யூத எதிர்ப்புக் கொள்கை
யூத எதிர்ப்புக் கொள்கை (Antisemitism) என்பது யூதர்கள் மீது சந்தேகம் கொள்ளுதல், வெறுப்புக் காட்டுதல், புறக்கணித்தல், இனப்படுகொலை செய்தல்[1] போன்ற செயற்பாடுகளாகும். 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க அறிக்கை, யூதவைரி என்பது யூதர் மீதான வெறுப்பு, தனியாகவும் குழுவாகவும், யூதர்களின் மதம் மற்றும்/அல்லது இனம் சார்ந்து வெளிப்படுதல் எனக் குறிப்பிடுகிறது.[2] இவ்வாறான கொள்கையைக் கொண்டிருப்பவர் யூதவைரி எனப்படுவர்.
யூத எதிர்ப்புக் கொள்கை பல வழிகளிலும் வெளிப்படும். யூதர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுதல், வெறுப்பு போன்ற முறைகளில் குழு, அரச க���வற்றுறை மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் இது வெளிப்படுடலாம். 1096இல் முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து யூதர்கள் வெளியேற்றம், 1391 இல் எசுபானியாவில் யூதப் படுகொலை, எசுபானிய விசாரணை தண்டனை, 1492இல் எசுபானியாவிலிருந்து வெளியேற்றம் 1497 இல் போர்த்துக்கல்லிலிருந்து வெளியேற்றம், உரசிய படுகொலைகள், பிரெஞ்சு அவதூறு, நாட்சி ஜெர்மனியின் இறுதித் தீர்வு உரசியாவின் யூத எதிர்ப்புக் கொள்கை ஆகிய துன்புறுத்தல்கள் உச்ச எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
யூத எதிர்ப்புக் கொள்கை என்பது சொற்பிறப்பியலின் படி செமிட்டிக் இனத்தவருக்கு எதிரானது எனும் பொருளைக் கொண்டுள்ளது. இது 19ம் நூற்றாண்டின் இறுதியில் செருமனியில் உருவாகியது. "யூத வெறுப்பு" எனும் அடிப்படையிலான இப்பதம் அன்றிலிருந்த இன்றும் சாதாரணமாகப் பாவிக்கப்படுகின்றது.[3][4]
இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நாஜி ஜெர்மனியின் யூத எதிர்ப்புக் கொள்கை
[தொகு]இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஜெர்மனியில் யூத எதிர்ப்புக் கொள்கை என்ற சித்தாந்தத்துடன் இட்லர் தலைமையிலான நாஜி கட்சி ஆட்சிக்கு வந்தது. . நாஜி ஜெர்மனியின் ஆரிய இனக் கோட்பாட்டின்படி, 1933 மற்றும் 1939ஆம் ஆண்டிற்கும் இடையிலான காலகட்டத்தில் யூத எதிர்ப்புக் கொள்கையின் முக்கிய நோக்கம், ஜெர்மன் சமூகத்திலிருந்து.ஜெர்மனி யூதர்களை தனிமைப்படுத்தவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற யூத எதிர்ப்பு சட்டங்கள் சட்டங்கள் உதவியது. 1933 மற்றும் 1938 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 யூதர்கள் நாஜி ஜெர்மனியை விட்டு வெளியேறினர் இது மொத்த யூத மக்கள்தொகையில் தோராயமாக 30% ஆகும்.. யூதர்கள் ஜெர்மனியிலிருந்து சட்டப்பூர்வமாக வேறு நாடுகளுக்கு வெளியேற, ஜெர்மன் கடவுச் சீட்டு மற்றும் விசா இரண்டையும் வைத்திருக்க வேண்டியிருந்தது. மிகச் சில நாடுகளே ஜெர்மன்-யூத அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியது. மேலும் கிறிஸ்டல்நாக்ட் படுகொலைக்குப் பிறகு , யூதர்கள் ஜெர்மனியை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாகிவிட்டது. [5][6]
நாஜி ஜெர்மனியின் யூத எதிர்ப்புக் கொள்கையின் காலகட்டங்கள்
[தொகு]யூத எதிர்ப்புக் கொள்கை (1933–1939) மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டது • முதல் காலகட்டமான 1933-1934களில் யூதர்களுக்கு எதிரான புறக்கணிப்புகளையும், யூதர்களை அரசாங்க வேலைகளில் இருந்து நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. • இரண்டாவது காலகட்டமான, 1935ஆம் ஆண்டில் இயற்றிய நியூரம்பெர்க் சட்டத்தின்படி. யூதர்களின் ஜெர்மானிய குடியுரிமை பறிக்கப்பட்டது. . • 1937–1939 வரையிலான மூன்றாவது காலகட்டத்தில், யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்து. யூத சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் யூத வணிக நிறுவன உரிமைகளை தடை செய்தல் ஆகியவற்றின் காலமாகும். இந்தக் காலகட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா யூதர்களை படுகொலை செய்தல் ஆகும்.[7]
ஆண்டு வாரியாக நாஜி ஜெர்மனியின் யூத எதிர்ப்புக் கொள்கை
[தொகு]- 1933:
• "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள் அனைவரும் அரசாங்கப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விதிமுறை பொதுப் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் போன்றோருக்குப் பொருந்தும் - எந்த வகையான அரசாங்கப் பதவிகளையும் வகித்த அனைத்து யூதர்களுக்கும் பொருந்தும். • யூதர்களுக்குச் சொந்தமான அனைத்து வணிகங்களையும் பொதுப் புறக்கணிப்பு செய்யும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. • ரீச் கலாச்சார சபையில் உறுப்பினர் சேர்க்கை தடைசெய்யப்பட்டது[8].இதனால் யூதர்கள் வானொலி, திரையரங்குகளில் வேலை செய்யவோ அல்லது கண்காட்சிகளில் ஓவியங்கள் அல்லது சிற்பங்களை விற்கவோ முடியாது. • யூதர்கள் மற்றும் நாஜி எதிர்ப்பாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டது. யூதர்கள் நிலம் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டது. • யூத வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கள் பணிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். யூத மருத்துவர்கள் "ஆரிய" நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து தடை செய்யப்பட்டனர்.. • யூதர்கள் மாடு, செம்மறி ஆடு, ஆடு, அடாக்ஸ், மான், காட்டெருமை, ஐபெக்ஸ்.போன்ற கோஷர் இறைச்சியை தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.
