பிசுகோமவுன் பவன்
Appearance
பிசுகோமவுன் பவன் Biscomaun Bhawan | |
---|---|
பிசுகோமவுன் பவன் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கட்டிடம் |
கட்டிடக்கலை பாணி | நவீனம் |
இடம் | பட்னா, பீகார், இந்தியா |
முகவரி | மேற்கு காந்தி மைதானப் பூங்கா |
ஆள்கூற்று | 25°37′13″N 85°08′22″E / 25.620337°N 85.139448°E |
தற்போதைய குடியிருப்பாளர் | பீகார் அரசாங்கம் |
துவக்கம் | 1971 |
கட்டுவித்தவர் | பீகார் முதலமைச்சர்களின் பட்டியல் |
உரிமையாளர் | பீகார் அரசாங்கம் |
நிலக்கிழார் | பீகார் அரசாங்கம் |
உயரம் | 71 m |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 18 |
பிசுகோமவுன் பவன் (Biscomaun Bhawan) இந்தியாவின் பிகார் மாநிலம் பட்னா நகரத்திலுள்ள மிக உயரமான கட்டிடம் ஆகும். பீகாரின் பல நிர்வாக அலுவலகங்கள் இங்கு உள்ளன.[1] 71 மீட்டர் உயரம் கொண்ட இது ஒரு பொதுக் கட்டிடமாகும். பீகார், இந்திய அரசின் சில அலுவலகங்கள், சில தனியார் நிறுவன அலுவலகங்கள்,[2] நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பல முக்கிய அலுவலகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. பீகார் மற்றும் கிழக்கு இந்தியா முழுவதையும் ஒப்பிடுகையில் பிந்து பலூச்சி எனப்படும் சுழலும் உணவகம்[3] மற்றும் மென்பொருள் பூங்காவைக் கொண்ட ஒரே கட்டிடம் இதுவாகும்.
முக்கியமான அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள்
[தொகு]- மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம், பாட்னா
- வெளிநாட்டு பொது வர்த்தக இயக்குநர்
- இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா, பாட்னா
- நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழக அலுவலகம்
- கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் மத்திய தகவல் மன்றம்
- பிந்து பலூச்சி சுழலும் உணவகம்
- மாவட்ட போக்குவரத்து அலுவலகம்
- பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joy Sengupta (16 July 2015). "Dial Biscomaun for all govt scheme queries". The Telegraph இம் மூலத்தில் இருந்து 21 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721180823/http://www.telegraphindia.com/1150716/jsp/bihar/story_31790.jsp. பார்த்த நாள்: 9 October 2016.
- ↑ Piyush Kumar Tripathi (23 February 2014). "Bihar links destiny to tryst with IT". The Telegraph இம் மூலத்தில் இருந்து 6 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306013409/http://www.telegraphindia.com/1140223/jsp/frontpage/story_18012751.jsp. பார்த்த நாள்: 9 October 2016.
- ↑ "Pind Balluchi, Biscomaun Towers at TripAdvisor". பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.