அக்டோபர் 2008
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 2008, 2008 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 17 வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பர் 15 சனிக்கிழமையில் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- அக்டோபர் 31:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. (சிஃபி)
- அக்டோபர் 30: அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர், நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (தினத்தந்தி)
- அக்டோபர் 29:
- இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்கப் போட்டித் தொடரில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வென்று உலக சதுரங்க சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். (சிஎன்என்)
- மாலைதீவுகளில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் முகமது நசீட் வெற்றி பெற்றார். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- அக்டோபர் 27:
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கோமா நகரில் துட்சி தீவிரவாதிகள் முன்னேறி வருகிறார்கள். ஐநா அமைதிப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கூ இடையில் கடும்போர் இடம்பெற்று வருகிறது. (பிபிசி)
- அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவைச் சுட்டுக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டிருந்த இரு வெள்ளையின மேலாதிக்கவாதிகள் கைது செய்யப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 26: ஈராக்கிய எல்லைக்கருகிலுள்ள சிரியாவின் பகுதியில் அமெரிக்க ஹெலிகொப்டர் மேற்கொண்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். (சானா)
- அக்டோபர் 24:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்:
- சிங்களப் பேரினவாதத்தால் இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். (புதினம்)
- இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை கைது செய்தது. (தினத்தந்தி)
- எரித்திரியாவுடனான எல்லைப்பிரச்சினையை அடுத்து சிபூட்டி அந்நாட்டுடன் போரை அறிவிக்க இருப்பதாக அறிவித்தது. (பிபிசி)
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்:
- அக்டோபர் 23:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் மு. கண்ணப்பன் ஆகியோரை தமிழ்நாடு அரசு கைது செய்தது. (புதினம்)
- மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் 12 பேரை மலேசியப் போலிசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் 3 பெண்கள், ஒரு குழந்தையும் ஆகும். (தமிழ்முரசு)
- அக்டோபர் 22: சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முதல் முயற்சியாக சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக செலுத்தியது. இண்டியன் எக்ஸ்பிரஸ்)
- அக்டோபர் 21: இந்தியாவின் இம்ப்பால் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். (வெப்துனியா)
- அக்டோபர் 18:
- 1953 இல் நடத்தப்பட்ட மில்லர்-யூரி பரிசோதனையில் மேலும் பல அமினோ அமிலங்கள் புட்டிகளில் எஞ்சியிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- ரஷ்யா, இங்குஷேத்தியாவில் முஸ்லிம் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- அக்டோபர் 17:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவின் இலங்கைக்கான படைத்துறை உதவியை எதிர்த்தும் 14 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறப்பு கடிதங்களை முதல்வர் மு. கருணாநிதியிடம் கையளித்தனர். (இந்துஸ்தான் டைம்ஸ்)
- இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் 88 ஓட்டங்களைப் பெற்று 12,000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற இலக்கை எட்டினார். (பிபிசி)
- அக்டோபர் 16:
- இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கமான இந்துராப் என்ற அமைப்புக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. (தமிழ்முரசு)
- அசர்பைஜானின் அரசுத் தலைவராக இல்ஹாம் அலீயெவ் பெரும்பான்மைப் பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (சிஎன்என்)
- அக்டோபர் 15: தாய்லாந்தும் கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- அக்டோபர் 14: த வைட் டைகர் என்னும் புதினத்திற்காக இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடிகா மான் புக்கர் பரிசு வென்றார். (தட்ஸ்தமிழ்)
- அக்டோபர் 12: அமெரிக்காவின் பால் கிரக்மன் 2008 பொருளியல் நோபல் பரிசு பெற்றார். (ஏபி)
- அக்டோபர் 11:
- ஐக்கிய அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்கியது. (பிபிசி)
- ரஷ்யாவின் செச்னியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 மக்கள் உயிரிழந்தனர். (பிபிசி)
- அக்டோபர் 10: 2008 அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் பின்லாந்து அரசுத் தலைவர் மார்ட்டி ஆட்டிசாரிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 9: 2008 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்-மரீ குஸ்டாவி லெ கிளேசியோ என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- அக்டோபர் 8:
- 2008 வேதியியல் நோபல் பரிசு ஜப்பானியரான ஒசாமு ஷிமோமுரா, அமெரிக்கர்களான மார்ட்டின் சால்ஃபி, ரொஜர் த்சியென் ஆகியோருக்கு வழங்கப்ப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அக்டோபர் 7: ஜப்பானைச் சேர்ந்த நாம்பு ஓச்சிரோ, கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகியோருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- அக்டோபர் 6:
- மருத்துவத்துக்கான 2008 நோபல் பரிசு ஜெர்மனியின் ஹரால்ட் சூர் ஹவுசன், மற்றும் பிரான்சின் பிரான்சுவா பரே-சினோசி, லுக் மொண்டேனியர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- மெசஞ்சர் விண்கலம் இரண்டாம் தடவையாக புதன் கோளைக் கடந்தது. (நியூயோர்க் டைம்ஸ்)
- அக்டோபர் 5:
- கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அசாம் மாநிலத்தில் உதால்குரி மாவட்டத்தில் அங்கு குடியேறிய முஸ்லிம் இனத்தவருக்கும் போடோ பழங்குடிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- பூமி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் காபனீரொக்சைட்டை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் பெரும் பங்கு வகிப்பதாக "குளோபல் கார்பன் திட்டம்" என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. (தினமலர்)
