சிந்தாமணி நிகண்டு
சிந்தாமணி நிகண்டு [1] என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876-இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. இதன் புதிய பதிப்பு 2013-இல் வெளிவந்துள்ளது, பதிப்பாசிரியர்கள் [2] இந்த நூலின் மூலத்தோடு மூலப்பாடல்களுக்கான உரையையும், நூலில் கூறப்பட்ட சொற்பொருளுக்கான அகராதியையும் உருவாக்கி இணைத்துள்ளனர்.
நூலமைதி
[தொகு]நூலானது 386 விருத்தப் பாடல்களால் ஆனது. மற்றும் ஆசிரியர் எழுதிய காப்புச் செய்யுள் ஒன்று, அவையடக்கச் செய்யுள் ஒன்று, அ. சிவசம்புப்புலவர் எழுதிய சிறப்புப் பாயிரப் பாடல் 12 - என 400 பாடல்களைக் கொண்டது. சூடாமணி நிகண்டு நூலின் முதல் 11 தொகுதிகள் போல விருத்தப்பாவால் இதனைச் செய்துள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார. [3] விருத்தப் பாவால் அமைந்த நூல் ஆதலால் சொற்களின் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் எதுகை முறையில் இதில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர்கள் இவற்றை அகர-வரிசையில் தொகுத்து நூலின் இறுதியில் பதிப்பித்துள்ளனர்.
தமிழில் நுழைந்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும், நிகண்டை இயற்றிய ஆசிரியர் தம் வடமொழிப் புலமையால் தமிழில் நுழைத்துள்ள வடசொற்கள் பலவற்றுக்கும் இந்த நூலில் பொருள் காணமுடியும். [4]
நிகண்டு - எடுத்துக்காட்டுப் பாடல்
[தொகு]- ஆகமன் [5] சிவனே ஆகமனம் [6] வந்து சேருதல் பேர்
- ஏகபிங்கலன் [7] குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு [8] ஆம்
- சாகரணம் [9] விழிப்பு சாகியே அகிலயம் [10] [11] தான்
- சேகமே தெளிதல் என்ப சேகிலி அரம்பை [12] ஆமே [13] [14]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ வல்லவை ச. வைத்தியலிங்கர் (1843 - 1901). சிந்தாமணி நிகண்டு (மூலமும் உ���ையும் அகராதியும்). யாழ்ப்பாணம்: நோக்கு, கொட்டிவாக்கம், சென்னை 96 பதிப்பு ஆண்டு 2013.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ வ. ஜெயதேவன் & இரா. பன்னிருகைவடிவேலன்
- ↑ நூலின் அவையடக்கப் பாடல்
- ↑ பிற தள இணைப்பைச் சொடுக்கி ஆய்ந்து இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
- ↑ ஆகம் என்னும் உடலுக்கு மன்னன் சிவன்
- ↑ ஆக-மனம் என்னும் மன-உணர்வு சிவன் உடலில் வந்து சேர்தல்
- ↑ பிங்கலன் என்னும் சொல் செல்வனைக் குறிக்கும். தனிப்பெருஞ் செல்வன் குபேரன்
- ↑ காகம்
- ↑ சாகரணம் = விழிப்புணர்வு
- ↑ சாகி = அகிலயம் (உலகம்), ஆலமரத்தின் அயலே உள்ள இடத்தை ஆலயம் என்பது போல அகிலமாமாகிய உலகத்தின் அயலே உள்ள இடம் அகிலயம்
- ↑ சிவன் "ஆலமர் செல்வன்" எனக் குறிப்பிடப்படுகிறான் (சிறுபாணாற்றுப்படை 97, "ஆல்கெழு கடவுள்" எனக் குறிப்பிடப்படுகிறான் (திருமுருகாற்றுப்படை 256)
- ↑ அரம்பை = வாழைமரம், வாழைமரம் போன்ற பெண்
- ↑ நிகண்டு பாடல் 1
- ↑ பொருள் நோக்கில் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது
வெளி இணைப்புகள்
[தொகு]- சிந்தாமணி நிகண்டு, மூலம், உரை, அகராதி, மின்–அகராதி, சிந்தாமணி நிகண்டில் உள்ள அனைத்துச் சொற்களையும் அகர வரிசையிலும், பிற வகையிலும் பொருள் தொடர்புடன் கண்டறியும் வகையில் இந்தத் தளத்தின் ஒரு பகுதி உள்ளது.