ரந்தம்பூர் கோட்டை
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
ரந்தம்பூர் கோட்டை | |
இடம் | சவாய் மாதோபூர் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
வகை | பண்பாட்டுக் களம் |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 247 |
UNESCO region | தெற்காசியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2013 (36th தொடர்) |
ரந்தம்பூர் கோட்டை (Ranthambore Fort) இந்திய மாநிலமான இராஜஸ்தானில் சவாய் மாதோபூர் நகரத்திற்கு அருகே அமைந்த ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் பரப்பில் அமைந்துள்ளது.
சௌகான் வம்ச ராஜபுத்திர மன்னரான ஹம்மிரதேவன் (1283-1301) ஆட்சிக் காலத்தில் ரந்தம்பூர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.
ரந்தம்பூர் கோட்டையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]ரந்தம்பூர் கோட்டை சௌகான் வம்ச ராஜபுத்திர ஆட்சியாளர்களால் கிபி 994-இல் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.
சௌகான் ஆட்சியாளர்கள் காலம்
[தொகு]ரந்தம்பூர் கோட்டையின் முந்தைய பெயர் ராணாஸ்தம்பம் அல்லது ராணாஸ்தம்பபுரம் ஆகும்.
இக்கோட்டை முதலாம் பிரிதிவிராஜ் ஆட்சிக் காலத்தில் (1090-1110) சமண சமயத்துடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தசேனசூரி என்பவரால், சமண சமய தீர்த்தங்கரர்களின் புனித தலங்களில் பட்டியலில் ரந்தம்பூர் கோட்டையும், அரண்மனையும் சேர்க்கப்பட்டது. முகலாயர்கள் காலத்தில் 19வது தீர்த்தங்கரரான மல்லிநாதரின் கோயில், ரந்தம்பூர் கோட்டையில் கட்டப்பட்டது.[3]
1192-இல் கோரி முகமது மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானைத் தோற்கடித்து ரந்தம்பூர் கோட்டையைக் கைப்பற்றினான். பிரிதிவிராஜ் சௌகானின் மகன் நான்காம் கோவிந்தராஜன் கோரி முகமதுவிற்கு கப்பம் செலுத்தி ரந்தம்பூரை ஆண்டார். [4]
தில்லி சுல்தான் இல்டுமிஷ் 1226-இல் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றினார். சௌகான் வம்சத்தவர்கள் 1236-இல் சௌகான் தில்லி சுல்தானிடமிருந்த ரந்தம்பூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1299-இல் அலாவுதீன் கில்சிக்கு துரோகம் செய்த முகமது ஷா என்பவருக்கு ரந்தம்பூர் மகாராஜா ஹமீர் தேவ் சௌகான் அடைக்கலம் தந்தார். இதனால் வெகுண்ட தில்லி சுல்தான் கில்ஜி 1301-இல் நேரடியாகத் தலையிட்டு ரந்தம்பூர் கோட்டையைப் போரில் வென்றார்.
உதய்பூர் இராச்சியத்தில்
[தொகு]உதய்பூர் இராச்சியத்தின் மன்னர் ராணா ஹமீர் சிங் (1326–1364) மற்றும் ராணா கும்பா (1433–1468) ஆட்சிக்காலங்களில் ரந்தம்பூர் கோட்டை கைப்பற்றினர்.[5][6]முதலாம் உதய் சிங் ஆட்சிக் காலத்தில் (1468–1473) பூந்தி இராசபுத்திர ஹர சௌகான் கையில் சென்றது.
1569-இல் அக்பர் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றும் வரை குஜராத் சுல்தான் பகதூர் ஷாவிடம் 1532 முதல் 1535 முடிய இருந்தது.
17-ஆம் நூற்றாண்டில் ரந்தம்பூர் கோட்டை ஜெய்ப்பூர் மகாராஜாவிடம் சென்றது. ஜெய்ப்பூர் மன்னர்கள் ரந்தம்பூர் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளை விலங்குகளை வேட்டைக்களமாகக் கொண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் ஜெய்ப்பூர் இராச்சியத்தில் இருந்த இரந்தம்பூர் கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1950-இல் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
ரந்தம்பூர் கோட்டைக்குள் பிள்ளையார், சிவன் மற்றும் இராமர் கோயில்களும், சமண சமயத்தின் மூன்றவது தீர்த்தங்கரர் சம்பவநாதர் கோயிலும், ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதர் கோயிலும் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hill Forts of Rajasthan
- ↑ Six Rajasthan hill forts on Unesco list
- ↑ Singh, Narendra (1 January 2001). Encyclopaedia of Jainism. Vol. 1. Anmol Publications / Indo-European Jain Research Foundation. p. 5538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-0691-2. Archived from the original on 12 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2017.
{{cite book}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- ↑ IA, Vol. XLII, pp. 57-64
- ↑ Yasovarman of Kanau,p.123. Books.google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.
- An introduction to Ranthambore by Trip N Eat பரணிடப்பட்டது 2013-12-30 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: ரந்தம்பூர் கோட்டை