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ஆந்தா (மார்க்கண்டேய) | |
ஆந்திரவகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ஆந்தரகா (மார்க்கண்டேய) | ||
அங்கா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | நடு மற்றும் கிழக்கு (வாமன) | ||
அங்காரமாரிசா (அங்கார-மாரிசா) | தெற்கு | ✓ | |||||
அந்தரநர்மதா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | உத்தரநர்மதா (மார்க்கண்டேய), சுநர்மதா (வாமன) |
அந்தர்கிரி | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
அனூபா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | அரூபா (மச்ச), அன்னஜா (வாயு) |
அபரிதா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | புரந்த்ரா (மச்ச), அபரந்தா (மார்க்கண்டேய) |
அர்தபா | நடு | ✓ | ✓ | அதர்வா (மார்க்கண்டேய) | |||
அஸ்மகா (அஷ்மகா) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
அஸ்வகுதா | நடு | ✓ | |||||
அதவி | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ஆரண்ய (மார்க்கண்டேய), அதவ்யா (பிரம்மாண்ட) | |
அத்ரேயா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | அத்ரி (மச்ச, பிரம்மாண்ட) |
ஔந்தரா | விந்திய மலை | ✓ | |||||
அவந்தி | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நடு மற்றும் விந்திய மலை (மச்ச) |
பகிர்கிரி | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
வகலிகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
பகுலா | வடக்கு | ✓ | ✓ | ✓ | பகலவா (வாயு), பகுதா (வாமன) | ||
பர்பரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | நடு மற்றும் வடக்கு (வாமன) | |
பத்ரா | கிழக்கு மற்றும் நடு | ✓ | |||||
பத்ரகரா | நடு | ✓ | ✓ | ✓ | |||
பரத்வாஜா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
பார்கவா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
பருகச்சா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பனுகச்சா (வாயு), பிருகச்சா (மார்க்கண்டேய), தருகச்சா (வாமன), சகக்கச்சா (பிரம்மாண்ட) |
போகவர்தனா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
போஜா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கோப்தா (வாமன) |
பௌசிகா (பௌஷிகா) | வடக்கு | ✓ | |||||
போதா | நடு | ✓ | ✓ | ✓ | பகியா (மச்ச) | ||
பிரமோத்தரா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சுகமோத்தரா (மச்ச), சமந்தரா (பிரம்மாண்ட) |
கர்மகன்டிகா (சர்மகன்டிகா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | அத்தகந்திகா (மச்ச), சகேதகா (வாமன) |
கேரளா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கேவளா (மார்க்கண்டேய) |
சினா (சீனா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | பினா (வாயு), வேனா (வாமன) | |
சோழா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | சௌல்யா (வாயு), சௌடா (வாமன); தெற்கு மற்றும் கிழக்கு (பிரம்மாண்ட) | |
சுலிகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | சுடிகா (வாமன), விந்தியசுலிகா (பிரம்மாண்ட) | |
தன்டகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
தராதா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
தர்வா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | இமய மலை மற்றும் வடக்கு (வாயு மற்றும் மார்க்கண்டேய) | |
தசேரகா (தஷேரகா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கர்சேருகா (வாயு), குசேருகா (மார்க்கண்டேய) |
தசமலிகா (தஷமலிகா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | தசனமகா (மச்ச), தசமனிகா (வாயு), தன்சனா (வாமன) |
தசார்னா (தஷார்னா) | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
துருகுயு | வடக்கு | ✓ | ✓ | ✓ | கிரதா (வாயு), பத்ரா (பிரம்மாண்ட) | ||
துர்கா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | துர்கலா (பிரம்மாண்ட) | |
கணகா | வடக்கு | ✓ | |||||
கந்தாரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
கோதா | நடு | ✓ | |||||
கோலங்குலா | தெற்கு | ✓ | |||||
கோனர்தா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கோவிந்தா (வாயு), கோமந்தா (மார்க்கண்டேய), மனந்தா (வாமன) |
அம்சமர்கா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ச��்வகா (இமய மலை) (மச்ச); அம்சமர்கா (வடக்கு மற்றும் இமய மலை) (வாயு மற்றும் மார்க்கண்டேய); கர்ணமர்கா (வடக்கு) மற்றும் அம்சமர்கா (இமய மலை) (வாமன); அம்சமர்கா (இமய மலை) அம்சபங்கா (வடக்கு) (பிரம்மாண்ட) |
