தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 7 | ||||
---|---|---|---|---|
பஞ்சாபில் தெ. நெ. 7-ல் சாலைத் தகவல் பலகை | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 845 km (525 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பசில்கா, பஞ்சாப் | |||
கிழக்கு முடிவு: | மணா கணவாய், உத்தராகண்டம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா), அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம் | |||
முதன்மை இலக்குகள்: | பசில்கா, அபோஹர், மலௌத், கித்தார்பா, பட்டிண்டா, இராம்புர புல், சங்குரூர், பட்டியாலா, இராஜ்புரா, பானூர், சிராக்பூர், பஞ்ச்குலா, நரைன்கார், பனோதா சாகிப், ஹெர்பெர்த்பூர், தேராதூன், ரிசிகேசு, தேவப்பிரயாகை, ருத்ரப்பிரயாக், கர்ணபிரயாக், சாமோலி, பத்ரிநாத், மணா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 7 (தெ. நெ. 7)(National Highway 7 (India)) என்பது இந்தியாவில் பாசில்காவையும் (பஞ்சாப்) மனாவையும் (உத்தராகண்டம்) இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் வழியாகச் செல்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 7 (பழைய தேசிய நெடுஞ்சாலை-58) இந்து சமய மையங்களான ரிசிகேசு, தேவ் பிரயாக், ருத்திரபிரயாகை, கர்ணபிரயாகை, சமோலி, ஜோஷி மடம், பத்ரிநாத் தேராதூன், சண்டிகர் நகரங்களை இணைக்கிறது. சிறி கேம்குந்த் சாகிபுக்கு பயணிக்கும் யாத்ரீகர்கள் ஜோசி மடம் மற்றும் பத்ரிநாத் இடையே தே. நெ. 7-இல் அமைந்துள்ள கோவிந்த்காட்டி சென்று பயணிக்கின்றனர்.
இந்த நெடுஞ்சாலை பொதுவாக குளிர் அதிகம் நிலவும் மாதங்களான திசம்பர், சனவரி, பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் இமயம்லையின் மேற்பகுதிகளில் மூடப்படுகிறது. இது இந்தியா/திபெத்து எல்லை அருகே மணா கணவாய்க்குச் செல்கிறது.
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7-இன் வழித்தடமானது இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2] இந்தத் தேசிய நெடுஞ்சாலை சுமார் 845 கிமீ (525 மைல்) நீளம் கொண்டது.[3]
பஞ்சாப்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7 இந்தியா-பாக்கித்தான் எல்லையிலிருந்து தொடங்கி, பாசில்கா, அபோஹர், மலோட், கிதர்பாகா, பதிண்டா, ராம்புரா புல், பர்னாலா, சங்க்ரூர், பட்டியாலா, ராஜ்புரா, பானூர், ஜிராக்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அரியானா எல்லை வரை செல்கிறது.[4]
அரியானா
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7, ஜிராக்பூருக்கு அருகிலுள்ள பஞ்ச்குலாவினை அரியானா மாநிலத்தில் உள்ள சாஜத்பூர் மற்றும் நரைன்கருடன் இணைக்கிறது.
இமாச்சலப் பிரதேசம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7 இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள காலா அம்பை பான்டா சாகிபுடன் நகரங்களை இணைக்கிறது.[5]
உத்தராகண்டம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 7 உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள இந்தோ/திபெத் எல்லையில் தேராதூன், ரிசிகேசு, தேவபிரயாக், ருத்ராப்பிரயாக், கர்ணபிரயாக். சமோலி, பத்ரிநாத், மானா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[6]
சந்திப்புகள்
[தொகு]- பஞ்சாப்
- தே.நெ. 62 அபோகர் அருகே[3]
- தே.நெ. 9 மலோட் அருகே
- தே.நெ. 354 மலோட் அருகே
- தே.நெ. 754 பதிண்டா அருகே
- தே.நெ. 54 பதிண்டா அருகே
- தே.நெ. 254 ராம்புரா பூல் அருகே
- தே.நெ. 703 பர்னாலா அருகே
- தே.நெ. 52 சங்க்ரூர் அருகே
- தே.நெ. 44 ராஜ்புரா அருகே
- தே.நெ. 205A பானூர் அருகே
- தே.நெ. 152 ஜிராக்பூர் அருகே
- அரியானா
- தே.நெ. 5 பஞ்ச்குலா அருகே
- தே.நெ. 344 சாஜத்பூர் அருகே
- இமாச்சலப் பிரதேசம்
- தே.நெ. 907A நகான் அருகே
- தே.நெ. 907 பான்டா சாகிப் அருகே
- தே.நெ. 707 பாவோண்டா சாஹிப் அருகே
- உத்தராகண்டம்
- தே.நெ. 507 கெர்பர்ட்பூர் அருகே
- தே.நெ. 307 தேராதூன் அருகே
- தே.நெ. 34 ரிசிகேசு அருகே
- தே.நெ. 707A மலேதா அருகே
- தே.நெ. 309 சிறிநகர் அருகே
- தே.நெ. 107 ருத்ராப்பிரயாக் அருகே
- தே.நெ. 109 கர்ணப்பிரயாக் அருகே
- தே.நெ. 107A சமோலி அருகே[3]
சாலை முடிவுறும் இடம் சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ள மானா கிராமத்திற்கு அருகில் உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ 3.0 3.1 3.2 "The List of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "National Highways in Punjab, India". Public Works Department, Punjab. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ "National Highways in Himachal Pradesh" (PDF). Public Works Department, Himachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ "National Highways in Uttarakhand" (PDF). Public Works Department, Uttarakhand. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.