1540கள்
Appearance
1540கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1540ஆம் ஆண்டு துவங்கி 1549-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1540
- சனவரி 6 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் கிளீவ்சின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் என்றியின் நான்காவது மனைவியாவார்.
- மே 17 - சேர் சா சூரி முகலாயப் பேரரசர் உமாயூனைத் தோற்கடித்து சூர் பேரரசைத் தோற்றுவித்தார்.
- சூலை 9 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி தனது நான்காவது மனைவியான கிளீவ்சின் ஆனை மணமுறிப்புச் செய்தார்.
- சூலை 28 - நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தாமசு குரோம்வெல் தூக்கிலிடப்பட்டார். இதே நாளில் என்றி கேத்தரின் ஹவார்டு என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் என்றியின் ஐந்தாவது மனைவியாவார்.
- செப்டம்பர் - ஜிப்ரால்ட்டர் அலி ஆமெட் என்பவனின் தலைமையில் கொளையிடப்பட்டது. நாட்டின் முக்கியமான தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு மொரோக்கோ கொண்டு செல்லப்பட்டனர்.[1]
- செப்டம்பர் 27 - திருத்தந்தை மூன்றாம் பவுல் இயேசு சபையை அங்கீகரித்தார்.
- ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி பரவி 7 மாதங்கள் வரை நீடித்தது. ரைன் ஆறு, செய்ன் ஆறு என்பவை வறண்டு போயின. இரத்தக்கழிசல், மற்றும் தொற்று நோயினால் பலர் உயிரிழந்தனர்.[2]
1541
- பெப்ரவரி 12 - சான் டியேகோ (சிலி) நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீசிய கிழக்கிந்தியாவுக்கு தனது பயணத்தை லிசுபனில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 8 - எசுப்பானியர் எர்னாண்டோ டி சோட்டோ தாம் கண்ட ஆற்றுக்கு மிசிசிப்பி ஆறு எனப் பெயரிட்டார்,
- மே 23 - இழ்சாக் கார்ட்டியே தனது மூன்றாவது பயணத்தை பிரான்சில் இருந்து ஆரம்பித்தார்.
- சூன் 18 - அயர்லாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியையும் அவரது வாரிசுகளையும் அயர்லாந்தின் அரசர்களாக அங்கீகரித்தது.[3]
- உதுமானியப் பேரரசர் முதலாம் சுலைமான் எருசலேமின் தங்க வாயிலை மூடினார்.
- ஐசுலாந்து லூதரனியத்தை ஏற்றுக் கொண்டது.
- கஜபதி பேரரசு முடிவுக்கு வந்தது.
1542
- பெப்ரவரி 2 - கிறித்தொவாடோ ட காமா தலைமையிலான போர்த்துக்கீசப் படைகள் முசுலிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினர்.
- பெப்ரவரி 13 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஐந்தாவது மனைவி கத்தரீன் ஹவார்ட் முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- பிரான்சிஸ் சவேரியார் கோவாவை வந்தடைந்தார்.
- சூலை 12 - புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு பிரான்சின் முதலாம் பிரான்சிசு மீது போரை அறிவித்தார். இம்முறை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி சார்லசுவுடன் கூட்டுச் சேர்ந்தான். இசுக்கொட்லாந்தின் ஐந்தாம் யேம்சு, முதலாம் சுலைமான் ஆகியோர் பிரான்சுக்கு ஆதரவாக இணைந்தனர்.
- ஆகத்து 24 - ஆடன் ரிக் என்ற இடத்தில் நடந்த சமரில் இசுக்கொட்லாந்து இங்கிலாந்தைத் தோற்கடித்தது.
- டிசம்பர் 14 - தந்தை ஐந்தாம் யேம்சு இறந்ததை அடுத்து, அவரது ஒரு மாதக் குழந்தை ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசியானாள்.
- சப்பானுடனான மேற்குலகின் முதலாவது ஏற்பட்டது. சீனா நோக்கிச் சென்ற போர்த்துக்கீசக் கப்பல் வழிதவறி சப்பானை வந்தடைந்தது.
1543
- பெப்ரவரி 11 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பிரான்சிற்கு எதிராக புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசுவுடன் சேர்ந்தான்.[4]
- பெப்ரவரி 21 - எத்தியோப்பிய-போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் வாய்னா டாகா நகரில் 14,000 படைகளைக் கொண்ட அகமது இப்னு இப்ராகிம் அல்-காசி சுல்தானின் படைகளைத் தோற்கடித்தனர்.
- மார்ச் - இங்கிலாந்து நாடாளுமன்றம் வேல்சில் கவுண்டிகளை அமைத்து வேல்சுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சீரமைத்தது.[4]
- மே - நியூரம்பெர்க்கில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமைய அண்டம் குறித்த தனது புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். கோப்பர்னிக்கசு மே 24 அன்று தனது 70வது அகவையில் காலமா���ார்.