ஹர-ஊணகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | புர்னா (வாயு), உர்னா (மார்க்கண்டேய), குர்னா (வாமன), ஊணா (பிரம்மாண்ட) | |
ஹரமுசிகா (ஹரமுஷிகா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ஹரமூர்த்திகா (மச்ச), ஹரபுரிகா (வாயு), சமுசகா (வாமன) | |
குகுகா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சமுத்ககா (மச்ச), சகுதகா (வாயு), சக்ரத்ரகா (மார்க்கண்டேய), சகுகுகா (வாமன), சகுகுகா (பிரம்மாண்ட) |
இஜிகா | வடக்கு | ✓ | |||||
இசிகா (இஷிகா) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | வைசக்யா (மார்க்கண்டேய) | |
ஜகுடா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ஜங்கலா (மச்ச), ஜுஹுடா (வாயு), ஜகுடா (மார்க்கண்டேய) | ||
ஜங்கலா | நடு | ✓ | ✓ | ✓ | |||
ஜனேயமர்தகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ஜனேயமல்லகா (மார்க்கண்டேய), அங்கியமர்சகா (வாமன), கோபபர்திவா (பிரம்மாண்ட) | |
கச்சிகா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | கச்சிகா (மச்ச), கச்சியா (வாயு), காஸ்மிரா (மார்க்கண்டேய), கச்சிபா (பிரம்மாண்ட) | |
கலதோயகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
கலிங்கா (நடு) | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | அர்கலிங்கா (மார்க்கண்டேய) | |
கலிங்கா (தெற்கு) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
கலிதகா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | கலிதகா (வாயு), அனிகதா (மார்க்கண்டேய), தலிகதா (வாமன), குந்தலா (பிரம்மாண்ட) | |
கலிவனா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | கோலவனா (வாயு), கலிவலா (மார்க்கண்டேய), வரிதனா (வாமன), கலிவனா (பிரம்மாண்ட) | |
கம்போஜா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
கன்டகரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | கந்தகரா (மச்ச), இரத்தகதகா (வாயு), பாகுபத்ரா (மார்க்கண்டேய), கதரா (வாமன) | |
கரஸ்கரா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பரஸ்கரா (வாயு), கதக்சரா (மார்க்கண்டேய), கரந்தரா (பிரம்மாண்ட) |
கரூசா (கரூஷா) | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | தெற்கு மற்றும் விந்திய மலை (மச்ச) |
காஸ்மீரா (கஷ்மீரா) | வடக்கு | ✓ | ✓ | ✓ | |||
கௌசிகா | நடு | ✓ | |||||
கேகேயா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கைகேய்யா (மச்ச), கைகேயா (மார்க்கண்டேய), கைகேயா (வாமன) |
கசா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | கசா (வாமன), சகா (பிரம்மாண்ட) | |
கிராதா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கிராதா (மச்ச, நடு மற்றும் இமய மலை) |
கிசன்னா | நடு | ✓ | |||||
கிட்கிந்தகா (கிஷ்கிந்தகா) | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கிகரவா (வாமன) |
கொங்கானா | தெற்கு | ✓ | |||||
கோசலா (நடு) | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
கோசலா (விந்திய மலை) | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
குக்குதா | வடக்கு | ✓ | |||||
குலுதா | வடக்கு | ✓ | ✓ | உலுதா (பிரம்மாண்ட) | |||
குல்யா | தெற்கு மற்றும் நடு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நடு (மார்க்கண்டேய); தெற்கு (வாமன மற்றும் பிரம்மாண்ட) |
குமாரா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | குபாதா (மச்ச), குமனா (வாயு), குசுமா (மார்க்கண்டேய), குமரதா (வாமன), குசபனா (பிரம்மாண்ட) |
குனின்டா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | புலிந்தா (மச்ச), கலிங்கா (மார்க்கண்டேய), கலிந்தா (பிரம்மாண்ட) | |
குந்தளா | தெற்கு மற்றும் நடு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | குந்தலா ( (மச்ச, நடு), குந்தலா (வாமன) |
குபதா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கசுபனா (வாயு), குரவா (மார்க்கண்டேய) |
குரு | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | கௌரவா (வாமன) | |
குசல்யா (குஷல்யா) | நடு | ✓ | |||||
குசத்ரா (குஷத்ரா) | நடு | ✓ | |||||
குதப்ரவரனா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கசப்ரவரனா (வாயு), குந்தப்ரவரனா (மார்க்கண்டேய), அபப்ரவரனா (பிரம்மாண்ட) |
இலல்கிட்டா | வடக்கு | ✓ | |||||
இலம்பகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | இலமகா (பிரம்மாண்ட) |
மத்ரகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பத்ரகா (வாயு மற்றும் வாமன), மன்டலா (பிரம்மாண்ட) |
