உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தேலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தேல வம்சம்
பத்தாம் நூற்றாண்டு–பதிமூன்றாம் நூற்றாண்டு
தலைநகரம்கஜுராஹோ
கலிஞ்சர்
மகோபா
பேசப்படும் மொழிகள்சமஸ்கிருதம்
இந்துஸ்தானி மொழி
சமயம்
இந்து
பௌத்தம்
சமணம்
அரசாங்கம்முடியாட்சி
ராஜா 
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்திய அரசுகள்
• தொடக்கம்
பத்தாம் நூற்றாண்டு
• முடிவு
பதிமூன்றாம் நூற்றாண்டு
முந்தையது
[[கூர்ஜர-பிரதிகார அரச குலம்]]
}
கஜுராஹோ கோயிலின் கட்டிடக்கலை
கஜுராஹோவில் மன்னர் லெட்சுமனவர்மன் கட்டிய இலக்குவன் கோயில்

சந்தேலர்கள் (Chandela or Chandel) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள் கொண்ட புந்தேல்கண்ட் பிரதேசத்தை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள்.[1] சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர்கள்.

சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.

சந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும்.[2] [3][4][5]

மன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.[6]

வரலாறு

[தொகு]

கி பி 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களின் முதல் தலைநகரம் கஜுராஹோ ஆகும். பின்னர் தலைநகரத்தை மகோபாவிற்கு மாற்றினர்.

கஜுரஹோ நகரத்தை தலைநகராகக் கொண்ட சந்தேல அரசு, கூர்ஜர-பிரதிகார பேரரசின் பகுதியாக இருந்தது.[7] கூர்ஜர-பிரதிகார பேரரசிற்கு திறை செலுத்தி ஆண்ட சந்தேல அரசை, நன்னூகா முதல் ஹம்மிரவர்மன் முடிய பல மன்னர்கள் ஆண்டனர். கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சையடைந்த பின்னர் தனியுரிமையுடன் சந்தேல அரசை ஆண்டனர். சந்தேல அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் வித்தியாதரன் (1017–1029) ஆவார்.

சந்தேல அரசின் நிறுவனர் நன்னுகா என்பவர் கஜுராஹோ நகரத்தை தலைநகராகக் கொண்டு புந்தேல்கண்ட் பகுதியை அரசாண்டார். [8]

சந்தேல ஆட்சியாளர்கள்

[தொகு]

சந்தேலர்களின் கட்டிடக் கலை

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mptourism.com/web/explore/destinations/khajurao.aspx
  2. HISTORY OF CHANDELS
  3. The Early Rulers of Khajurāho, Sisirkumar Mitra, Motilal Banarsidass Publ., 1977
  4. Kanhaiyalal Agrawal, Bharat ke Sanskritic Kendra Khajurao, McMillan, 1980
  5. Harihar Vitthal Trivedi, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and Two Minor Dynasties, Archaeological Survey of India, 1991
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
  7. Radhey Shyam Chaurasia, History of Ancient India: Earliest Times to 1000 A. D.
  8. 8.0 8.1 8.2 8.3 Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380607344

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேலர்கள்&oldid=4057720" இலிருந்து மீள்விக்கப்பட்டது