கோத்தா கெமுனிங்
கோத்தா கெமுனிங் | |
---|---|
Kota Kemuning | |
சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 2°59′33.8″N 101°32′27.3″E / 2.992722°N 101.540917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கிள்ளான் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் |
மலேசிய அஞ்சல் குறியீடு | 40460 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-5525 |
மலேசிய போக்குவரத்துப் பதிவெண் | B |
கோத்தா கெமுனிங், (மலாய்: Kota Kemuning; ஆங்கிலம்: Kota Kemuning; சீனம்: 哥打哥文宁); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில், சா ஆலாம் மாநகருக்கு தெற்கே உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் கிழக்கில் கிள்ளான் ஆறு செல்கிறது.
இந்த நகரம் கோலாலம்பூர் நகர மையத்தில் இருந்து தென்மேற்கே 25 கி.மீ.; சா ஆலாம் நகரில் இருந்து 2.5 கி.மீ.; தொலைவில் உள்ளது. 1994-இல் இந்த நகரம் சா ஆலாம் மாநகராட்சிக்கு (Shah Alam City Council) மாற்றப்படும் வரையில் கிள்ளான் நகராட்சி (Klang Municipal Council) அதிகாரத்திற்குள் இருந்தது.[1]
பொது
[தொகு]டிஆர்பி-ஐகோம் நிறுவனம் (DRB-HICOM) மற்றும் கமுடா நிறுவனம் (Gamuda Berhad) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ஐகோம்-கமுடா மேம்பாட்டு நிறுவனத்தால் (Hicom-Gamuda Development Sdn Bhd), இந்த கோத்தா கெமுனிங் நகரம் உருவாக்கப்பட்டது.[2]
இந்த நகரமானது 1994-ஆம் ஆண்டில் ஐகோம்-கமுடா நிறுவனத்தின் (Hicom-Gamuda) வீடு மனை கட்டுமானத்தில் முதல் முயற்சியாகும். நல்ல இணக்கமான வாழ்க்கைச் சூழலில் அமையப் பெற்றுள்ள கோத்தா கெமுனிங் நகரம், கிள்ளான் பள்ளத்தாக்கின் (Klang Valley) சிறந்த குடியிருப்புகளில் ஒன்றாகப் புகழப் படுகிறது.[2]
போக்குவரத்து
[தொகு]கோத்தா கெமுனிங் நகரம், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் வழியாக அணுகக் கூடியது. அதாவது கேசாசு (KESAS Shah Alam Expressway) 506; வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பு (ELITE North–South Expressway Central Link) புதிய அதிவேக நெடுஞ்சாலையான கெமுனிங்–சா ஆலாம் நெடுஞ்சாலை (LKSA Kemuning–Shah Alam Highway) ஆகியவை கோத்தா கெமுனிங் நகரத்தை இணைக்கின்றன.
புத்ரா அயிட்சு இலகு தொடருந்து நிலையம்
[தொகு]SP31 KJ37 புத்ரா அயிட்சு இலகு தொடருந்து நிலையம் (LRT Putra Heights) கோத்தா கெமுனிங்கிற்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையம். ஆனால் தற்போது அது இல்லை. இரண்டு நகரங்களும் கிள்ளான் ஆற்றினால் பிரிக்கப்பட்டு உள்ளது.
சா ஆலாம் தொ��ருந்து நிலையம்
[தொகு]KD10 சா ஆலாம் தொடருந்து நிலையம் (KTM Shah Alam) மிக அருகில் இருப்பதால் நேரடி அணுகல் உள்ளது. ஆகவே இன்னும் வசதியாக இருக்கும். இந்த சா ஆலாம் தொடருந்து நிலையம்; சிலாங்கூர் திறன் பேருந்து SA06 (Smart Selangor Bus) சேவையுடன் கோத்தா கெமுனிங்கை இணைக்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Kota Kemuning, Shah Alam is a 2.5 mile (6,000-step) route located near Shah Alam, Selangor, Malaysia". www.mypacer.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.
- ↑ 2.0 2.1 "Kota Kemuning is a township that offers an idyllic environmental living combined with modern conveniences. It follows an eco-friendly concept with 45% of the land dedicated to wide green spaces, perfect for those who yearn for a back-to-nature lifestyle with no sacrifices needed". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.