பெலுரான் மக்களவைத் தொகுதி
பெலுரான் (P183) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Beluran (P183) Federal Constituency in Sabah | |
பெலுரான் மக்களவைத் தொகுதி (P183 Beluran) | |
மாவட்டம் | பெலுரான் மாவட்டம் தெலுபிட் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,727 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெலுரான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெலுரான்; தெலுபிட் சுகுட், உலு சாப்பி |
பரப்பளவு | 7,448 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) |
மக்கள் தொகை | 101,066 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெலுரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beluran; ஆங்கிலம்: Beluran Federal Constituency; சீனம்: 伯鲁兰联邦选区) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; பெ��ுரான் மாவட்டம்; தெலுபிட் மாவட்டம்; ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P183) ஆகும்.[5]
பெலுரான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து பெலுரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தெலுபிட் மாவட்டம்
[தொகு]தெலுபிட் மாவட்டம் என்பது சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தெலுபிட் நகரம். முன்பு பெலூரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாவட்டம் இருந்தது.
தெலுபிட் மாவட்டத்தில் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டுகளில் முதல் குடியேற்றம் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சண்டாக்கான் மரண அணிவகுப்பிற்கான (Sandakan Death Marches) முக்கியப் பாதையாகவும் இருந்தது.
1940-ஆம் ஆண்டுகளில், இந்த மாவட்டத்தில் டூசுன் மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். 1965-இல், மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய சிறிது காலத்திலேயே தற்போதைய தெலுபிட் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அரசாங்கமும்; மலேசிய அரசாங்கமும் இணைந்து ஒரு நெடுஞ்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து இந்த மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
பெலுரான் மக்களவைத் தொகுதி
[தொகு]பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பெலுரான் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P159 | 1995-1999 | அசுமாட் நுங்கா (Asmat Nungka) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) | ||
11-ஆவது மக்களவை | P183 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2019 | சுயேச்சை | |||
2019-2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | சபா மக்கள் கூட்டணி (GRS) (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரொனால்டு கியாண்டி (Ronald Kiandee) | பெரிக்காத்தான் நேசனல் (PN) | 11,303 | 38.53 | 38.53 | |
பெனடிக்ட் அசுமத் (Benedict Asmat) | பாரிசான் நேசனல் (BN) | 9,709 | 33.10 | 29.74 ▼ | |
பெலிக்ஸ் ஜோசப் சாங் (Felix Joseph Saang) | பாக்காத்தான் (PH) | 4,460 | 15.20 | 15.20 | |
ரோவினா ரசித் (Rowiena Rasid) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 3,707 | 12.64 | 15.83 ▼ | |
அவுசிங் சுடின் @ சம்சுடின் (Hausing Sudin @ Samsudin) | தாயக இயக்கம் (GTA) | 155 | 0.53 | 0.53 | |
மொத்தம் | 29,334 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 29,334 | 97.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 617 | 2.06 | |||
மொத்த வாக்குகள் | 29,951 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,727 | 65.58 | 10.21 ▼ | ||
Majority | 1,594 | 5.43 | 28.95 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
மேலும் காண்க
[தொகு]- கடசான்-டூசுன்
- பெலுரான் மாவட்டம்
- தெலுபிட் மாவட்டம்
- சண்டக்கான் பிரிவு
- மலேசிய அரசியல் கட்சிகள்
- மலேசியத் தேர்தல் தொகுதிகள்
- பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்