2010
2010 (MMX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். சீன நாட்காட்டியில் 2010 பெப்ரவரி 14 முதல் 2011 பிப்ரவரி 2 வரை நீடித்த இவ்வாண்டு தங்கப்புலி ஆண்டு எனப்படுகிறது.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2010 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2010 MMX |
திருவள்ளுவர் ஆண்டு | 2041 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2763 |
அர்மீனிய நாட்காட்டி | 1459 ԹՎ ՌՆԾԹ |
சீன நாட்காட்டி | 4706-4707 |
எபிரேய நாட்காட்டி | 5769-5770 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2065-2066 1932-1933 5111-5112 |
இரானிய நாட்காட்டி | 1388-1389 |
இசுலாமிய நாட்காட்டி | 1431 – 1432 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 22 (平成22年) |
வட கொரிய நாட்காட்டி | 99 |
ரூனிக் நாட்காட்டி | 2260 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4343 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - பாகிஸ்தானில் கைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 88 பேர் உயிரிழந்தனர்.
- ஜனவரி 2 - 1912 ஆம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் தொலைந்து போன ஆஸ்திரேலிய விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஜனவரி 3 - கொங்கோவில் நியாமுராகிரா எரிமலை வெடித்தது.
- ஜனவரி 4 - உலகின் மிக உயர்ந்த வானளாவி புர்ஜ் துபாய் துபாயில் திறக்கப்பட்டது.[1]
- ஜனவரி 4 - எகிப்தில் உலகின் மிகப் பெரிய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜனவரி 5 - சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது.
- ஜனவரி 7 - இராணுவக் காவலில் இருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார்.
- பெப்ரவரி 12–28 – 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடா, வான்கூவர், மற்றும் விசுலர் ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
- சூன் 11 - சூலை 11 – 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தென்னாபிரிக்காவில்.
- சூன் 16 - பூடான் நாட்டில் புகையிலைக்கு தடை
- சூலை 17 - அனைத்துலக நீதிமன்றம் துவங்கி, சர்வதேச நீதிக்கான உலக நாளாக கொண்டாட ஐநா அறிவித்தது.
- ஆகத்து 31 - ஈராக்கில் இருந்து அமெரிக்கப் போர்ப்படைகள் விலகின.
இறப்புகள்
தொகு- ஜனவரி 1 - பெ. சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி (பி. 1957)
- ஜனவரி 17 - ஜோதி பாசு, மேற்கு வங்க பொதுவுடமைவாதி (பி. 1914)
- பெப்ரவரி 9 - செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்துக் கலைஞர் (பி. 1945)
- பெப்ரவரி 17 - மணிமேகலை இராமநாதன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை (பி. 1946)
- பெப்ரவரி 20 - சிறீதர் பிச்சையப்பா, ஈழத்து நாடக நடிகர் (பி. 1963)
- மார்ச் 20 - கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (பி. 1925)
- மார்ச் 23 - கானு சன்யால், இந்தியக் கம்யூனிசத் தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 10 - லேக் காச்சின்ஸ்கி, போலந்து அரசுத்தலைவர் (பி. 1949)
- மே 5 - உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (பி. 1951)
- மே 17 - அனுராதா ரமணன், எழுத்தாளர்
- மே 18 - கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)
- ஆகத்து 22 - ஏ. கே. வீராசாமி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஆகத்து 23 - இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)
- செப்டம்பர் 8 - முரளி, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1964)
- செப்டம்பர் 13 - ஆர். சூடாமணி, எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 8 - ரெ. சண்முகம், மலேசியக் கவிஞர், பாடகர் (பி. 1936)
- அக்டோபர் 9 - எஸ். எஸ். சந்திரன், திரைப்பட நடிகர்
- டிசம்பர் 3 - அநுத்தமா, எழுத்தாளர்
- டிசம்பர் 13 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
- டிசம்பர் 13 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்
- டிசம்பர் 20 - கா. பொ. இரத்தினம், ஈழத்துத் தமிழ் அறிஞர்
- டிசம்பர் 23 - கே. கருணாகரன், முன்னாள் கேரள முதல்வர்
- டிசம்பர் 30 - பொபி ஃபாரெல், பாப் இசைப் பாடகர் (பி. 1949