மத்குரகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | முத்ரகா (மார்க்கண்டேய), முதகரகா (பிரம்மாண்ட) | |
மத்ரேயா | நடு | ✓ | |||||
மகதா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நடு மற்றும் கிழக்கு (வாயு மற்றும் பிரம்மாண்ட) |
மஹாராஸ்ட்ரா (மகாராஷ்ட்ரா) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நவராஸ்ட்ரா (மச்ச) |
மகேயா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
மகிசிகா (மகிஷிகா) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | மகிசகா (வாயு மற்றும் மார்க்கண்டேய) |
மலாடா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | மலாவா (மச்ச), மனாடா (மார்க்கண்டேய), மன்சதா (வாமன) |
மலாகா | நடு | ✓ | |||||
மலாவர்திகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | மல்லவர்னகா (மச்ச), மலாவர்தின் (வாயு), மனாவர்திகா (மார்க்கண்டேய), பலதந்திகா (வாமன) |
மலாவா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ஏகலவ்யா (வாமன), மலாடா (பிரம்மாண்ட) | |
மல்லா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சல்வா (மச்ச), மலா (வாயு), மையா (வாமன) |
மன்டலா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | மலாவா (வாயு), மலாவா (மார்க்கண்டேய) | |
மன்டவியா | வடக்கு | ✓ | |||||
மசா (மஷா) | விந்திய மலை | ✓ | |||||
மதங்கா | கிழக்கு | ✓ | |||||
மத்ஸ்யா | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | எத்சுதா (வாமன) | |
மௌலிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | மௌனிகா (வாயு) | ||
மேகலா | விந��திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | ரோகலா (வாயு), கேவளா (மார்க்கண்டேய) |
அர்புதா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
முகா | நடு | ✓ | |||||
முசிகா (முஷிகா) | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சுதிகா (மச்ச), முசிகதா (வாமன), முசிகா (பிரம்மாண்ட) |
நைர்னிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | நைசிகா (மார்க்கண்டேய) | ||
நலகலிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | வனதரகா (மார்க்கண்டேய), நலகரகா (வாமன) | ||
நசிக்யா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | வசிக்யா (மச்ச), நசிகந்தா (வாமன), நசிகா (பிரம்மாண்ட) |
நிரகரா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நிகர்கரா (வாயு), நிகரா (மார்க்கண்டேய) |
நைசதா (நைஷதா) | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | நிசதா (வாயு) |
பகலவா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பல்லவா (வாயு தவிர அனைத்திலும்) |
பனவியா | வடக்கு | ✓ | |||||
பாஞ்சாலா | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
பாண்டியா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | புந்தரா (மார்க்கண்டேய), புந்தரா (வாமன) |
பரதா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பரிதா (வாயு), பர்வதா (வாமன) |
பதச்சாரா | நடு | ✓ | ✓ | ✓ | சதபதேஸ்வரா (வாயு) | ||
பௌரிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | பௌனிகா (வாயு), பௌரிகா (மார்க்கண்டேய), பௌரிகா (வாமன), பௌரிகா (பிரம்மாண்ட) | |
ப்லுஸ்தா | இமய மலை | ✓ | |||||
பிரக்ஜோதிசா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
பிரஸ்தலா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | புஸ்கலா (மார்க்கண்டேய) |
பிரவங்கா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | புலவங்கா (மச்ச மற்றும் பிரம்மாண்ட) |
பிரவிஜயா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பிரவிசேயா (பிரம்மாண்ட) |
பிரியலௌகிகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ஹர்சவர்தனா (மார்க்கண்டேய), அங்கலௌகிகா (வாமன), அங்கலௌகிகா (பிரம்மாண்ட) | |
புலேயா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | குலியா (மச்ச), புலிந்தா (மார்க்கண்டேய), புலியா (வாமன), பௌலேயா (பிரம்மாண்ட) |
புலிந்தா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
புந்தரா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | முன்டா (வாயு), மத்ரா (மார்க்கண்டேய), பிரசத்ரா (வாமன) |
இராட்சசா | தெற்கு | ✓ | |||||
இராமதா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | மதரா (மார்க்கண்டேய), மதரோதா (வாமன) | |
உரூபாசா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | குபசா (வாயு), ருபபா (மார்க்கண்டேய), ருபகா (பிரம்மாண்ட) | |
சைனிகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | பிதிகா (வாயு), சுலிகா (மார்க்கண்டேய), ஜிலிகா (பிரம்மாண்ட) | |