- சூன் - அன்Dறியாசு வெசாலியசு மனித உடற்கூற்றியல் தொடர்பான புகழ்பெற்ற நூலை வெளியிட்டார்.
- சூலை 12 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி கேத்தரின் பார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இது அவரது ஆறாவதும் கடைசியுமான திருமணமாகும். திருமண நிகழ்வில் முதலாம் எலிசபெத் கலந்து கொண்டார்.
- சூலை - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மகள்மாரான முதலாம் மேரி, எலிசபெத் ஆகியோரை இங்கிலாந்தின் அரச வாரிசுகளாக அந்நாட்டு நீதிமன்ரம் அறிவித்தது.
- சப்பானில் கரையொதுங்கிய போர்த்துக்கீசக் கப்பலில் இருந்து முதலாவது சுடுகலன்களைப் பெற்றனர்.
- எசுப்பானியப் பேரரசில் உள்ள பழங்குடி இந்தியர்கள் விடுதலை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- பராக்கிரம குலசேக பாண்டியனின் ஆட்சி ஆரம்பம்.
1544
- மே - புனித உரோமைப் பேரரசுப் படைகள் ஐந்தாம் சார்ல்சு தலைமையில் கிழக்கு பிரான்சை மீண்டும் தாக்கின.
- மே 3 - இங்கிலாந்து இராணுவம் இசுக்கொட்லாந்திடம் இருந்து லீத், எடின்பரோ நகரங்களைக் கைப்பற்றியது.
- சூலை 19-செப்டம்பர் 14 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி வடக்கு பிரான்சின் போலோன் நகரைக் கைப்பற்றினார்.
- போர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் சீனக் குடியரசுத் தீவைக் கண்டு அதனை அழகான தீவு என அழைத்தனர்.
- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி: இலங்கையில் மன்னாரில் புனித பிரான்சிசு சவேரியரினால் அனுப்பப்பட்ட மதப்பரப்புனர்களால் முதற் தடவையாக ரோமன் கத்தோலிக்கம் அறவுரைக்கப்பட்டது. கத்தோலிக்கத்துக்கு மதம் மாறிய 600 இற்கும் அதிகமானோர் யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியால் கொல்லப்பட்டனர்.[5]
- யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியின் மகன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினான். இவன் படுகொலை செய்யப்பட்டான். இரண்டாம் மகன் கோவாவிற்குத் தப்பிச் சென்றான்.[5]
- யாழ்ப்பாண மன்னன் போர்த்துக்கீசருக்கு ஆண்டுதோறும் திறை வழங்க ஒப்புக் கொண்டான்.[5]
1545
- பெப்ரவரி 27 - ஆங்கிரம் மூர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இசுக்கொட்லாந்து படைகள் இங்கிலாந்தை வென்றன.[4]
- சூன் 13 - எசுப்பானியர் ஓட்ரிசு டெ ரெட்டெசு நியூ கினியின் வடக்குக் கரை நோக்கிச் சென்றார்.
- சூலை 19 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
- வெள்ளி பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தியாவில் டாம் நாணயம் அறிமுகமானது.
1546
- ஏப்ரல் 20 – போர்த்துக்கீச இந்திய நகரமான தியூ மீது குசராத்து சுல்தான்களின் இரண்டாவது படையெடுப்பு ஆரம்பமானது. போர்த்துக்கீசர்களின் வெற்றியுடன் நவம்பர் 10 இல் முடிவுக்கு வந்தது.
- சூன் 7 – இங்கிலாந்துக்கும் பிரான்சிற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இத்தாலியப் போர் (1542–1546) முடிவுக்கு வந்தது.[6]
- டிசம்பர் – திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தொடங்கப்பட்டது.[4]
- மைக்கலாஞ்சலோ உரோம் நகரின் புனித பேதுரு தேவாலயத்தின் பிரதம கட்டடக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மறைஞான சம்பந்தர் கமலாலய புராணத்தை எழுதினார்.
- என்றீக்கே என்றீக்கசு இந்தியா வந்தார்.
1547
- ஜனவரி 16 – நான்காம் இவான் உருசியாவின் முதலாவது சார் மன்னனாக முடிசூடினான்.
- ஜனவரி 28 – இங்கிலாந்தின் மன்னனாக ஆறாம் எட்வர்டு தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- பெப்ரவரி 20 – ஆறாம் எட்வர்டின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடைபெற்றது.
- மார்ச் 31 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- ஏப்ரல் 4 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி கேத்தரின் பார் இரகசியமாக தோமசு சீமோரைத் திருமணம் புரிந்தார்.
- ஆகஸ்டு 13 – பிரிட்டனி மாநிலம் பிரான்சுடன் இணைந்தது.
1548
- ஏப்ரல் 1 – போலந்து, லித்துவேனியாவின் மன்னனாக சிஜிசுமண்டு இரண்டாம் ஆகுஸ்தசு முடிசூடினான்.
