உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டக்குன்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டக்குன்னு என்பது கேரளாவின் மலப்புரத்தில் உள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும்.

கோட்டக்குன்னு (Kottakkunnu) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், மலப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். மலப்புறம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கோட்டக்குன்னு ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கண்ணோட்டம்

[தொகு]

மலப்புறத்தின் மரைன் டிரைவ் என அழைக்கப்படும் கோட்டக்குன்னு .ஒரு மலை பூங்காவாகும். கோட்டக்குன்னு பூங்காவில் திறந்த வெளி அரங்கம், லலித் கலா அகாடமி கலை காட்சியகம், நீர் விளையாட்டு பூங்கா, சாகச பூங்கா, குழந்தைகள் போக்குவரத்து பூங்கா, பலூன் பூங்கா, 16 டி திரைப்படம் ஆகியவை உள்ளன. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும், ஈகைத் திருநாள், ஓணம், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்களின்போதும் இங்கு நீரூற்று மற்றும் லேசர் நிகழ்ச்சிகள் நடக்கும். கோட்டக்குன்னில் கோழிக்கோடு சாமூதிரி மன்னர்களின் பழைய கோட்டையின் சிதிலங்களைக் காணலாம். வரலாற்று சிறப்புமிக்க இந்த மலை ஆண்டுக்கு லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. இந்த அழகிய இடம் மலப்புறம் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்துக்கு அருகிலுள்ள கன்டோன்மென்ட் மலையை நெருங்கி உள்ளது. இது   கோழிக்கோட்டிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும்,   கோட்டக்கலில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும்,   கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்,   அங்காடிபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும் மற்றும்   திரூர் தொடருந்து நிலையத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். [தெளிவுபடுத்துக] அப் ஹில் அருகிலேயே அமைந்துள்ள கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து நிலையமாகும்.

முதன்மை திட்டம்

[தொகு]

நுழைவுச்சீட்டின் வாயிலாக மாநிலத்தில் அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலா தலங்களில் ஒன்றான கோட்டக்குன்னு உள்ளது. இதை அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட ஒரே இடமாக மாற்ற சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. 100 கோடி ரூ மதிப்புள்ள கோட்டக்குன்னு முதன்மைத் திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் சுற்றுலா அமைச்சர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் சில கூறுகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் பல பணிகள் நடந்து வருகின்றன.

கோட்டக்குன்னு மழாவீடு

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டக்குன்னு&oldid=3035570" இலிருந்து மீள்விக்கப்பட்டது