உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் டவுன், பினாங்கு

ஆள்கூறுகள்: 5°24′52″N 100°19′45″E / 5.41444°N 100.32917°E / 5.41444; 100.32917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் டவுன்
George Town
பினாங்கு
மேலிருந்து, இடமிருந்து வலமாக:

சின்னம்
Map
ஜார்ஜ் டவுன் George Town பினாங்கு is located in மலேசியா
ஜார்ஜ் டவுன் George Town பினாங்கு
ஜார்ஜ் டவுன்
George Town
பினாங்கு
      ஜார்ஜ் டவுன்
ஆள்கூறுகள்: 5°24′52″N 100°19′45″E / 5.41444°N 100.32917°E / 5.41444; 100.32917
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட கிழக்கு பினாங்கு தீவு
மாநகரம் ஜார்ஜ் டவுன்
பினாங்கு தீவு மாநகராட்சிமாநகராட்சி
நகரத் தோற்றம்11 ஆகஸ்டு 1786
நகரத் தகுதி1857
அரசு
 • மேயர்அந்தோனி ராஜேந்திரன்
Anthony Rajendran
பரப்பளவு
 • நகரம்18.9 km2 (7.3 sq mi)
 • மாநகரம்
2,563.15 km2 (989.64 sq mi)
மக்கள்தொகை
 (2020)[1]
 • நகரம்1,58,336
 • அடர்த்தி8,378/km2 (21,700/sq mi)
 • பெருநகர்
28,33,957 (2-ஆவது)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
100xx - 108xx; 111xx - 118xx
தொலைபேசி எண்கள்+6042 (தரைவழித் தொடர்பு)
வாகனப் பதிவெண்கள்P
இணையதளம்http://www.mbpp.gov.my/

ஜார்ஜ் டவுன் (மலாய்: Bandaraya Pulau Pinang; ஆங்கிலம்: George Town City; சீனம்: 喬治市; ஜாவி: جورج تاون‎) என்பது மலேசியா; பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும். இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் (King George III) நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானியக் குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.[2]

இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மாநகரில் ஏறக்குறைய 708,127 பேர் வசிக்கிறார்கள். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஜார்ஜ் டவுன் மாநகரம் இரண்டாவது இடம் வகிக்கிறது.[3]

ஜார்ஜ் டவுன் மாநகரக் கூட்டம் (Greater Penang) என அழைக்கப்படும் பெருநகர் பகுதி அமைப்பில்; ஜார்ஜ் டவுன், பினாங்கு ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன.

இங்கு சுமார் 2,412,616 பேர் வசிக்கிறார்கள். இந்த பெருநகரப் பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும். இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (World Heritage Site).

வரலாறு

[தொகு]
பினாங்கு தீவு மாநகராட்சி கட்டடம்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஜார்ஜ் டவுன் - மலாக்கா வரலாற்று நகரங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைகலாசாரம்
ஒப்பளவுii, iii, iv
உசாத்துணை1223
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2008 (32nd தொடர்)

1770-களில், தூர கிழக்கு நாடுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி (East India Company); வணிகத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அக்கட்டத்தில் தீபகற்ப மலேசியாவிலும் வர்த்தக உறவுகளை உருவாக்க அந்த நிறுவனம், பிரித்தானிய அரசக் கடற்படைத் தலைவரான (British Royal Navy Captain) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரை கெடாவிற்கு அனுப்பி வைத்தது.

பினாங்கு ஒரு புதிய பிரித்தானியத் துறைமுகமாக அமைவதற்கு பொருத்தமானது என்று கண்டறிந்த பிரித்தானியர்கள், பினாங்கில் ஒரு தளத்தை நிறுவுவதற்கு திட்டம் வகுத்தார்கள். அந்த வகையில் கெடாவின் சுல்தான் முகரம் ஷாவிடம் (Sultan Mukarram Shah) ஒப்புதலைப் பெற பிரான்சிஸ் லைட்டை கெடாவிற்கு அனுப்பினார்கள்.

கெடாவிற்கு தற்காப்பு உதவிகள்

[தொகு]

கெடா சுல்தானிடம் இருந்து பினாங்கைப் பெற்றுக் கொள்வதில் பிரான்சிஸ் லைட் வெற்றி பெற்றார். அதற்குப் பதிலாக, கெடா இராணுவத்திற்கு தற்காப்பு உதவியின் அடிப்படையில் பிரித்தானியர்கள் உதவுவார்கள் என்றும் உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி உதவி செய்யவில்லை.

பினாங்கு தீவு, தொடக்கத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1786, ஆகஸ்ட் 11-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பில் பிரான்சிஸ் லைட் பினாங்கில் காலடி வைத்த போது, அதற்கு ஐக்கிய இராச்சியத்தின், நான்காம் ஜார்ஜ் நினைவாக "வேல்ஸ் இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார்.