- அக்டோபர் 3:
- அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 700,000,000,000 அமெரிக்க டாலர் அவசர நிதியுதவியை அமெரிக்க நிறுவனங்களுக்கு அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். (என்பீஆர்)
- வைக்கிங் காலத்து தேவாலயம் ஒன்றின் எச்சங்கள் சுவீடனில் கண்டுபிடிக்கப்பட்டன. (த லோக்கல்)
- அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஓ. ஜே. சிம்சன் கொள்ளை, மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக்க் காணப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- அக்டோபர் 2: ஐக்கிய அமெரிக்காவின் மேலவை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரவளித்தது. (ஏபி)
- அக்டோபர் 1: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்-ஐபிஎன்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- அக்டோபர் 31:
- கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில் பிள்ளையான் சிறு காயங்களுக்குள்ளானார். (த ஐலண்ட்)
- கிளிநொச்சி ஜெயந்தி நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தி மக்களின் வீடுகளுக்கு அழிவை ஏற்படுத்தியது. (புதினம்)
- அக்டோபர் 29:
- மன்னார் தள்ளாடி படைத்தளம் மீதும் கொழும்பு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர். (ஏஎஃப்பி)
- கிளிநொச்சி, பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டு, 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 28: மட்டக்களப்பில் செங்கலடியில் கருணா குழுவின் முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டு, ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டனர். (டெய்லிமிரர்)
- அக்டோபர் 27: அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரை விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 26: ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய நடுவண் அரசுக்கு சிக்கலை உருவாக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்தார். (புதினம்)
- அக்டோபர் 24:
- ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் படையினர் செப்டம்பர் 2008 வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டு 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்ததாக இலங்கைப் படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. (புதினம்)
- கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பாடசாலை ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- அக்டோபர் 23:
- அம்பாறை மாவட்டத்தில் உள்ள வக்குமுட்டியா பகுதியில் இடம்பெற்ற நேரடி மோதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்தார். (புதினம்)
- நாச்சிக்குடா தொடக்கம் புத்துவெட்டுவான் வரையிலான களமுனைகளில் 47 படையினர் கொல்லப்பட்டு, 87 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- அக்டோபர் 20: கிளிநொச்சியின் தென்மேற்கே நாச்சிக்குடா பகுதியைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலான பகுதிகளில் படையினரின் நகர்வுகளை முடக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (பிபிசி), (புதினம்)
- அக்டோபர் 19: அம்பாந்தோட்டை, கதிர்காமம் பகுதியில் படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாதோரினால் தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (சண்டே டைம்ஸ்)
- அக்டோபர் 11:
- மட்டக்களப்பில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (டெய்லிமிரர்)
- வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் மாவட்ட அமைப்பாளரான டி.எம்.தவச்செல்வம் என்பவர் அடையாளம் தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். (புதினம்)
- அக்டோபர் 10: மட்டக்களப்பு பாலையடிவெட்டை பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 9:
- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். (புதினம்)
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொறலஸ்கமுவ சந்தியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் உட்பட 6 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அக்டோபர் 7:
- செப்டம்பர் மாத காலப்பகுதியில் 200 படையினர் கொல்லப்பட்டு, 997 பேர் காயமடைந்திருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (தினக்குரல்)
- கிளிநொச்சி, திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் இடம்பெற்ற சமரில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- அக்டோபர் 6:
- இலங்கையின் வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இலங்கை தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 25 பேர் கொல்லப்பட்டு, 80 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- வன்னியில் புதுக்குடியிருப்புக்கும் புளியங்குளத்திற்குமிடையே ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (தினக்குரல்)
- அக்டோபர் 5: இலங்கை பிரச்சினையில் இந்திய நடுவண் அரசு தலையிட வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். (புதினம்)
- அக்டோபர் 3: இலங்கை வானூர்திகள் கிளிநொச்சி நகரில் நடத்திய குண்டுத்தாக்குதலில் தழிழீழ காவல்துறை நடுவப்பணியகம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக துணைப் பணிமனை, கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம், அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பன அழிக்கப்பட்டன. (புதினம்), (புதினம்)
- அக்டோபர் 2:
- கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை செயலகம், சமாதான செயலகம் என்பன இலங்கை வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டன. (புதினம்)
- ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும், இலங்கை அரசைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். (புதினம்)
- அக்டோபர் 1:
- கிளிநொச்சியில் இயங்கி வந்த உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது இலங்கை வான்படை குண்டுவீசி அழித்தது. (புதினம்)
- கிளிநொச்சி நகரில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். (புதினம்)
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்