வணக்கம்டா மாப்ள
வணக்கம்டா மாப்ள | |
---|---|
Official release poster | |
இயக்கம் | மு. இராசேசு |
கதை | மு. இராசேசு |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் அமிர்தா ஐயர் ஆனந்த் ராஜ் |
ஒளிப்பதிவு | சித்தார்த் ரங்கநாதன் |
படத்தொகுப்பு | ஆஷிஷ் ஜோசப் |
கலையகம் | சன் படங்கள் |
விநியோகம் | சன் நெக்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 16, 2021 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வணக்கம்டா மாப்ள (VanakkamDa Mappilei) என்பது 2021 ஆண்டு தமிழ் மொழியில் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். மு. இராசேசு எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், அமிர்தா ஐயர், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சன் நெக்ட்ஸ்|இது 16 ஏப்ரல் 2021 அன்று சன் நெக்ட்ஸ் வழியாக வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
தயாரிப்பு
[தொகு]கடவுள் இருக்கான் குமாரு (2016) படத்திற்குப் பிறகு இயக்குநர் மு. இராசேசு, ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் இணைந்த இரண்டாவது கூட்டணியாகும்.[1] நெட்டிசனால் உருவாக்கப்பட்ட பிரபலமான டிக்டாக் மீம்ஸை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்திற்கு 'வணக்கம்டா மாப்ள' என்று பெயரிடப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் வைரலானது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2021 இல் நிறைவடைந்தது.
ஒலிப்பதிவு
[தொகு]படத்திற்குப் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். "டாடா பை பை" என்ற முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை கானா வினோத் எழுதியுள்ளார்.[1]
விடுதலை
[தொகு]இந்தப் படம் சன் தொலைக்காட்சியில் 14 ஏப்ரல் 2021 அன்று தமிழ்ப் புத்தாண்டு அன்று நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று முதலில் திட்டமிடப்பட்டது.[3] இருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர்கள் பின்னர் வெளியீட்டு தேதியை மே 1, 2021, மே தினத்திற்கு தள்ளினர்.[4] பின்னர் இந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக 16 ஏப்ரல் 2021 அன்று சன் NXT வழியாக படம் நேரடியாக வெளியிடப்பட்டது.[5] இந்தத் திரைப்படம் 12 மே 2021 அன்று ரம்ஜானை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[6]
வரவேற்பு
[தொகு]படம் வெளியாகி எதிர்மறை விமர்சனத்தை எதிர் கொண்டது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "GV Prakash-Rajesh film titled Vanakkam Da Mappilei". சினிமா எக்ஸ்பிரஸ். 22 February 2021. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையும் 'வணக்கம்டா மாப்ள'". இந்து தமிழ் (நாளிதழ்). 22 February 2021. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Vanakkam da Mappilei' is the title of GV Prakash – Rajesh's next!". சிஃபி. 24 February 2021. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "'வணக்கம்டா மாப்ள' வெளியீட்டில் மாற்றம்". இந்து தமிழ் (நாளிதழ்). 13 April 2021. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "7 unmissable hot photos of Bigg Boss Tamil fame Reshma Pasupuleti". Zoom. 12 May 2021. Archived from the original on 24 August 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
- ↑ Choudhary, Aman (14 May 2021). "Vanakkam Da Mappilei World Television Premiere WTP On TV Check Channel Name, Date & Time". Social Telecast. Archived from the original on 24 August 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
- ↑ Mohan, Ashutosh (20 April 2021). "Vannakkamda Mappilei, On SunNXT, Is Another Misogynistic Rajesh Comedy That Works When It's Not Trying To Be Funny". அனுபமா சோப்ரா. Archived from the original on 25 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.
- ↑ Chandar, Bhuvanesh (16 April 2021). "Vanakkam Da Mappilei Movie Review: Uninspiring and problematic". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 30 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.