உள்ளடக்கத்துக்குச் செல்

நேபெர் மறுசீராக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபெர் மறுசீராக்கல் (Neber rearrangement) என்பது ஒரு கரிம வேதியியல் மறுசீரமைப்பு வினை வகையாகும். இவ்வினையில் மறுசீராக்கல் மூலமாக ஓர் ஆக்சைம் சேர்மமானது ஆல்பா-அமினோகீட்டோனாக மாற்றப்படுகிறது [1][2]

நேபெர் மறுசீராக்கல்.

ஆக்சைம் டோசில் குளோரைடுடன் வினபுரிந்து முதலில் கீட்டாக்சைம் டோசிலேட்டாக (4-தொலுயின் சல்போனைல் குளோரைடு) மாற்றப்படுகிறது. சேர்க்கப்பட்ட கார வேதிப்பொருளால் உருவாகும் கார்பானியன் அயனி, அணுக்கரு கவர்பொருள் இடப்பெயர்ச்சியின் மூலம் டோசிலேட்டு தொகுதியை அசிரினாக இடப்பெயர்ச்சி செய்கிறது. அடுத்தடுத்து சேர்க்கப்படும் நீரால் நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து அமினோகீட்டோன் தோன்றுகிறது. பெக்மான் மறுசீராக்கல் வினை ஒரு பக்க வினையாக நிகழ்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  2. P. W. Neber and A. v. Friedolsheim (1926). "Über eine neue Art der Umlagerung von Oximen". Justus Liebig's Annalen der Chemie 449 (1): 109–134. doi:10.1002/jlac.19264490108. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபெர்_மறுசீராக்கல்&oldid=2747865" இலிருந்து மீள்விக்கப்பட்டது