பிரான்சிஸ் லைட்

[தொகு]
1786-இல் கட்டப்பட்ட கார்ன்வாலிசு கோட்டை

அந்த வகையில், ஜார்ஜ் டவுன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரால் 1 ஆகஸ்ட் 1786-இல் நிறுவப்பட்டது. அதன் பின்னர் நகரின் வடக்கு கிழக்கு மூலையில் கார்ன்வாலிசு கோட்டை (Fort Cornwallis) கட்டப்பட்டது. பின்னர் அது வளர்ந்து வரும் ஒரு வணிக நகராக மாறியது.

சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிகளுடன் சேர்ந்து, ஜார்ஜ் டவுன் நிலப்பகுதி நீரிணை குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாற்றம் கண்டது. 1867-ஆம் ஆண்டில் பிரித்தானிய முடியாட்சியில் (British Crown Colony) ஒரு காலனியாக மாறியது.

மலேசியாவின் முதல் மாநகரம்

[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது.

ஐரோப்பிய இறக்குமதி வணிகக் கடைகள்

[தொகு]

கடற்கரை சாலை, மலபார் சாலை, பிட் சாலை உருவாக்கப்பட்டன. வணிகக் கட்டிடங்கள் முளைத்தன. கடற்கரை சாலையின் தெற்கு பகுதியில் மொத்த விற்பனையாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த நகரம் ஓர் உலகப் பாரம்பரியத் தளம் என பட்டியலிடப்பட்டு உள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் கடற்கரை சாலையின் வடக்குப் பகுதியில் ஐரோப்பிய இறக்குமதி வணிகக் கடைகள் அமைந்தன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய களம்

[தொகு]

2008 ஜூலை 7-ஆம் தேதி, ஜோர்ஜ் டவுன்; மலாக்கா நகரத்துடன் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டது.[4]

ஜார்ஜ் டவுன் வரலாறு

[தொகு]
வரலாற்று இணைப்புகள் காலம்
கெடா சுல்தானகம் 1136–1786
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி 1786–1867
நீரிணை குடியேற்றங்கள் 1826–1941; 1945–1946
சப்பானியப் பேரரசு மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு 1941–1945
மலாயா ஒன்றியம் 1946–1948
மலாயா கூட்டமைப்பு 1948–1963
மலேசியா மலேசியா 1963–தற்போது

ஆட்சி முறை

[தொகு]
மாநிலச் சட்டமன்றக் கட்டடம்

1857-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன் மலாயா கூட்டமைப்பின் முதல் நகராட்சியானது. ஜனவரி 1957 1-ஆம் தேதி மாட்சிமை தங்கிய ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் அரசியார், ஜோர்ஜ் டவுனை மாநகராட்சியாக மாற்றினார்.

1965-ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர்த் தேர்தல்கள் நிறுத்தப்பட்டன. 1966-ஆம் ஆண்டு மாநகரச் சபை செயல்பாடுகள் பினாங்கு முதலமைச்சரின் அதிகாரத்தின் கீழ் மாற்றப்பட்டன.

1974-ஆம் ஆண்டில், ஓர் உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கபட்டு, 1976-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன், பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015-ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன், பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்

[தொகு]

நாடாளுமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
பி.048 கொடி மலை சய்ரீல் ஜோகாரி ஜனநாயக செயல் கட்சி
பி.049 தஞ்சோங் சாவ் கொன் யாவ் ஜனநாயக செயல் கட்சி
பி.050 ஜெலுத்தோங் ஒய் சுவான் ஆன் ஜனநாயக செயல் கட்சி
பி.051 புக்கிட் குளுகோர் ராம் கர்பால் சிங் ஜனநாயக செயல் கட்சி

சட்டமன்றத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் பிரதிநிதிகள் பட்டியல்

