வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை
வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை (Westminster system) ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையாகும். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அவைகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து செயல்படுவதால் இந்தப் பெயர் வரலாயிற்று.
இந்த முறைமை சட்ட மன்றங்கள் செயல்படத் தேவையான செயல்முறைத் தொகுப்புகளை கொண்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மற்றும் தன்னாட்சி வழங்கப்பட்ட முன்னாள் பொதுநலவாய நாடுகளில் உள்ள தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களில் இந்த முறைமை பயன்படுத்தப்படுகிறது (அல்லது முதலில் பயன்படுத்தப்பட்டது). முதன்முதலாக கனடிய மாநிலங்களில் 1848ஆம் ஆண்டிலும் ஆத்திரேலியாவின் ஆறு குடியேற்றப் பகுதிகளில் 1855இலிருந்து 1890 வரையிலான காலகட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டன.
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு முற்றிலும் வேறுபட்ட பிற நாடாளுமன்ற முறைமைகளும் புழங்குகின்றன.
முகனையான சிறப்பியல்புகள்
[தொகு]வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் முகனையான சிறப்பியல்புகளாக பின்வருவன பட்டியலிடப்பட்டுள்ளன; இவை அனைத்துமே வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அடித்தளமாகக் கொண்ட அனைத்து அரசியலமைப்புகளிலும் முழுமையாக பின்ப்பற்றுவதாகக் கொள்ள முடியாது.
- பெயரளவில் அல்லது சட்டப்படி செயலதிகாரத்தை அரசியலமைப்பின்படி கொண்டவரும் மேலும் பல ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்டவருமான நாட்டுத் தலைவரைக் கொண்டிருத்தல். இவரது தினப்படியான பணிகள் சடங்குசார் செயல்பாடுகளை நிகழ்த்துவதாக இருக்கும். காட்டாக, இங்கிலாந்து அரசி எலிசபெத் II, தன்னாட்சி பெற்ற பொதுநலவாய நாடுகளின் கவர்னர் ஜெனரல்கள், மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகும்.
- பொதுவாக பிரதமர் (PM), முதல்வர் அல்லது தலைமை அமைச்சர் என அழைக்கப்படும் அரசுத் தலைவர் (அல்லது செயல் தலைவர்). அரசுத் தலைவரை நாட்டுத் தலைவர் பணியில் அமர்த்தினாலும் அரசியலமைப்பு மரபின்படி பணியில் அமர்த்தப்படுபவர் நாடாளுமன்றதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் ஆதரவை பெற்றவராக இருத்தல் வேண்டும்.[1]
- அரசுத்தலைவர் தலைமையின் கீழ் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையாலான நிகழ்நிலைப்படியான செயலாட்சிப் பிரிவு. இந்த அமைச்சர்கள் செயலதிகாரத்தை பெயரளவிலான அல்லது கருதுகோள் அளவிலான செயலதிகாரி சார்பாக செலுத்துகின்றனர்.
- சட்டமன்ற எதிர்கட்சி (பல கட்சி அமைப்பு);
- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்க அவை, பெரும்பாலும் ஒரு அவையேனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரவை அல்லது ஓரங்க அவை. இந்தத் தேர்தல்களில் தொகுதியில் முதலாவதாக வந்தவர் (விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு எதிர்) வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு விலக்காக நியூசிலாந்து (இங்கு 1993 முதல் கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவம் பின்பற்றப்படுகிறது) இசுரேல் (நாடாளாவிய விகிதாச்சார பிரதிநிதித்துவம்), ஆத்திரேலியா (விருப்பத்தேர்வு முறைமை) உள்ளன.
- நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைக்கு , (நிதிநிலை அறிக்கையை மறுத்து) வழங்கலை நிறுத்தி (அல்லது தடுத்தும்) அல்லது நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றியும் அல்லது அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்தும் அரசை நீக்க இயலும். வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அரசு தோற்கடிக்கப்படவும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவும் இயலும்.
- நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படவும் தேர்தல்கள் நடத்தப்படவும் கூடும்.
- சட்டவாக்க அவையில் எந்த விதயத்தையும் குறித்தும், அவதூறு அறிக்கை அல்லது பேச்சுக்களின் தாக்கம் குறித்த அச்சமின்றி, உரையாடக்கூடிய சட்டமன்ற உரிமை.
