உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எசு. பாசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். பாஸ்கர்
தர்மதுரையில் பாஸ்கர்
பிறப்புமுத்துப்பேட்டை சோமையா பாஸ்கர்
13 செப்டம்பர் 1957 (1957-09-13) (அகவை 67)
நாகப்பட்டினம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987– நடப்பு
வாழ்க்கைத்
துணை
சீலா
பிள்ளைகள்2

முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது பெற்றோர் சோமையா தேவர்–சத்யபாமா ஆவர். இவரது தந்தை முத்துப்பேட்டையில் பெரும் நிலக்கிழார் . இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா வட இந்திய திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு கிரிதரன் என்ற தம்பி ஒருவர் உள்ளார். 1987 ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]

இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால்அபரவலாக றியப்பட்டார். இவர் மொழி ி் தரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[3] இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

நடிகராக

[தொகு]
திரைப்படங்கள்
இவர் நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1987 திருமதி ஒரு வெகுமதி கிருஷ்ணனுடன் படிக்கும் கல்லூரி மாணவர்
மக்கள் என் பக்கம்
காவலன் அவன் கோவலன்
1989 அண்ணனுக்கு ஜே
1990 சேலம் விஷ்ணு பேராசிரியர்
வேடிக்கை என் வாடிக்கை
1991 ஞான பறவை
1992 காவல் கீதம் Purse snatcher
முதல் குரல்
2001 டும் டும் டும் மருத்துவர்
கோட்டை மாரியம்மன் போக்குவரத்துக் காவலர்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் சங்கரலிங்கம்
தமிழன் நடத்துநர் கணேசன்
இவன் மீனா குமாரியின் தந்தை
ஜங்சன் சிவலிங்கம்
யுனிவர்சிட்டி
முத்தம் மாயா
2003 மிலிட்டரி முத்து
அன்பே அன்பே இரம்யாவின் தந்தை
ஆஹா எத்தனை அழகு
இளசு புதுசு ரவுசு தீபக்கின் தந்தை
ரகசியமாய்
2004 எங்கள் அண்ணா மணி
மச்சி
அழகிய தீயே அண்ணாச்சி
கஜேந்திரா
போஸ் வெடிமுத்து
நெறஞ்ச மனசு நரியன்
அட்டகாசம் பாலியல் மருத்துவர்
2005 திருப்பாச்சி தரகர்
சுக்ரன் நகைச்சுவை காவல் ஆய்வாளர்
அமுதே டுடு
நீயே நிஜம் பாதுகாலர்
சின்னா
சிவகாசி 'வக்கீல்' வெங்கி
சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி அழகுசுந்தரம்
2006 இதயத்திருடன்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது மேலாளர்
திருப்பதி பி.ஏ. பிரம்மா
கேடி ரகுவின் தந்தை
இளவட்டம் ஆசிரியர்
தர்மபுரி சண்முகம்
வரலாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்
2007 வீராசாமி வழக்கறிஞர்
மொழி ஞானப்பிரகாசம்
சிவாஜி P.S to chief secretary
கிரீடம் காவலர்
இனிமே நாங்கதான் விச்சு
திருத்தம் புண்ணியகோடி
அழகிய தமிழ்மகன் பயிற்சியாளர்
மச்சக்காரன் காவல் அதிகாரி
2008 பழனி
பிரிவோம் சந்திப்போம் ஆறுமுகம்
சாது மிரண்டா - - -
அஞ்சாதே லோகநாதன்
வெள்ளித்திரை இராம் கோபால் சர்மா
சந்தோஷ் சுப்பிரமணியம் கோத்த பெருமாள் (சருக்கு மரம்)
அறை எண் 305ல் கடவுள் சொட்டைகருவாபையா குட்டி மாடசாமி
இயக்கம் முத்துகுட்டி
அழைப்பிதழ்
தசாவதாரம் பிராடுவே குமார்