- சூலை 7 – 5 அகவை கொண்ட ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, பிற்காலத்தின் பிரான்சின் இரண்ட்ஃபாம் பிரான்சிசுக்கு மணவுறுதி செய்யும் ஒப்பந்தம் இசுக்கொட்லாந்துக்கும் பிரான்சிற்கும் இடையில் கையெழுத்தானது.
- அக்டோபர் 20 – பொலிவியாவின் லா பாஸ் மாநகரம் உருவானது.
- டிசம்பர் – சியாம் தவோய் மீது தாக்குதலை நடத்தியது. பர்மிய-சியாம் போர் (1548–49) ஆரம்பமானது.
- புனிதர் பிரான்சிசு சேவியர் மன்னார் வந்து சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று அரசனைச் சந்தித்தார். காலி, கண்டி மற்றும் பல இடங்களுக்கும் சென்றார்.[7]
- திருக்குருகை மான்மியம் அரங்கேறியது.
1549
- சனவரி – பர்மிய மன்னர் தபின்சுவெட்டி சியாம் மீது தாக்குதலைத் தொடுத்தார்.
- பெப்ரவரி 3 – பர்மா-சியாம் போர்: பர்மியத் தளபதி தாடோ தம்ம யாசா அயூத்திய அரசி சிறீ சூரியோதையைக் கொன்றான்.
- மார்ச் 29 – பிரேசிலின் முதலாவது தலைநகர் சவ்வாதோர் உருவாக்கப்பட்டது.
- ஜூலை 27 – பிரான்சிஸ் சவேரியார் சப்பானைச் சென்றடைந்தார்.
- ஆகத்து 8–9 – இங்கிலாந்தும் பிரான்சும் போரை அறிவித்தன.[4]
- பீட்டர் கனிசியு பவேரியா]]வில் கத்தோலிக்க மறுமலர்ச்சியைத் துவக்கினார்.
- இங்கிலாந்தின் லிங்கன் பேராலயத்தின் தூபி உடைந்து வீழ்ந்தது.[8]
பிறப்புகள்
[தொகு]1540
- மே 9 - மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (இ. 1597)
- பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய கப்பல் தலைவர், அரசியல்வாதி, கொள்ளைக்காரன் (இ. 1596)
- மதுசூதன சரஸ்வதி, இந்திய அத்வைத மரபில் வந்த வேதாந்த தத்துவாதி (இ. 1640)
1542
- சூன் 24 - சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591)
- அக்டோபர் 1 - மரியம் உசு-சமானி, முகலாயப் பேரரசி (இ. 1623)
- அக்டோபர் 4 - ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)
- அக்டோபர் 15 - அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605)
- டிசம்பர் 8 - ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)
1544
- ஜனவரி 19 - பிரான்சின் இரண்டாம் பிரான்சிசு (இ. 1560)
- ஏப்ரல் 4 - உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500)
1546
- டிசம்பர் 14 – டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர் (இ. 1601)
1547
- செப்டம்பர் 29 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1616)
1548
- கியோர்டானோ புரூணோ, இத்தாலிய வானியலாளர், மெய்யியலாளர் (இ. 1600)
இறப்புகள்
[தொகு]1541
- சூன் 26 - பிரான்சிஸ்கோ பிசாரோ, எசுப்பானிய வெற்றியாளர் (பி. 1475)
1542
- அச்சுத தேவ ராயன், விஜயநகரப் பேரரசன் (பி. 1529)
- கேத்தரின் ஹோவார்டு, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஐந்தாவது மனைவி, இங்கிலாந்து அரசி (பி. 1523)
1543
- மே 24 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)
1544
- நீலகண்ட சோமயாஜி, இந்தியக் கணிதவியலர் (பி. 1444)
1545
- மே 22 - சேர் சா சூரி, இந்தியப் பேரரசர் (பி. 1486)
- நீலகண்ட சோமயாஜி, கேரள அறிஞர் (பி. 1444)
1546
- பெப்ரவரி 18 – மார்ட்டின் லூதர், செருமனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)
1547
- சனவரி 28 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)
- டிசம்பர் 2 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய நாடுபிடிப்பாளர் (பி. 1485)
- மீராபாய், ராஜ்புத்ர இளவரசி (பி. 1498)
1549
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Drinkwater, John (1786). A history of the late siege of Gibraltar: With a description and account of that garrison, from the earliest periods. Printed by T. Spilsbury. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2012-10-27.
- ↑ "Weather chronicler relates of medieval disasters". goDutch.com. 2003-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ Moody, T. W.; et al., eds. (1989). A New History of Ireland. 8: A Chronology of Irish History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-821744-2.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 147–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ 5.0 5.1 5.2 மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 215–218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
- ↑ "Lincoln Cathedral History". Lincoln Cathedral. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.