- அன்சர்த் எனப்படும் அவை நடைவடிக்கைக் குறிப்புகள் மற்றும் இவற்றிலிருந்து சில குறிப்புக்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம்.
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் பலக் கூறுகளும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுபன்றத்தின் மரபுவழிகள், செயல்பாடுகள் மற்றும் முன்காட்டுகளைக் கொண்டு அமைந்தவை. ஐக்கிய இராச்சியத்தின் அரசியலப்பை முறையாக பதியப்படாவிடினும் இந்த முறைமையைப் பயன்படுத்தும் பல நாடுகளும் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இதனை பதிவாக்கி உள்ளன.
தற்போதைய நாடுகள்
[தொகு]வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை சில மாற்றங்களுடன் பின்பற்றும் நாடுகளாவன:
- அன்டிகுவா பர்புடா
- ஆத்திரேலியா
- பகாமாசு
- பெர்முடா
- வங்காளதேசம்
- பார்படோசு
- பெலீசு
- கனடா
- டொமினிக்கா
- கிரெனடா
- இந்தியா
- ஈராக்
- அயர்லாந்து
- இஸ்ரேல்
- யமேக்கா
- மலேசியா
- மால்டா
- மொரிசியசு
- நவுரு
- நியூசிலாந்து
- பாக்கித்தான்
- பப்புவா நியூகினியா
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- சிங்கப்பூர்
- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
- சாலமன் தீவுகள்
- தாய்லாந்து
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்
- வனுவாட்டு
பின்பற்றிய முந்தைய நாடுகள்
[தொகு]- 1910 முதல் 1961 வரையிலான தென்னாபிரிக்க ஒன்றியம் மற்றும் 1961 முதல் 1984 வரையிலான இனவொதுக்கல் கால தென்னாபிரிக்கக் குடியரசு பின்பற்றின; 1983ஆம் ஆண்டில் நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை மாற்றியது.
- 1907 முதல் 1934 வரையிலான நியூ பவுண்ட்லாந்து டொமினியன் தன்னாட்சியைத் துறந்து ஐக்கிய இராச்சிய ஆட்சியை ஏற்றபோது.
- 1965 முதல் 1979 வரையிலான ரொடீசியாவும் பின்னர் வந்த 1980 முதல் 1987 வரையிலான சிம்பாப்வே அரசும் பின்பற்றின; 1987ஆம் ஆண்டு நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் இதனை கைவிட்டது.
- நைஜீரியா பிரித்தானிய அரசாட்சியிலிருந்து 1960இல் விடுதலை பெற்றபின்னர் உடனடியாக கவர்னர் ஜெனரல் தலைமையில் பின்பற்றியது;1963ஆம் ஆண்டுமுதல் குடியரசானபோது அரசியலைப்புச் சட்டத்தில் இம்முறையைத் தவிர்த்தது
- 1948 முதல் 1972 வரையிலான சிலோன் அரசும் 1972 முதல் 1978 வரையிலான சிறீலங்கா அரசும் இதனைப் பின்பற்றியிருந்தன. 1978ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரை அடித்தளமாகக் கொண்ட முறைமைக்கு மாறியது.
- 1948ஆம் ஆண்டு விடுதலையானபிறகு பர்மா 1962ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஆட்சியை மேற்கொள்ளும்வரை பின்பற்றியது.
- 1970 முதல் 1987 வரை பிஜியில்.
- கயானா வில் 1966 முதல் 1970 வரை. குடியரசுத் தலைவர் முறை 1980இல் நிறுவப் பட்டது.
- கென்யாவில் 1963 முதல் 1964 வரை.
- நேபாளத்தில் ஏப்ரல் 10, 2008 இல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு
நூற்தொகுப்பு
[தொகு]- The English Constitution, Walter Bagehot, 1876. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46535-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-46942-2.
- British Cabinet Government, Simon James, Pub Routledge, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-17977-7.
- Prime Minister & Cabinet Government, Neil MacNaughton, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-74759-5.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- The Twilight of Westminster? Electoral Reform & its Consequences, Pippa Norris, 2000.