சுட்ட பழம் குமாரசாமி
குசேலன் குப்புசாமியின் உதவியாளர்
தனம்
சரோஜா
தீயவன் வேலு
திண்டுக்கல் சாரதி கவிஞர் - - -
பஞ்சாமிர்தம் திருப்பதி
2009 காதல்னா சும்மா இல்லை
இன்னொருவன் வாலி
நாளை நமதே டிஜிபி புல்லையா
குரு என் ஆளு கோபால்
தோரணை தமிழரசனின் உதவியாளர்
மஞ்சள் வெயில்
மாசிலாமணி 'கோமா' இராமசாமி
சிரித்தால் ரசிப்பேன் பூபதி பாண்டியன்
ஈசா துரைசாமி
உன்னைப்போல் ஒருவன் பங்கசக்சா
சூரியன் சட்டக் கல்லூரி சாமா ஐயர்
2010 தமிழ் படம் நகுல்
தம்பிக்கு இந்ம ஊரு
வீரசேகரன்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆத்திரிகேசா
கொல கொலயா முந்திரிக்கா சந்தானம்
மதராசபட்டினம் வேங்கய்யப்பன்
இரண்டு முகம்
2011 காவலன் சக்கரன்
பயணம் இருமொழித் திரைப்படம்
தம்பிக்கோட்டை வளையப்பட்டி
எத்தன் சுவாமி
தெய்வத்திருமகள் மூர்த்தி
மார்கண்டேயன்
புலிவேசம் செந்தில்
வேலாயுதம் வைதேகியின் தந்தை
2012 ஒத்த வீடு
கொஞ்சும் மைனாக்களே
கிருஷ்ணவேணி பஞ்சாலை
தாண்டவம் தம்பி மாமா
திருத்தணி கண்ணாயிரம்
புதுமுகங்கள் தேவை
2013 சந்தமாமா கிருஷ்ணமூர்த்தி
கருப்பம்பட்டி டான் சுடான்லி
சூது கவ்வும் ஞானோதயம்
நாகராஜ சோழன் கோத்த பெருமாள்
தீக்குளிக்கும் பச்சைமரம்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பூச்சாண்டி
ரகளபுரம் வின்சென்ட்
சுட்ட கதை ஒட்டகம்
ஆல் இன் ஆல் அழகு ராஜா தில்லானா திவ்யநாதன்
2014 நேர் எதிர் நீராவி
நினைத்தது யாரோ சிறப்புத் தோற்றம்
நினைவில் நின்றவள்
காதல் சொல்ல ஆசை அஞ்சலியின் தந்தை
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
அரிமா நம்பி எஸ். ஐ. ஆறுமுகம்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
நீ நான் நிழல் தம்பியண்ணன்
குரு
மொசக்குட்டி மலயாளி
13 ஆம் பக்கம் பார்க்க
அழகிய பாண்டிபுரம் பாம்புக்குட்டி
வெள்ளக்கார துரை தஞ்சாவூர் மகாதேவன்
2015 இவனுக்கு தண்ணில கண்டம் பொன்வண்டு
வை ராஜா வை கார்த்திக்கின் மாமா
உத்தம வில்லன் சோக்கு செட்டியார்
இந்தியா பாகிஸ்தான் மருதமுத்து
36 வயதினிலே சுடீபன்
டிமான்ட்டி காலணி சாமிநாதன்
விந்தை தமிழாய்ந்த நல்லோன்
திகர் தீப்பொறி தங்கப்பன்
காவல் குணசேகரன்
மூணே மூணு வார்த்தை இராமன் இருமொழித் திரைப்படம்
பாபநாசம் சுளைமான் பாய்
ஆவி குமார் வெரி குட் சிவாசு
சவாலே சமாளி இளங்கோ
யட்சன்
அபூர்வ மகான்
உப்பு கருவாடு நெய்தல் ஜெயராமன்
தங்கமகன் பிரகாஷ் குமாரின் உதவியாளர்
2016 பெங்களூர் நாட்கள் கண்ணனின் தந்தை
சாகசம் சதானந்தம்
நையப்புடை சத்தியமூர்த்தி
நட்பதிகாரம் 79 மகாவின் தந்தை
நாரதன் பாஸ்கர்
உன்னோடு க மாசுட்டர்
க க க போ (எகிப்திய கடவுள்)
வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி சரவணனின் நண்பர்
தர்மதுரை பரமன்
காகிதக் கப்பல் இரணகுப்தா
மீன் குழம்பும் மண் பானையும் டான்
கடவுள் இருக்கான் குமாரு மைக்கேல் ஆசிர்வாதம்
கண்ணுல காச காட்டப்பா சின்னபையன்
மணல் கயிறு 2 சோதிடர்
2017 யாக்கை கதிரின் தந்தை
வைகை எக்ஸ்பிரஸ் கிங் கேசவன்
8 தோட்டாக்கள் கிருஷ்ணமூர்த்தி
பிருந்தாவனம் இலூயிசு
7 நாட்கள் பாஸ்கர்
மரகத நாணயம் பாண்டுரங்கன்
பீச்சாங்கை தமிழ்மகன்
