சிகாம்புட்
சிகாம்புட் Segambut | |
---|---|
ஆள்கூறுகள்: 3°11′0″N 101°39′0″E / 3.18333°N 101.65000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
அரசு | |
• உள்ளாட்சி மன்றம் | கோலாலம்பூர் மாநகராட்சி |
• முதல்வர் | அமின் நோர்டின் அப்துல் அசீஸ் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 51200 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-61, +603-62, +603-20 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
சிகாம்புட், (மலாய்: Segambut; ஆங்கிலம்: Segambut; சீனம்: 泗岩布); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில், அமை��்து உள்ள ஒரு முக்கிம்; ஒரு புறநகரம். அதே வேளையில் கோலாலம்பூர் கூட்டாட்சியின் துணை மாவட்டமும் ஆகும்.
மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் சிகாம்புட் நகரமும் ஒன்றாகும். சிகாம்புட் புறநகர்ப் பகுதி தனி ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
சிகாம்புட் புறநகர்ப்பகுதி
[மூலத்தைத் தொகு]1974-ஆம் ஆண்டுக்கு முன்பு சிகாம்புட் பகுதி பத்துமலை துணை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது கோலாலம்பூர் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் மாண்ட் கியாரா (Mont Kiara); ஸ்ரீ கியாரா (Sri Kiara) போன்ற உயர்தர மனைவீடுக் கட்டடங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut); பண்டார் மஞ்சளாரா (Bandar Manjalara) போன்ற நடுத்தர மனைவீடுகள் உள்ளன. சிகாம்புட் டாலாம் (Segambut Dalam); கம்போங் சுங்கை பெஞ்சாலா (Kampung Sungai Penchala) போன்ற கிராமப்புற வீடுகளும் உள்ளன. அந்த வகையில் சிகாம்புட் தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.[1][2][3]
நகரங்கள்
[மூலத்தைத் தொகு]சிகாம்புட் பகுதியில் பின்வரும் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
- புக்கிட் டாமன்சாரா (Bukit Damansara)
- புக்கிட் கியாரா (Bukit Kiara)
- புக்கிட் சிகாம்பு (Bukit Segambut)
- புக்கிட் துங்கு (Bukit Tunku)
- டேசா பார்க் சிட்டி (Desa Park City)
- ஸ்ரீ அர்த்தாமாஸ் (Sri Hartamas)
- டூத்தா மாஸ் (Dutamas)
- கம்போங் கோன்கிரீன் (Kampung Concrene)
- கம்போங் காசிப்பிள்ளை (Kampung Kasipillay)
- கம்போங் பாசிர் சிகாம்புட் (Kampung Pasir Segambut)
- கம்போங் சுங்கை பெஞ்சாலா (Kampung Sungai Pencala)
- கம்போங் சுங்கை ஊடாங் (Kampung Sungai Udang)
- கே.எல். டிஜிட்டல் சிட்டி (KL Digital City)
- மேடான் டாமன்சாரா (Medan Damansara)
- மாண்ட் கியாரா (Mont Kiara)
- டாமன்சாரா நகர மையம் (Damansara Town Centre)
- சிகாம்புட் அமான் (Segambut Aman)
- சிகாம்புட் பகாகியா (Segambut Bahagia)
- சிகாம்புட் டாலாம் (Segambut Dalam)
- சிகாம்புட் டாமாய் (Segambut Damai)
- சிகாம்புட் ஜெயா (Segambut Jaya)
- சிகாம்புட் லுவார் (Segambut Luar)
- சிகாம்புட் மூடா (Segambut Muda)
- சிகாம்புட் பெர்மாய் (Segambut Permai)
- சிகாம்புட் தம்பாகான் (Segambut Tambahan)
- சிகாம்புட் தெங்கா (Segambut Tengah)
- சிகாம்புட் தொழிற்பூங்கா (Segambut Industrial Park)
- அர்த்தாமாஸ் (Hartamas)
- தாமான் பம்பூ (Bamboo Garden)
- தாமான் பூங்கா (Taman Bunga)
- தாமான் சிட்டி (Taman City)
- தாமான் சிட்டி கானான் (Taman City Kanan)
- தாமான் டேசா சிகாம்புட் (Taman Desa Segambut)
- தாமான் டூத்தா (Taman Duta)
- தாமான் கோ நாம் உவாட் (Taman Goh Nam Huat)
- தாமான் கோல்டன் (Taman Golden)
- தாமான் கோக் டோ (Taman Kok Doh)
- தாமான் லாவா (Taman Lawa)
- தாமான் மில்லியன் (Taman Million)