Parliament சட்டமன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
பி.048 என்.22 தஞ்சோங் பூங்ஙா தே ஈ சியாவ் ஜனநாயக செயல் கட்சி
பி.048 என்.23 தண்ணீர் மலை லிம் குவான் எங் ஜனநாயக செயல் கட்சி
பி.048 என்24 கெபுன் பூங்ஙா சியா கா பெங் மக்கள் நீதிக் கட்சி
பி.048 என்.25 புலாவ் திக்குஸ் யாப் சூ ஹ்யூ ஜனநாயக செயல் கட்சி
பி.049 என்.26 பாடாங் கோத்தா சாவ் கொன் யாவ் ஜனநாயக செயல் கட்சி
பி.049 என்.27 பெங்காலான் கோத்தா லாவ் கெங் ஈ ஜனநாயக செயல் கட்சி
பி.049 என்.28 கொம்தார் தே லாய் ஹெங் ஜனநாயக செயல் கட்சி
பி.050 என்.29 டத்தோ கிராமாட் ஜக்டீப் சிங் டியோ ஜனநாயக செயல் கட்சி
பி.050 என்.30 சுங்கை பினாங் லிம் சியு கிம் ஜனநாயக செயல் கட்சி
பி.050 என்.31 பத்து லாஞ்சாங் லாவ் ஹெங் கியாங் ஜனநாயக செயல் கட்சி
பி.051 என்.32 சிரி டெலிமா நேதாஜி ராயர் ஜனநாயக செயல் கட்சி
பி.051 என்.33 ஆயர் ஈத்தாம் வோங் அன் வாய் ஜனநாயக செயல் கட்சி
பி.051 என்.34 பாயா தெருபோங் யோ சுன் இன் ஜனநாயக செயல் கட்சி

போக்குவரத்து

[தொகு]
பினாங்கு பாலம்.
கொம்டார் கோபுரம்.
லிட்டில் இந்தியா பகுதி

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை

[தொகு]

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தையும் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மூலமாக விமான நிலையத்தை 30 நிமிடங்களிள் அடையலாம்.

அத்துடன் இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[5]

17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[6]

ஜெலுத்தோங் விரைவுச் சாலை

[தொகு]

1983-ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டப்படும் போது இங்கு ஒரு முன்னோடிச் சாலை உருவாக்கப் பட்டது. 1985-இல் சாலை கட்டுமானம் முடிவுற்றது. பின்னர், இந்தச் சாலை வடக்கு நோக்கி ஜெலுத்தோங் விரைவுச் சாலையாகவும்; தெற்கே பாயான் லெப்பாஸ் விரைவுச் சாலையாகவும் நீட்���ிக்கப்பட்டது.

முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் சோங் யூ 24 நவம்பர் 2010-இல் காலமானார். அவர் இறந்த பிறகு, 2010 டிசம்பர் 7-ஆம் தேதி, பினாங்கு மாநில அரசாங்கம் அவரின் நினைவாக அந்த விரைவுச் சாலைக்கு துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை எனப் பெயரை மாற்றியது.[7]

பினாங்கு பாலம்

[தொகு]

பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.

பினாங்கு இரண்டாவது பாலம்

[தொகு]

பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜார்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இந்தப் பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப் பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்

[தொகு]

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP), முன்பு பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுனிலிருந்து 14 கி.மீ. (8.7 மைல்) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935-இல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

ராபிட் பெனாங்

[தொகு]

ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை அதன் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.

எக்ஸ்பிரஸ் பேருந்துகள்

[தொகு]

சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது ஜோர்ஜ் டவுன் மாநகரை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.

பினாங்கு படகு சேவை

[தொகு]

1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இணைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.

இரட்டை அடுக்குப் பேருந்துகள்

[தொகு]

கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன. பின்னர் அவை 1970-இல் நிறுத்தப்பட்டன.

கொம்டார் கோபுரம்

[தொகு]

கொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்கள்

[தொகு]
  • கர்னீ பிளாசா
  • கர்னீ பாராகான்
  • குவின்ஸ்பே மால்
  • அய்ளன் பிளாசா
  • பீராங்கின் மால்
  • 1வது அவென்யூ
  • பார்க்சன் கிராண்ட்
  • பினாங்கு டைம்ஸ் சதுக்கம்
  • மிட்லாண்ட்ஸ் பார்க் மையம்
  • டெஸ்கோ ஜெலுத்தோங்
  • டெஸ்கோ தஞ்சோங் பீனாங்

விளையாட்டு

[தொகு]
  • மாநகர விளையாட்டு அரங்கம்

மருத்துவ வசதி

[தொகு]
  • பெரிய மருத்துவமனை
  • தீவு சிறப்பு மருத்துவமனை
  • Pantai Mutiara சிறப்புமருத்துவமனை
  • லோஹ் குவான் சிறப்பு மருத்துவமனை
  • லாம் வாஹ் ஈ சிறப்பு மருத்துவமனை
  • அட்வெண்டிஸ்டான் சிறப்பு மருத்துவமனை
  • தஞ்சோங் சிறப்பு மருத்துவமனை
  • மவுண்ட் மிரியம் சிறப்பு மருத்துவமனை
  • டிராபிகானா சிறப்பு மருத்துவமனை

கல்வி

[தொகு]