சால்வா (ஷால்வா) | நடு | ✓ | ✓ | ✓ | |||
சரஜா | விந்திய மலை | ✓ | |||||
சரஸ்வதா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
சரீகா | தெற்கு | ✓ | |||||
சௌராட்டிரா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சௌராட்டிரா (மச்ச) |
சௌசல்யா | நடு | ✓ | |||||
சௌவீரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
சேதுகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சைலுசா (மார்க்கண்டேய), ஜனுகா (வாமன) |
சபரா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | பரா (வாயு), சரவா (பிரம்மாண்ட) | |
சகா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | நடு (வாமன) | |
சசிகத்ரிகா | இமய மலை | ✓ | |||||
சதத்ருஜா | வடக்கு | ✓ | ✓ | சதத்ரவா (வாமன) | |||
சாத்புரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | பதகமா (மச்ச), சத்சுரா (வாயு), பதவா (மார்க்கண்டேய), பகேலா (வாமன) |
சுலகாரா | வடக்கு | ✓ | |||||
சூர்பரகா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | சுர்பரகா (வாயு), சூர்யரகா (மார்க்கண்டேய), சூர்யரகா (பிரம்மாண்ட) | |
சிந்து | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
சிரலா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சுரலா (வாயு), சுமினா (மார்க்கண்டேய), சினிலா (வாமன), கிரதா (பிரம்மாண்ட) |
சூத்ரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சுகியா (பிரம்மாண்ட) |
சுஜரகா | கிழக்கு | ✓ | |||||
சுபர்சவா | வடக்கு | ✓ | |||||
சூரசேனா | நடு | ✓ | ✓ | ✓ | |||
தைத்ரிகா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | தைத்ரிகா (மச்ச), துரசிதா (வாயு), குருமினி (மார்க்கண்டேய), துபமினா (வாமன), கரிதி (பிரம்மாண்ட) |
தலகனா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | தலகனா (மச்ச), சதனபா (வாயு), தவகரமா (வாமன), தலசலா (பிரம்மாண்ட) | |
தமசா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சமரா (மச்ச), தோமரா (வாமன), தமரா (பிரம்மாண்ட) |
தமஸ் | மேற்கு | ✓ | |||||
தம்ரலிபதகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
தங்கனா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | அபதா (மச்ச), குர்குனா (மார்க்கண்டேய) |
தங்கனா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | துங்கனா (மார்க்கண்டேய) | |
தபசா | மேற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சவபதா (மார்க்கண்டேய), தபகா (பிரம்மாண்ட) |
திலங்கா | நடு | ✓ | |||||
தோமரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | தமசா (மார்க்கண்டேய மற்றும் வாமன) | |
தோசலா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
திரைபுரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
திரிகர்த்தா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
தும்பரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | தும்புரா (வாயு), தும்புலா (மார்க்கண்டேய), பர்பரா (பிரம்மாண்ட) |
துமுரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | தும்புரா (மார்க்கண்டேய), துரகா (வாமன), துகுந்தா (பிரம்மாண்ட) |
துந்திகேரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | சௌந்திகேரா (மச்ச), துசுதிகரா (மார்க்கண்டேய) |
துர்னபதா | வடக்கு | ✓ | |||||
துசாரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | துகரா (மார்க்கண்டேய) | |
உத்பிதா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | உலிதா (வாமன), குலிந்தா (பிரம்மாண்ட) | |
உர்னா | இமய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | உனா (வாயு) |
உத்கலா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கிழக்கு மற்றும் நடு (பிரம்மாண்ட) |
உத்தமர்னா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | உத்தமா (பிரம்மாண்ட) | |
வகியதோதரா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | கிரிககவரா (பிரம்மாண்ட) | |
வனவசிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | வஜிவசிகா (மச்ச), பனவசிகா (வாயு), நமவசிகா (மார்க்கண்டேய), மகாசகா (வாமன) |
வங்கா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | நடு மற்றும் கிழக்கு (வாமன) | ||
வங்கேயா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | மர்கவகேயா (மச்ச), இரங்கேயா (மார்க்கண்டேய), வோஜ்னேயா (பிரம்மாண்ட) |
காசி | நடு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
