உள்ளடக்கத்துக்குச் செல்

பரத நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரத நாடு அல்லது பரதர்கள் அல்லது வரதர்கள் (Parada Kingdom) ( Varadas, Parita) இரும்புக் காலத்தைச் சேர்ந்த பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். பரத நாட்டின் சரியான புவியியல் குறித்து அறியப்படவில்லை.

வாயு புராணத்தில் நடு ஆசியாவில் பாயும் ஆமூ தாரியா ஆற்றங்கரைகளில் வாழ்ந்த இன மக்களை பரதர்கள் அல்லது வரதர்கள் எனக் குறிப்பிடுகிறது. [1] மகாபாரதத்தில் பரதர் இன மக்களை, தற்கால சீனாவின் சிஞ்சியாங் பகுதியில் வாழ்ந்த மிலேச்ச இன மக்கள் என்றும், இராமாயணம், இம்மக்களை இமயமலை பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் என்றும் குறித்துள்ளது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alexander's Invasion of India, p. 57
  2. Ramayana Kisk. Kanda, 43-12


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத_நாடு&oldid=4057580" இலிருந்து மீள்விக்கப்பட்டது