பிகார் செரீப்
பிகார் செரீப் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
கோட்டம் | பாட்னா |
மாவட்டம் | நாலந்தா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பிகார் செரீப் மாநகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 152.94 km2 (59.05 sq mi) |
• நகர்ப்புறம் | 23.5 km2 (9.1 sq mi) |
• | 78.53 km2 (30.32 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,97,268 |
• அடர்த்தி | 15,743/km2 (40,770/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது |
• வட்டார மொழி | மகதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 803101 803118 803216 803111 803113 |
தொலைபேசி குறியீடு எண் | +916112 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-21 |
இணையதளம் | Bihar Sharif - Nagarseva |
பிகார் செரீப் (Bihar Sharif), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள நாலந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது பாட்னாவிற்கு தென்கிழக்கே 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இது பனாச்சே ஆற்றின் கரையில் உள்ளது
பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை இந்நகரத்தின் முக்கியத் தொழில் ஆகும். இந்நகரத்தில் பீடி தயாரிப்பது குடிசைத் தொழில் போன்று செயல்படுகிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 46 வார்டுகளும், 48,641 வீடுகளும் கொண்ட பிகார்செரீப் மாநகரத்தின் மக்கள் தொகை 2,97,268 ஆகும். அதில் ஆண்கள் 1,55,216 மற்றும் பெண்கள் 1,42,052 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 25,454 மற்றும் 71 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.86%, இசுலாமியர் 33.59% மற்றும் பிறர் 0.54% ஆகவுள்ளனர்.[2]இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]பிகாரின் ஜெகன்னாபாத் மற்றும் மேற்கு வங்காளத்தின் பராக்கா நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 33[3]பிகார்செரீப் நகரத்தின் வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 120 பிகார் செரீப் நகரத்தில் துவங்கி நாலந்தா, ராஜ்கிர், கயை வழியாக தும்ரோனுக்குச் செல்கிறது.
இரயில் நிலையம்
[தொகு]பிகார் செரீப் இரயில் நிலையம்[4]புது தில்லி, பாட்னா, கயை போன்ற நகரங்களை இணைக்கிறது.
கல்வி
[தொகு]- கே கே பல்கலைக்கழகம்
- நாலந்தா கல்லூரி
- சர்தார் படேல் நினைவுக் கல்லூரி
- நாலந்தா மகளிர் கல்லூரி
- செயிண்ட் ஜோசப் அகாதமி
- கிஷன் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
- ↑ Biharsharif Population, Religion, Caste, Working Data Nalanda, Bihar - Census 2011
- ↑ National Highway 33 (India)
- ↑ Bihar Sharif Junction railway station