- தாமான் நியாகா வாரிஸ் (Taman Niaga Waris)
- தாமான் பிரைமா இம்பியான் (Taman Prima Impian)
- தாமான் சிகாம்பு (Taman Segambut)
- தாமான் ஸ்ரீ பிந்தாங் (Taman Sri Bintang)
- தாமான் ஸ்ரீ கூட்டிங் (Taman Sri Kuching)
- தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut)
- தாமான் ஸ்ரீ சினார் (Taman Sri Sinar)
- தாமான் சிகாம்புட் (Taman Segambut)
- தாமான் சிகாம்புட் இண்டா (Taman Segambut Indah)
- தாமான் செஜாத்திரா (Taman Sejahtera)
- தாமான் எஸ்.பி.பி.கே. சிகாம்புட் (Taman SPPK Segambut)
- தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (தெற்கு) (Taman Tun Dr Ismail Selatan)
- தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (வடக்கு) (Taman Tun Dr Ismail Utara)
அரசியல்
[மூலத்தைத் தொகு]சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலேசியப் பொதுத் தேர்தல், 2004 வரை பாரிசான் நேசனல் கட்சியின் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. இருப்பினும், 2008; 2018; பொதுத் தேர்தல்களில் கெராக்கான் கட்சி வெற்றி பெற்றது.
2018-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ வெற்றி பெற்றார்.
மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர்
[மூலத்தைத் தொகு]சிகாம்புட்டின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ (Hannah Yeoh). சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்.[4]
இவர் மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர். 34 வயதில் மலேசியாவின் வரலாற்றில் இளைய சபாநாயகரும் இவரே ஆவார். இவர் சிலாங்கூர், சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர்
[மூலத்தைத் தொகு]முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமதுவின், பாக்காத்தான் அரப்பான் நிர்வாகத்தின் கீழ், மலேசியாவின் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர்.[5][6]
இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இவருடைய கணவரின் பெயர் ராமசந்திரன் முனியாண்டி. இரு பெண்பிள்ளைகள்; கயிலை, சாய் ஆதரா.[7]
சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[மூலத்தைத் தொகு]சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 317 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0192 | சிகாம்புட் Segambut |
SJK(T) Segambut[8][9] | சிகாம்புட் தமிழ்ப்பள்ளி | 51200 | கோலாலம்பூர் | 317 | 27 |
மேற்கோள்கள்
[மூலத்தைத் தொகு]- ↑ "Where is Mont Kiara, Kuala Lumpur, Federal Territory of Kuala Lumpur, Malaysia on Map Lat Long Coordinates". www.latlong.net. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Cover Story: Banking on its location". 24 March 2021.
- ↑ Kaur, Sharen (1 November 2018). "Second fiddle to Mont Kiara | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Billi takes defeat in his stride". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Hannah Yeoh". பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ ""The first time we held hands was after we got engaged": Deputy Minister Hannah Yeoh's love story". Salt&Light (in ஆங்கிலம்). 13 February 2019. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "சிகாம்புட் தமிழ்ப்பள்ளி - SJKT Segambut, Kuala Lumpur". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "Sambutan Deepavali peringkat Parlimen Segambut". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
வெளி இணைப்புகள்
[மூலத்தைத் தொகு]