சாம்பல் நிற மடவை
சாம்பல் நிற மடவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முகிலிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மு. செபாலசு
|
இருசொற் பெயரீடு | |
முகில் செபாலசு லின்னேயஸ், 1758 |
சாம்பல் நிற மடவை (Mugil cephalus) என்பது மடவை இனத்தைச் சேர்ந்த முக்கியமான மீன் இனம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படுன்றன.[2] இவை சராசரியாக 30 முதல் 75 செ.மீ.கள் வரை வளரக்கூடியவை ஆகும். இவற்றின் உடலில் ஆறு முதல் ஏழு நேர்க்கோடுகள் வரை காணப்படும்.
விளக்கம்
[தொகு]சாம்பல் நிற மடவை மீனின் பின்புறம் ஆலிவ்-பச்சை நிறமாகவும், பக்கங்கள் வெள்ளி நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெண்மை நிறமாகவும் இருக்கும்.[2] மீனில் ஆறு முதல் ஏழு தனித்துவமான பக்கவாட்டு கிடைமட்ட கோடுகள் இருக்கலாம். உதடுகள் மெல்லியதாக இருக்கும்.[2] இந்த மடவையில் பக்கவாட்டு கோடு இல்லை. பொதுவாக இதன் நீளம் சுமார் 50 சென்டிமீட்டரும் (20 அங்குலம்), அதிகபட்ச நீளம் 100 சென்டிமீட்டரும் (39 அங்குலம்) ஆகும். இது அதிகபட்சமாக எட்டு கிலோகிராம் (18 பவுண்ட்) எடை வரை வளரும்.[3]
பரவல்
[தொகு]அத்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிசுகே விரிகுடா மற்றும் நோவா இசுகோடியா வரையும்,[1] அனைத்து கடல்களின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலம் உள்ளிட்ட அனைத்து கடலோர நீரில் இந்த சாம்பல் நிற மடவை காணப்படும்.[2] இது 0–120 மீட்டர் (0–394 அடி) வரை ஆழத்திலும், 8–24 °C (46–75 °F) வெப்பநிலையிலும் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளது.[3]
மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு
[தொகு]சாம்பல் நிற மடவை என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு முக்கியமான உணவு மீனாகும். மேலும் இவை மீன்பிடி மற்றும் வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் உலகளவில் மீன்பிடித்தலில் 130,000 கிலோ மீன்வளம் மூலமும் மீன்வளர்ப்பு உற்பத்தியில் 142,000 கிலோ பெறப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Camara, K.; Carpenter, K.E.; Djiman, R. et al. (2017). "Mugil cephalus". The IUCN Red List of Threatened Species 2017: e.T135567A20682868. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T135567A20682868.en. பார்த்த நாள்: 31 October 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2014 version. N.p.: FishBase, 2014.
- ↑ 3.0 3.1 Minckley, W.L. 1973. Fishes of Arizona. Arizona Game and Fish Department, Phoenix. pp. 257-258.
- ↑ "FAO Fisheries & Aquaculture - Species Fact Sheets - Mugil cephalus (Linnaeus, 1758)". fao.org. Archived from the original on 2015-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- Photos of சாம்பல் நிற மடவை on Sealife Collection