உள்ளடக்கத்துக்குச் செல்

சிசிலியன் தற்காப்பு, மேக்னசு சிமித் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
e7 black pawn
f7 black pawn
h7 black pawn
c6 black pawn
d6 black pawn
f6 black knight
g6 black pawn
e5 white pawn
c4 white bishop
c3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
8.e5! என்ற நகர்வுக்குப் பின்னர்

சதுரங்கத்தில் மேக்னசு சிமித் பொறி (Magnus Smith Trap) என்பது சிசிலியன் தடுப்பட்டத் திறப்பில் ஆரம்பநிலையில் விரிக்கப்படும் பொறியாகும். மூன்று முறை கனடாவின் சதுரங்க சாம்பியனாக இருந்த மேக்னசு சிமித் (1869–1934) கண்டுபிடித்த இப்பொறிக்கு அவருடைய பெயரை வைத்து அதையே தொடர்ந்து அழைக்கிறார்கள். ”மேக்னசு சிமித் பொறி” என்று தலைப்பிடப்பட்டு[1] சதுரங்க வரலாற்று மையம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சதுரங்க வரலாற்று ஆசிரியர் எட்வர்டு வின்டர் தன்னுடைய சதுரங்கக் குறிப்புகள் பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். இப்பொறிக்கு மேக்னசு சிமித் பொறி என்பது பொருந்தாப் பெயர் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் சிசிலியன் தடுப்பாட்டத்தில் “மேக்னசு சிமித் மாறுபாடு” என்றொரு திறப்பாட்ட வகையும் இருக்கிறது. ஒரு சதுரங்க விளையாட்டு வீரரின் முற்பெயரும் பட்டப்பெயரும் சதுரங்க திறப்புகளுக்கான சொல்லாட்சியில் ஒருங்கே பயன்படுத்தப்படுவது ஓர் அபூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மேக்னசு சிமித் வலை

[தொகு]

1.e4 c5 2. Nf3 d6 3. d4 cxd4 4. Nxd4 Nf6 5. Nc3 Nc6 6. Bc4

இந்நகர்வுகள் சோசின் (அல்லது பிசர்) மாறுபாட்டு வகை சிசிலியன் தடுப்பாட்டம் ஆகும். இந்நிலையில் கருப்பு ஆட்டக்காரர் பொதுவான பதில் நகர்வான 6...e6 என்று ஆடினால் வெள்ளை ஆட்டக்காரரின் c4 இல் உள்ள அமைச்சரின் நிலை கவலைக்கிடமான நிலையாக மாறிவிடும். ஆனால்,

6... g6?! என்ற நகர்வைச் செய்து கருப்பு வலையில் சிக்குகிறார்.

7. Nxc6 bxc6 8. e5! (பக்கத்தில் உள்ள படம்)

கருப்புக் காய்களுடன் விளையாடுபவரின் ஆட்டம் தவறான வழியில் செல்கிறது. 8...Nh5? என்ற கருப்பின் நகர்வுக்குப் பின்னர் பாபி ஃபிஷர் இவ்வாறு திட்டமிடுகிறார். 9.Qf3! e6 (9...d5 10.Nxd5!) 10.g4 Ng7 11.Ne4 Qa5+ (11...d5 12.Nf6+ Ke7 13.Qa3+) 12.Bd2 Qxe5 13.Bc3 என்ற நகர்வை ஆடியவுடன் கருப்பு ராணி வலையில் நன்றாக சிக்கிக்க் கொள்கிறது. மாறாக 8 ... Ng4 9.e6 + f5 என்று விளையாடி 1910 ஆம் ஆண்டு நடைபெற்ற[2] செலுக்டர்–லசுக்கர் இடையிலான உலக சதுரங்க சாம்பியன��� ஆட்டம் சமநிலையில் முடிந்தது, மேலும் 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ரோசன்–பர்ன் இடையிலான ஆட்டத்தில் கருப்புக் காய்களுடன் விளையாடியவர் 8...d5 9.exf6 dxc4 10.Qxd8+ Kxd8 11.Bg5 Be6 12.0-0-0+ Ke8 என்ற நகர்வுகளை விளையாடி வெற்றியும் அடைந்திருக்கிறார்.[3]
ஆகவே கருப்பு இந்த ஆட்டத்தில் தேர்ந்தெடுத்த 6... g6?! நகர்வு காரணமாக பேரழிவுகள் அவருக்கு உண்டாகின்றன.

8... dxe5?? 9. Bxf7+

வலை விரித்த வெள்ளை 9...Kxf7 10.Qxd8. என்ற நகர்வைச் செய்து கருப்பு இராணியைக் கைப்பற்றுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Hooper, David, Kenneth Whyld (1996). The Oxford Companion to Chess. Oxford University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280049-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  • பாபி ஃபிஷர், Larry Evans (1969). My 60 Memorable Games. Simon and Schuster. LCCN 68055954.