5-ஆம் நூற்றாண்டு
Appearance
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 4-ஆம் நூற்றாண்டு - 5-ஆம் நூற்றாண்டு - 6-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 400கள் 410கள் 420கள் 430கள் 440கள் 450கள் 460கள் 470கள் 480கள் 490கள் |
கிபி ஐந்தாம் நூற்றாண்டு (5ம் நூற்றாண்டு, 5th century AD) என்ற காலப்பகுதி கிபி 401 தொடக்கம் கிபி 499 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- 399 – 412 - பாசியான் என்ற சீன பௌத்தத் துறவி பௌத்த நூல்களைத் தேடி இந்தியப் பெருங்கடல் ஊடாக இலங்கை,மற்றும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
- கி. 401 - பௌத்த துறவியும் சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தவருமான குமாரஜீவா என்பவர் சீனாவின் சங்கான் (இன்றைய சியான்) நகரை அடைந்தார்.
- பெரிய பிரித்தானியாவை ரோமர்கள் கைவிட்டனர். மத்திய காலத்தின் ஆரம்பப் பகுதியாக இது கருதப்படுகிறது.
- கி. 430 - மாயா நகரின் பல பகுதிகளை (இன்றைய எல் சல்வடோர்) இலபாங்கோ என்ற எரிமலை அழித்தது.
- 440 இன் பின்னர் பிரித்தானியாவில் ஆங்கிலோ-சாக்சன் மக்கள் குடியேறினர்.
- பௌத்த மதம் பர்மா, மற்றும் இந்தோனேசியாவை அடைந்தது.
- ஆப்பிரிக்க மற்றும் இந்தோனேசியக் குடியேற��கள் மடகஸ்காரை அடைந்தனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- முதலாம் ஆரியபட்டா, இந்தியக் கணிதவியலர்
- திருமந்திரம் நூலை இயற்றிய திருமூலர்