போஜவர்மன்
போஜவர்மன் | |
---|---|
புந்தேல்கண்ட்டின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் பொ.ச. 1285-1288 |
முன்னையவர் | வீரவர்மன் (சந்தேல வம்சம்) |
பின்னையவர் | ஹம்மிரவர்மன் |
அரசமரபு | சந்தேலர்கள் |
போஜவர்மன் (Bhojavarman) (ஆட்சி பொ.ச. 1285-1288 ) 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார்.
வரலாறு
[தொகு]வீரவர்மனுக்குப் பிறகு போஜவர்மன் பதவியேற்றார். இவருடைய கடைசி கல்வெட்டு விக்ரம் நாட்காட்டி1342 (1285-86 பொ.ச.) தேதியிட்டது. [1] 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, போஜவர்மனின் ஆட்சியில் இருந்து ஆறு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: ஐந்து அஜய்கரில் (தேதியிடப்படாதது; 1343, 1344, 1345, 1346 விக்ரம் நாட்காட்டி); மற்றொன்று ஈசவர்மாவில் (1344 வி.நா) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [2]
கல்வெட்டுகள்
[தொகு]கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகள் போஜவர்மனின் ஆட்சிக்காலம் பற்றிய அதிக தகவல்களைத் தரவில்லை. [2] அவை அவருக்கு சேவை செய்த குடும்பங்களால் வழங்கப்பட்ட சதி பதிவுகள் அல்லது கல்வெட்டுகள் மட்டுமே. அஜய்கர் கல்வெட்டுகளில் ஒன்று காயஸ்தரான அரச பொருளாளரும் மன்னரின் ஆலோசகர்களில் ஒருவருமான சுபதா என்பவரால் வெளியிடப்பட்டது . கல்வெட்டு சுபதாவை புகழ்கிறது. மேலும் அவர் கோயில் கட்டியதையும் குறிக்கிறது. [3] [1] இந்தக் கோயில் அநேகமாக இப்போது சிதிலமடைந்துள்ள சிவன் கோயிலாக இருக்கலாம். அதில் "சுபத-தேவன்" என்று ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது.
மற்றொரு விக்ரம் நாட்கடி 1344 அஜய்கர் கல்வெட்டு சுபதா கேதார்நாத் - பார்வதி, விருஷபா, கிருட்டிணன், அம்பிகா, தாரா, திரிபுரசுந்தரி, காமாக்யா, துர்க்கை, ஹரசித்தி, இந்திராணி, சாமுண்டா, காளிகா, ஈசுவரன்-பார்வதி ஆகியோரின் உருவங்களை நிறுவியதாக குறிப்பிடுகிறது. மற்றொரு அஜய்கர் கல்வெட்டு சுபதாவின் மனைவி தேவலா தேவி சிவன் , சுரபி போன்ற தெய்வங்களின் உருவங்களை நிறுவியதாக குறிப்பிடுகிறது. அஜய்கர் கோட்டையின் மேல் வாயிலுக்குக் கீழே பொறிக்கப்பட்டுள்ள ஒரு செப்புத் தகட்டில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைக் குறிப்பிடுகிறது. [4] மற்றொரு கல்வெட்டு, வீரவர்மனின் முன்னோடியான திரைலோக்கியவர்மனுக்குப் பணியாற்றிய காயஸ்த இராணுவ அதிகாரியான ஆனந்தின் சாதனைகளை விவரிக்கிறது. [1]
கல்வெட்டுகள் மற்றும் இவரது வாரிசுகளைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில், போஜவர்மன் அஜய்கர், கலிஞ்சர், கஜுராஹோ உள்ளிட்ட முக்கியமான சந்தேல நகரங்களின் கட்டுப்பாட்டை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இவருக்குப் பிறகு ஹம்மிரவர்மன் ஒரு குறுகிய ஆட்சியை செய்ததாகத் தெரிகிறது .[5] ஹம்மிரவர்மனின் 1308 சர்க்காரி செப்புத் தகடு கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ள முன்னோடிகளின் பட்டியலில் போஜவர்மனின் ��ெயர் விடுபட்டுள்ளது. போஜவர்மனின் முன்னோடிகளான பரமார்த்தி தேவன், திரைலோக்யவர்மன் , வீரவர்மன் ஆகியோரைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. போஜவர்மன் ஹம்மிரவர்மனின் மூதாதையர் அல்ல என்பதையும் இது குறிக்கிறது. [6] போஜனும் ஹம்மிரனும் சகோதரர்கள் என்று ராய் பகதூர் ஹிராலால் கருதினார். ஆனால் இந்த அனுமானம் வேறு எந்த ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. [7] எலிக்கி ஜன்னாஸின் கூற்றுப்படி, இரண்டு மன்னர்களும் அநேகமாக உறவினர்களாக இருக்கலாம், ஹம்மிரவர்மன் வீரவர்மனின் மகனாக இருக்கலாம். [8]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Mitra 1977, ப. 138.
- ↑ 2.0 2.1 Misra 2003, ப. 11.
- ↑ Dikshit 1976, ப. 173.
- ↑ Dikshit 1976, ப. 174.
- ↑ Lal 1965, ப. 32.
- ↑ Dikshit 1976, ப. 177.
- ↑ Mitra 1977, ப. 139.
- ↑ Zannas 1960, ப. 45.
உசாத்துணை
[தொகு]- Dikshit, R. K. (1976). The Candellas of Jejākabhukti. Abhinav. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170170464.
- Kanwar Lal (1965). Immortal Khajuraho. Asia Press.
- Misra, Om Prakash (2003). Archaeological Excavations in Central India: Madhya Pradesh and Chhattisgarh. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-874-7.
- Mitra, Sisirkumar (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120819979.
- Zannas, Eliky (1960). Khajurāho: Text and Photos. Mouton.