உள்ளடக்கத்துக்குச் செல்

சிபித்தாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபித்தாங் (P178)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Sipitang (P178)
Federal Constituency in Sabah
சிபித்தாங் மக்களவைத் தொகுதி
(P178 Sipitang)
மாவட்டம்சிபித்தாங் மாவட்டம்
பியூபோர்ட் மாவட்டம்
உட்பகுதி பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை45,871 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசிபித்தாங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா பென்யூ
பரப்பளவு3,715 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      சபா மக்கள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்மாட்பாலி மூசா
(Matbali Musah)
மக்கள் தொகை66,583 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சிபித்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sipitang; ஆங்கிலம்: Sipitang Federal Constituency; சீனம்: 实必丹联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P178) ஆகும்.[5]

சிபித்தாங் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து சிபித்தாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சிபித்தாங் மாவட்டம்

[தொகு]

சிபித்தாங் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிபித்தாங் (Sipitang Town) நகரம், சிபித்தாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது.

1884-ஆம் ஆண்டு வரையில், சிபித்தாங் மாவட்டம், புரூணை சுல்தானகத்தின் முன்னாள் பிரதேசமாகும். நவம்பர் 5, 1884-இல், சிபித்தாங்; கோலா பென்யூ ஆகிய நிலப் பகுதிகளை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company), அப்போதைய புரூணை சுல்தான் விட்டுக் கொடுத்தார்.

சிபித்தாங் கடற்கரை

[தொகு]

புரூணை விரிகுடாவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சிபித்தாங் கடற்கரை உள்ளது. லாங் மியோ (Long Mio) மற்றும் லாங் பாசியா (Long Pasia) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.

இந்தக் கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர். மழைக்காலத்தில் சிபித்தாங்கில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு.

சிபித்தாங் மக்களவைத் தொகுதி

[தொகு]




சிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  மலாயர் (24.6%)
  சீனர் (5.5%)
  இதர இனத்தவர் (3.6%)





சிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.81%)
  பெண் (49.19%)

சிபித்தாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.73%)
  21-29 (22.33%)
  30-39 (23.31%)
  40-49 (17.09%)
  50-59 (14.49%)
  60-69 (10.21%)
  70-79 (3.62%)
  80-89 (1.53%)
  + 90 (0.69%)
சிபித்தாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சிபித்தாங் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P155 1995-1999 யூசோப் யாக்கோப்
(Yusof Yacob)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P178 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013 சப்பாவி அகமட்
(Sapawi Ahmad)
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018 யமானி அபிஸ் மூசா
(Yamani Hafez Musa)
2018-2019 சுயேச்சை
2019-2020 பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020–2022 சபா மக்கள் கூட்டணி
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022 மாட்பாலி மூசா
(Matbali Musah)
2022–தற்போது வரையில் சபா மக்கள் கூட்டணி
(சுயேச்சை)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
மாட்பாலி மூசா
(Matbali Musah)
சபா மக்கள் கூட்டணி (GRS)14,45949.7549.75 Increase
அட்னான் பூத்தே
(Adnan Puteh)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)9,76833.6111.55
லகிருள் லத்திகுல்
(Lahirul Latigul)
பாக்காத்தான் (PH)4,83416.6316.63 Increase
மொத்தம்29,061100.00
செல்லுபடியான வாக்குகள்29,06197.89
செல்லாத/வெற்று வாக்குகள்6262.11
மொத்த வாக்குகள்29,687100.00
பதிவான வாக்குகள்45,87163.3516.58
Majority4,69116.1412.70 Increase
      சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]