உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சாறு ஆனந்த தாண்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

கஞ்சாறு ஆனந்த தாண்டேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது. கஞ்சாறு, கஞ்சாறூர் என்றும் ஆனதாண்டவபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆனந்த தாண்டேசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரகம், சனீசுவரர், சூரியன், சந்திரன் சன்னதிகளும் உள்ளன. இத்தலம் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலமாகும். அவருடைய திருமேனியும், அவருடைய மகளின் திருமேனியும் இக்கோயிலில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009