படலம் என்பதன் விளக்கம்
Appearance
படலம் என்பது, ஒரு நூலில் கூறப்படும் வெவ்வேறு வகையான கருத்துகளை எவ்வாறு வரிசைப்படுத்தித் தொகுப்பது என்பதை விளக்க நன்னூல் கூறும் விதியாகும்.
பல ஓத்துகள் கொண்டது படலம் அல்லது அதிகாரம் எனப்படும். இலக்கண நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் எனப்பல படலங்கள் வருவது எடுத்துக்காட்டாகும். அதே போல காவியங்களிலும் நாட்டுப்படலம், ஆற்றுப்படலம் என்று தொடர்வதைக் காணலாம். இதையே நன்னூல் ஒன்றோடொன்று பொருந்தாத ஓரினமில்லாத பலவகைப் பொருள்களை அவை ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்து வருமாறு நூலில் வரிசைப்படுத்திக் கூறுவது படலம் எனப்படும். [1]