ஆங்கில பள்ளிகள்

[தொகு]
  • பினாங்கு பிறி பள்ளி, நாட்டின் மிக பழமையான ஆங்கிலம் பள்ளி
  • செயின்ட் சேவியர் பள்ளி, தென் கிழக்கு ஆசியாவில் மிக பழமையான கத்தோலிக்க பள்ளி
  • மெத்தடிஸ்ட் பாய்ஸ் 'பள்ளி
  • கான்வென்ட் கிரின் லேன்
  • கான்வென்ட் ஜோர்ஜ் டவுன்
  • செயின்ட் ஜோர்ஜ் பெண்கள் பள்ளி
  • கான்வென்ட் பூலாவ் தீகுஸ் பள்ளி

தமிழ் பள்ளிகள்

[தொகு]
  • SJK (T), ஆசாத்
  • SJK (T), ராமகிருஷ்ணா [8]
  • SJK (T), ஜாலான் சுங்கை [9]

கல்லூரிகள்

[தொகு]
  • பினாங்கு மருத்துவ கல்லூரி
  • KDU கல்லூரி [10]
  • SEGi கல்லூரி [11]
  • சென்டிரல் கல்லூரி
  • ஒலிம்பியா கல்லூரி
  • INTI சர்வதேச கல்லூரி
  • ஹான் சியாங் கல்லூரி
  • PTPL கல்லூரி

லிட்டில் இந்தியா

[தொகு]

லிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

[தொகு]

பினாங்கு தைப்பூசம்

[தொகு]

ஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும்.

தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.

சித்ரா பவுர்ணமி

[தொகு]

1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.

சகோதர நகரங்கள்

[தொகு]
  • ஆத்திரேலியா அடிலெய்டு, ஆஸ்திரேலியா (8 December 1973)[12]
  • சீனா கிஷியம்என், சீனா[13] (1991)
  • சப்பான் கனகவா, ஜப்பான் (3 October 1991)[14]
  • இந்தோனேசியா மேடான், இந்தோனேசியா[15][16]
  • சீனக் குடியரசு தைப்பே, தைவான்[17][18] (March 2011)
  • தாய்லாந்து பாங்காக், பாங்காக்[19] (April 2012)

வரைபடங்கள்

[தொகு]

பட தொகுப்பு

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Penang Island City agenda". The Sun (Malaysia). 19 May 2014. http://www.thesundaily.my/node/252772. 
  2. "Penang Info > History". பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  3. Mike Aquino (30 August 2012). "Exploring Georgetown, Penang". Asian Correspondent. Archived from the original on 1 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Eight new sites, from the Straits of Malacca, to Papua New Guinea and San Marino, added to UNESCO's World Heritage List". July 7, 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-01-06.
  5. Statistik Jalan (Edisi 2014). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2014. p. 57. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  6. Expressway renamed to honour Chong Eu The Star, December 7, 2010
  7. Penang has renamed a highway as Tun Dr Lim Chong Eu expressway The Star, November 26, 2010
  8. SJKT Ramakrishna. Facebook. Retrieved on 2013-09-27.
  9. Tamil school data – Penang |. Mynadi.wordpress.com. Retrieved on 2013-09-27.
  10. KDU College Malaysia, Penang Campus பரணிடப்பட்டது 2014-05-28 at the வந்தவழி இயந்திரம். Kdupg.edu.my (2013-06-05). Retrieved on 2013-09-27.
  11. SEGi College Penang | SEGi University. Segi.edu.my. Retrieved on 2013-09-27.
  12. Georgetown பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம். Adelaidecitycouncil.com. Retrieved on 2011-08-11.
  13. Penang Bridge International Marathon official visit to Xiamen Marathon | Penang – Hotels, Resorts, Entertainment & Events பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம். . Retrieved on 2011-08-11.
  14. [1] பரணிடப்பட்டது 2012-10-29 at the வந்தவழி இயந்திரம். The Star Online. Retrieved on 2012-08-19.
  15. http://www.pemkomedan.go.id/news_detail.php?id=106 MEDAN MENJALIN HUBUNGAN KOTA KEMBAR KEEMPAT Retrieved September 10, 2013 Archived 23 April 2007
  16. Xiamen, Penang and Adelaide as Sister cities – What's On Xiamen பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம். Whatsonxiamen.com (9 May 2007). Retrieved on 2011-08-11.
  17. "Malaysia: Taipei, Georgetown ink friendship memorandum – Taiwan News Onli.com.tw (29 March 2011). Retrieved on 2011-08-11". Archived from the original on 2015-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  18. "Taipei – International Sister Cities". Taipei City Council. Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  19. [2].CM Lim Guan Eng official facebook page (4 April 2012). Retrieved on 2012-04-06.

வெளி இணைப்புகள்

[தொகு]

இருப்பிடம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_டவுன்,_பினாங்கு&oldid=4096441" இலிருந்து மீள்விக்கப்பட்டது