வததனா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
வத்சா | நடு | ✓ | |||||
வத்சியா | மேற்கு | ✓ | |||||
வைதர்ப்பா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ||
விதேகா | கிழக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | |
வைதிசா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | வைதிகா (வாயு), கொல்லிசா (வாமன) |
விந்தியமுலிகா | தெற்கு | ✓ | ✓ | ✓ | ✓ | விந்தியபுசிகா (மச்ச), விந்தியசைலேயா (மார்க்கண்டேய), விந்தியமௌலியா (பிரம்மாண்ட) | |
விதிகோத்ரா | விந்திய மலை | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | விரகோத்ரா (மார்க்கண்டேய), விதகோத்ரா (வாமன) |
விர்கா | நடு | ✓ | ✓ | ✓ | |||
யமாகா | கிழக்கு | ✓ | |||||
யவனா | வடக்கு | ✓ | ✓ | ✓ | ✓ | ✓ | கவலா (மார்க்கண்டேய) |
சமசுகிருத இதிகாசங்கள்
[தொகு]மகாபாரதத்தின் பீஷ்ம பருவமானது சுமார் 230 ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், இராமாயணம் இதில் ஒரு சிலவனவற்றையே குறிப்பிடுகிறது. புராணங்களைப் போல் இல்லாமல் பண்டைக்கால இந்தியாவின் எந்த ஒரு புவியியல் பிரிவுகளையும் மகாபாரதம் குறிப்பிடவில்லை. ஆனால், சில ஜனபாதங்களைத் தெற்கு அல்லது வடக்கு எனப் பகுப்பதற்கு ஆதரவளிக்கிறது.[27]
பௌத்த நூல்கள்
[தொகு]பௌத்த விதி நூல்களான அங்குத்தர நிகயா, திகா நிகயா, சுல்லா-நித்தேசா ஆகியவை தங்களுக்குள் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் முதன்மையாகப் பின் வரும் 16 மகாஜனபாதங்களைக் குறிப்பிடுகின்றன:[28]
சமண நூல்
[தொகு]சமண நூலான வியக்யபிரஜ்னப்தி அல்லது பகவதி சூத்திரம் 16 முக்கிய ஜனபாதங்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், பல பெயர்கள் பௌத்த நூல்களில் உள்ளவற்றிலிருந்து வேறுபடுகின்றன.[28]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Misra 1973, ப. 18.
- ↑ Charles Rockwell Lanman (1912), A Sanskrit reader: with vocabulary and notes, பாஸ்டன்: Ginn & Co.,
… jána, m. creature; man; person; in plural, and collectively in singular, folks; a people or race or tribe … cf. γένος, Lat. genus, Eng. kin, 'race' …
- ↑ Stephen Potter, Laurens Christopher Sargent (1974), Pedigree: the origins of words from nature, Taplinger, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8008-6248-0,
… *gen-, found in Skt. jana, 'a man', and Gk. genos and L. genus, 'a race' …
- ↑ Witzel 1995.
- ↑ Misra 1973, ப. 15.
- ↑ Misra 1973, ப. 7-11.
- ↑ Misra 1973, ப. 12.
- ↑ Misra 1973, ப. 13.
- ↑ 9.0 9.1 Misra 1973, ப. 14.
- ↑ Misra 1973, ப. 15-16.
- ↑ D. R. Bhandarkar (1994). Lectures on the Ancient History of India from 650 – 325 B. C. Asian Educational Services. pp. 174–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0124-6.
- ↑ Devendrakumar Rajaram Patil (1946). Cultural History from the Vāyu Purāna. Motilal Banarsidass. pp. 175–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2085-2.
- ↑ Sudāmā Miśra (1973). Janapada state in ancient India. Bhāratīya Vidyā Prakāśana.
- ↑ Misra 1973, ப. 17.
- ↑ 15.0 15.1 Misra 1973, ப. 19.
- ↑ Ram Sharan Sharma (1991). Aspects of Political Ideas and Institutions in Ancient India. மோதிலால் பனர்சிதாசு. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120808270.
- ↑ Feb 22, Rohan Dua / TNN / Updated. "India's largest known burial site is 3,800 yrs old, confirms carbon dating | India News – Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/india/indias-largest-known-burial-site-is-3800-yrs-old-confirms-carbon-dating/articleshow/74254040.cms.
- ↑ Feb 22, Rohan Dua / TNN / Updated. "India's largest known burial site is 3,800 yrs old, confirms carbon dating | India News – Times of India". The Times of India (in ஆங்கிலம்).
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ The Geographical knowledge. 1971.
- ↑ Knipe 2015, ப. 234-5.
- ↑ Asim Kumar Chatterji (1980). Political History of Pre-Buddhist India. Indian Publicity Society.
- ↑ Millard Fuller. "(अंगिका) Language : The Voice of Anga Desh". Angika.
- ↑ Misra 1973, ப. 24.
- ↑ Misra 1973, ப. 304-305.
- ↑ Misra 1973, ப. 45.
- ↑ Misra 1973, ப. 306-321.
- ↑ Misra 1973, ப. 99.
- ↑ 28.0 28.1 Misra 1973, ப. 2.