- 1935:
• யூதர்கள் இனி ஜெர்மனியின் குடிமக்களாக இருக்க முடியாது என்று அறிவித்த நியூரம்பெர்க் சட்டங்களை. நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. • யூதர்களுக்கும் "ஆரிய" இரத்தத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையிலான திருமணம் மற்றும் நெருங்கிய உறவுகள் குற்றச் செயல்களாக அறிவிக்கப்பட்டது. • 45 வயதுக்குட்பட்ட ஜெர்மன் பெண்கள் யூதர்களால் பணியமர்த்தப்படுவது தடைசெய்யப்பட்டது. • யூதர்கள் ரீச்சின் கொடியை அசைக்கவோ அல்லது கொடியின் வண்ணங்களைக் காட்டவோ தடைசெய்யப்பட்டனர்.
- 1936:
• பெர்லினில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டு பார்வையாளர்களின் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, யூதர்களுக்கு எதிரான யூத எதிர்ப்பு பிரச்சாரங்களையும், பிற நடவடிக்கைகளையும், இட்லர் தற்காலிகமாக தளர்த்தினார்.
- 1937:
• "ஆரியமயமாக்கல்", ஜெர்மனியில் யூத வணிகங்கள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தது.
- 1938:
• யூதராக இருப்பது வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கு ஒரு காரணம் என்று ஜெர்மனி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. • யூதர்களுக்கு எதிரான நியூரம்பெர்க் சட்டங்கள். ஆஸ்திரியாவுக்கும் நீட்டிக்கப்பட்டது. • அனைத்து யூதர்களும் தங்கள் அடையாள ஆவணங்களில் "இஸ்ரேல்" மற்றும் "சாரா" என்ற பெயர்களைச் சேர்க்க வேண்டியிருந்தது, மேலும் [[கடவுச் சீட்டு|களில் யூதா (யூதர்) என்பதற்கு சிவப்பு எழுத்தான J குறிக்கப்பட்டது. • யூதர்கள் இனி நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ, தொலைபேசிகளை வைத்திருக்கவோ, ஓட்டுநர் உரிமங்கள், பதிவு வாகனங்கள் போன்றவற்றை வைத்திருக்கவோ முடியாது. • கிறிஸ்டல்நாக்ட் படுகொலை (உடைந்த கண்ணாடி இரவு): போது தோராயமாக 1,400 யூத ஜெப ஆலயங்கள் எரிக்கப்பட்டது, யூதர்களுக்குச் சொந்தமான 7,000 கடைகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டது. • 30,000 யூதர்கள், அவர்களில் பெரும்பாலோர் யூத சமூகங்களின் தலைவர்கள், வதை முகாம்களுக்கு[9] அனுப்பப்பட்டனர்.
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?
- ↑ "Report on Global Anti-Semitism", en:United States Department of State, January 5, 2005.
- ↑ *Jerome A. Chanes. Antisemitism: A Reference Handbook, ABC-CLIO, 2004, p. 150.
- Rattansi, Ali. Racism: A Very Short Introduction, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2007, pp. 4–5.
- Rubenstein, Richard L.; Roth, John K. Approaches to Auschwitz: the Holocaust and its legacy, Westminster John Knox Press, 2003, p. 30.
- Johnston, William M. The Austrian Mind: An Intellectual and Social History, 1848–1938, University of California Press, 1983, p. 27.
- ↑ *Lewis, Bernard. "Semites and Antisemites" பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம். Extract from Islam in History: Ideas, Men and Events in the Middle East, The Library Press, 1973.
- "Anti-Semitism", Encyclopædia Britannica, 2006.
- Johnson, Paul. A History of the Jews, HarperPerennial 1988, pp. 133 ff.
- Lewis, Bernard. "The New Anti-Semitism" பரணிடப்பட்டது 2011-09-08 at the வந்தவழி இயந்திரம், The American Scholar, Volume 75 No. 1, Winter 2006, pp. 25–36. The paper is based on a lecture delivered at Brandeis University on March 24, 2004.
- ↑ Anti-Jewish Legislation in Prewar Germany
- ↑ Nazi Germany and Anti-Jewish Policy
- ↑ Kristallnacht: The Night of Broken Glass
- ↑ Reich Cultural Senate
- ↑ Concentration Camps, 1933–39