உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் அசிட்டேட்டு
சோடியம் அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் அசிட்டேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
சோடியம் எத்தனோவேட்டு (ethanoate)
வேறு பெயர்கள்
சோடியம் உப்பு
இனங்காட்டிகள்
127-09-3
ChemSpider 29105
பப்கெம் 517045
வே.ந.வி.ப எண் AJ4300010 (உலர்)
AJ4580000 (டிரைஐதரேட்டு)
பண்புகள்
C2H3NaO2
வாய்ப்பாட்டு எடை 82.0338 g/mol (anhydrous)
136.08 g/mol (trihydrate)
தோற்றம் White deliquescent powder
odorless
அடர்த்தி 1.528 g/cm3
1.45 g/cm3 (trihydrate)
உருகுநிலை 324 °C (anhydrous)
58 °C (trihydrate)
கொதிநிலை 881.4 °C (உலர்)
122 °C (டிரைஐதரேட்டு)
76 g/100 ml (0°C)
கரைதிறன் soluble in ethanol (5.3 g/100 mL (trihydrate)
காரத்தன்மை எண் (pKb) 9.25
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.464
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒரேகோணப் படிகம்(monoclinic)
தீங்க��கள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 250 °C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் அசிட்டேட்டு என்பது அசிட்டிக் காடியின் சோடிய உப்பு. பல்வேறு பயன்பாட்டுக்காக இவ் வேதிப்பொருள் மலிவாக (குறைந்த செலவில்) பெரிய அளவில் தொழிலகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இரண்டு கரிம அணுக்கள் கொண்ட இவ் வேதிப்பொருள் [CH3COO] என்னும் எதிர்ம மின்மியாகிய (அயனியாகிய) அசிட்டேட்டு, நேர்ம மின்மியாக உள்ள சோடியத்துடன் சேர்ந்து சோடியம் அசிட்டேட்டு ஆகின்றது.

பயன்பாடுகள்

[தொகு]

தொழிலகங்கள்

[தொகு]

நெசவாலைகளில் கழிவுக் கந்தகக் காடியை நடுமைப் படுத்த (காடித்தன்மையை ஈடுகட்டி நடுமைப்படுத்த) சோடியம் அசிட்டேட்டு பயன்படுகின்றது. செயற்கை இரப்பர் உற்பத்தியில் குளோரோப்பிரீனை உறுதியேற்றும் வல்க்கனாக்கும் செயற்பாட்டை மட்டுப்படுத்த சோடியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகின்றது. தோல் பதனிடும் தொழிலிலும் இது பயன்படுகின்றது

உயிர்வேதியியல் பயன்பாடு

[தொகு]

சோடியம் அசிட்டேட்டு உள்ள கரைசல் உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மை(pH) விரைந்து மாறாமல் இருக்க ஓர் இடைமமாகப் பயன்படுகின்றது. உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மையின் அளவு வேதி வினைகளை வெகுவாக மாற்ற வல்லது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அசிட்டேட்டு&oldid=2900372" இலிருந்து மீள்விக்கப்பட்டது