சதுர அடி 3500 சான் பீட்டர்
பணம் பதினொன்னும் செய்யும் காளிமுத்து
இப்படை வெல்லும் எஸ். தில்லைராஜன்
குரு உச்சத்துல இருக்காரு உத்தமன்
இந்திரஜித் சலீம்
திருட்டுப்பயலே 2
12-12-1950 குமுதவள்ளியின் தந்தை
2018 நிமிர் சதா
கேணி
சில சமயங்களில் இராகவன்
செம போத ஆகாதே குஞ்சுண்ணி
தளரி மாரி
நோட்டா பாய்
காயங்குளம் கொச்சுண்ணி முதலாளி மலையாளத் திரைப்படம்
காற்றின் மொழி நீலகண்டன்
பட்டினப்பாக்கம் தீ தங்கவேல்
உத்தரவு மகாராஜா இரவியின் தந்தை
துப்பாக்கி முனை உய்யா
2019 திருமணம் அருணாசலம்
அக்னி தேவி மணிமாறன்
குப்பத்து ராஜா ஊர் நியாயம்
ஐயகோ வெங்கட்ராமன்
ஏ1 சரவணனின் தந்தை
கழுகு 2 மாரி
பக்ரீத் வெட்டேரி நரியன் விருந்தினர் தோற்றம்
2020 அசுவதம்மா மனோச்சின் தாத்தா தெலுங்குத் திரைப்படம்
ஓ மை கடவுளே அனுவின் தந்தை
குட்டி தேவதை
புத்தம் புது காலை தாத்தா
2021 மாறா உசுமான் பாய்
சுல்தான் வழக்கறிஞர்
வணக்கம்டா மாப்ள கவுன்சிலர் புண்ணியகோட்டி
மலேசியா டூ அம்னீசியா மன்னார்குடி நாராயணன்
இருவர் உள்ளம் கார்த்திக்கின் மாமா
பிரண்ட்ஷிப் வழக்கறிஞர் சாணக்கியன்
பேய் மாமா சபாபதி
ஜெய் பீம் வழக்கறிஞர் சங்கரன்
[[சபாபதி (2021 திரைப்படம்)|]சபாபதி] கணபதி
பிளான் பண்ணி பண்ணனும் கேப்டன் கந்தசாமி / வழுக்கை கந்தசாமி (விகேஎஸ்)
மதுரை மணிகுறவரன் மணியின் மாமா
2022 எதற்கும் துணிந்தவன் கருப்பையா
டாணாக்காரன் செல்லகண்ணு
பேட்டரி புகழின் தாத்தா
ஓகே ஓக ஜீவிதம் வண்டி ஓட்டுநர்
2023 கொடை ஞானம்
குற்றம் புரிந்தால் ஜீவாவின் மாமா
எறும்பு ஆறுமுகம்
லாக்டவுன் டையரி
ரெட் சேண்டல்வுட்
த ரோடு சுப்பிரமணி
பார்க்கிங் இளம்பரிதி
பாட்டி சொல்லைத் தட்டாதே சக்தியின் தந்தை
மதிமாறன் சுந்தரம்
2024 வடக்குப்பட்டி ராமசாமி முனுசாமி
வெப்பம் குளிர் மழை திரி ஐயா
பூமர் அங்கிள் சிறப்புத் தோற்றம்
டபுள் டக்கர் பிரம்மானந்தம்
ஒரு தவறு செய்தால் பரமேசுவரன்
ஒரு நொடி சேகரன்
அக்கரன் வீரபாண்டி
சாமானியன் மூக்கையா
போட் முத்தையா
ரகு தாத்தா ரகோத்தமன்
பிரதர் புயூனிக்சு புஷ்பராஜா
எமக்கு தோழில் ரொமான்ஸ் dagger அறிவிக்கப்படும் [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Talent bides its time". The Hindu. 13 November 2009. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/talent-bides-its-time/article3022151.ece. 
  2. Suganth, M.. "There's no spontaneity in acting; every actor needs to do homework". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Theres-no-spontaneity-in-acting-every-actor-needs-to-do-homework/articleshow/48508566.cms. 
  3. "The Hindu : Cinema Plus / Cinema : Talent bides its time". web.archive.org. 2009-12-03. Archived from the original on 2009-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-09-22.
  4. "Ashok Selvan's Emakku Thozhil Romance To Release On This Date!". Times Now (in ஆங்கிலம்). 2024-10-11. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._பாசுகர்&oldid=4178576" இலிருந்து மீள்விக்கப்பட்டது