அதியன் பாறை அருவி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதியன்பாரா அருவி (Adyanpara Falls) இந்தியாவின் கேரளா மாநிலத்தின், மலப்புறம் மாவட்டத்தின் நிலம்பூர் தாலுக்காவில் இருக்கும் குறும்பாலகோடு கிராமத்தில் அருவியாகக் கொட்டுகிறது. நிலம்பூர் நகரத்தில் இருந்து 14 கிமீ தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. கண்ணுக்கினிய அழகிய இடமாக அமைந்து கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. ஒரு பருவகால நீர்வீழ்ச்சியாக, கோடை காலத்தில் நீர் ஓட்டம் குறைந்து காணப்படுகிறது. எனவே கோடைக்காலத்தில் இவ்வருவியைச் சுற்றிப்பார்க்க வருகை தருவது பரிந்துரைக்கப்படுவதில்லை. [1] பாறை மீது விழும் இந்த நீர்வீழ்ச்சியின் வீழ்ச்சியானது இயற்கையாக அடுத்தடுத்து விழும் தொடர் போல எழிலாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=அதியன்_பாறை_அருவி&oldid=3821412" இலிருந்து மீள்விக்கப்பட்டது