மே 2007
மே | ||||||
தி | செ | பு | வி | வெ | ச | ஞா |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |
மே 2007 2007 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை 18ம் திகதி ஆரம்பித்து வைகாசி 17இல் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகு- மே 1 - ஈராக்கிய அல்-கைடா அமைப்பின் தலைவர் அவ்வமைப்பின் உட்பூசல் காரணமாகக் கொல்லப்பட்டதாக ஈராக்கிய உள்நாட்டமைச்சு அறிவித்தது. இதனை அவ்வமைப்பு மறுத்துள்ளது. (ராய்ட்டர்ஸ்)
- மே 1 - மெல்பேர்னில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரை அவ்வமைப்புக்கு நிதி சேகரித்து அனுப்பியமைக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்) பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம்
- மே 2 - மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் பாலி ஒன்பது கைதிகளின் அப்பீல் மனு மீதான விசாரணை பாலியில் ஆரம்பமானது.(ஏபிசி)
- மே 5 - 17 வயது குர்தீஷ் இன பெண்ணொருத்தி சன்னி முஸ்லிம் ஆண் ஒருவனுடன் தொடர்பு இருந்த்து நிரூபிக்கப்பட்டு அவள் கல்லால் அடித்துக் கொல்லப்படும் காட்சி யூடியூப்பில் இடம்பெற்றுள்ளது. (ஃபொக்ஸ்)
- மே 6 - கென்யாவின் போயிங் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 115பேர் மாண்டனர். (பிபிசி)
- மே 6 - பாகிஸ்தானில் பதவி நீக்கப்பட்ட பிரதம நீதியரசர் இப்திக்கார் சௌத்திரியை வரவேற்கப் பல்லாயிரக்கணக்கானோர் லாகூரில் திரண்டனர். (சிஎன்என்)[தொடர்பிழந்த இணைப்பு]
- மே 6 - இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற பெரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் 16 பேர் கொல்லப்பட்டும் 125,000 ப��ர் வீடிழந்தும் உள்ளனர். (ஏஎஃப்பி)
- மே 7 - பிரான்சில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நிக்கலஸ் சர்கோசி 53 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
- மே 7 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- மே 7 - மன்னார் வவுனியா வீதியை அண்டிய எல்லைப் புறக்கிராமங்களான பெரியதம்பனை மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் மே 6 நடந்த மோதல்களின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஐந்து இராணுவத்தினரின் சடலங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக இராணுவத் தரப்பிடம் கையளிக்கப்பட்டன. (உதயன்)
- மே 10 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டோனி பிளையர் தாம் ஜூன் 27இல் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். (பிபிசி)
- மே 10 - கிழக்குத் தீமோரில் நடந்த அதிபர் தேர்தலில் பிரதமர் ஜோசே ரமோஸ் ஹோர்ட்டா (José Ramos Horta) 73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். (ஏபிசி)
- மே 10 - தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் றிச்சர்ட் பௌச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். (வீரகேசரி)[தொடர்பிழந்த இணைப்பு]
- மே 12 - தாய்வானின் பிரதமர் சூ த்செங்-சாங் (Su Tseng-Chang) பதவிலிருந்து விலகினார். (ப்ளூம்பேர்க்)
- மே 12 - கராச்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் அல்டாஃப் உசேன் அவர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- மே 12 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கையின் மூன்று விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் வீடுகள் பல சேதமுற்றன. (தமிழ்நெட்)
- மே 13 - தலிபானின் முன்னணி இராணுவத் தலைவர் முல்லா அப்துல்லா கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். (ஏபி)
- மே 13 - சிம்பாப்வே நாட்டின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி அந்நாட்டில் வருட இறுதியில் இடம்பெறவிருக்கும் துடுப்பாட்டத் தொடருக்கு செல்ல வேண்டாமென அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் தமது நாட்டுத் துடுப்பாட்ட அணியைக் கேட்டுக் கொண்டுள்ளார். (ஏபிசி)
- மே 13 - திருகோணமலையில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் உட்படப் பலநிகழ்வுகளில் கலந்துகொண்ட மொறவேவாப் பகுதியில் தமிழில் சரளமாக உரையாடும் திறமையுள்ள வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ என்னும் புத்த மதகுரு இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்) பரணிடப்பட்டது 2007-05-15 at the வந்தவழி இயந்திரம்
- மே 13 - தலிபானின் முன்னணி இராணுவத் தலைவர் முல்லா அப்துல்லா கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். (ஏபி)
- மே 14 - டொம் மூடி இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் மேற்கு அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட அணிப் பயிற்றுநராக ஜூலை 1இல் பதவியேற்பார். (பிபிசி)
- மே 14 - ரஷ்யாவில் ஓர்ஸ்க் என்னுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10பேர் மாண்டனர். (ஏபி) பரணிடப்பட்டது 2007-05-16 at the வந்தவழி இயந்திரம்
- மே 16 - ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த அலெக்ஸ் சமண்ட் (Alex Salmond) தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- மே 16 - மேற்கு லாவோசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தாய்லாந்து, வியட்நாமிலும் உணரப்பட்டது. (பிபிசி)
- மே 17 - கொரியப் போருக்குப் பின்னர் முதற்தடவையாக வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து இடம்பெற்றது. (ஐடிவி) பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்
- மே 18 - கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 2007இல் காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்களில் 11 பேர் கரை திரும்பியுள்ளனர்.
- மே 18 - இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இஸ்லாமிய மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். (ஃபொக்ஸ்)
- மே 23 - தமிழ்நாட்டில் திருப்பூரில் பின்னலாடைத் தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் 25 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். (பிபிசி)
- மே 24 - கொழும்பில் இராணுவத்தினரின் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்துள்ளனர். (பிபிசி)
- மே 24 - யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவின் தென்பகுதியில் உள்ள இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்துள்ளனர். 35 கடற்படையினர் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். (பிபிசி)
- மே 28 - கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- மே 29 - பக்தாதில் பல பிரித்தானியப் பிரஜைகள் கடத்தப்பட்டனர். (பிபிசி)
- மே 29 - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. (புதினம்) பரணிடப்பட்டது 2007-05-31 at the வந்தவழி இயந்திரம்
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்