குபாங் பாசு மக்களவைத் தொகுதி
குபாங் பாசு (P006) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Kubang Pasu (P006) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் குபாங் பாசு மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | குபாங் பாசு மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | குபாங் பாசு தொகுதி |
முக்கிய நகரங்கள் | புக்கிட் காயூ ஈத்தாம், சாங்லூன், ஜித்ரா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | கு அப்துல் ரகுமான் கு இசுமாயில் (Ku Abdul Rahman Ku Ismail) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 108,217[1][2] |
தொகுதி பரப்பளவு | 634 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
குபாங் பாசு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Pasu; ஆங்கிலம்: Kubang Pasu Federal Constituency; சீனம்: 巴东特拉普联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P006) ஆகும்.[4]
குபாங் பாசு தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து குபாங் பாசு தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), குபாங் பாசு தொகுதி 31 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
பொது
[தொகு]குபாங் பாசு மாவட்டம்
[தொகு]மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) நகரமான புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) இந்த குபாங் பாசு மாவட்டத்தில் தான் உள்ளது. அத்துடன் சாங்லூன் (Changlun) கல்வி வளாகம்; மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான ஜித்ரா (Jitra) நகரமும் இங்குதான் உள்ளன.
குபாங் பாசு மாவட்டத்தின் வடக்கில் பெர்லிஸ் மாநிலம், மற்றும் தாய்லாந்து; கிழக்கில் பாடாங் தெராப் மாவட்டம்; தெற்கில் கோத்தா ஸ்டார் மாவட்டம், பொக்கோக் சேனா மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]குபாங் பாசு மாவட்டம் 21 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[6]
# | முக்கிம் | 2020 மக்கள் தொகை[7] | பரப்பளவு (ச.கி.மீ)[8] |
---|---|---|---|
1 | முக்கிம் ஆ (Mukim Ah) | 4,243 | 28.12 |
2 | முக்கிம் பிஞ்சால் (Mukim Binjal) | 3,504 | 22.9 |
3 | முக்கிம் புக்கிட் திங்கி (Mukim Bukit Tinggi) | 6,724 | 8.12 |
4 | முக்கிம் கெலோங் (Mukim Gelong) | 10,830 | 28.6 |
5 | முக்கிம் உஸ்பா (Mukim Husba) | 3,393 | 26.41 |
6 | முக்கிம் ஜெராம் (Mukim Jeram) | 7,828 | 38.17 |
7 | முக்கிம் ஜெர்லுன் (Mukim Jerlun) | 17,299 | 65.05 |
8 | முக்கிம் ஜித்ரா (Mukim Jitra) | 23,710 | 13.12 |
9 | முக்கிம் கெப்பெலு (Mukim Kepelu) | 9,271 | 40.72 |
10 | முக்கிம் குபாங் பாசு (Mukim Kubang Pasu) | 2,698 | 41.13 |
11 | முக்கிம் மாலாவ் (Mukim Malau) | 3,209 | 48 |
12 | முக்கிம் நாகா (Mukim Naga) | 28,135 | 47.15 |
13 | முக்கிம் பெராகு (Mukim Perahu) | 3,276 | 19.57 |
14 | முக்கிம் பெலுபாங் (Mukim Pelubang) | 9,371 | 12.38 |
15 | முக்கிம் பெரிங் (Mukim Pering) | 6,679 | 40.51 |
16 | முக்கிம் புத்தாட் (Mukim Putat) | 5,012 | 28.39 |
17 | முக்கிம் சாங்லாங் (Mukim Sanglang, Kedah) | 11,891 | 42.84 |
18 | முக்கிம் லாக்கா (Mukim Laka) | 13,351 | 110.4 |
19 | முக்கிம் தெமின் (Mukim Temin) | 35,913 | 220.3 |
20 | முக்கிம் துஞ்சாங் (Mukim Tunjang) | 6,542 | 31.58 |
21 | முக்கிம் வாங் தெப்புஸ் (Mukim Wang Tepus) | 1,600 | 27.27 |
குபாங் பாசு மக்களவைத் தொகுதி
[தொகு]குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
குபாங் பாசு பாராட் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது | 1974–1978 | மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) |
பாரிசான் (அம்னோ) |
5-ஆவது | 1978–1982 | ||
6-ஆவது | 1982–1986 | ||
7-ஆவது | 1986–1990 | ||
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | ||
11-ஆவது | 2004–2008 | சொகாரி பகாரும் (Mohd Johari Baharum) | |
12-ஆவது | 2008–2013 | ||
13-ஆவது | 2013–2018 | ||
14-ஆவது | 2018–2020 | அமிருடின் அம்சா (Amiruddin Hamzah) |
பாக்காத்தான் (பெர்சத்து) |
2020 | பெர்சத்து | ||
சுயேச்சை | |||
2020–2022 | பெஜுவாங் | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் | ரகுமான் இசுமாயில் (Abdul Rahman Ismail) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
108,217 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
52,909 | 77.07% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
83,402 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
85 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
617 | - |
பெரும்பான்மை (Majority) |
31,584 | 37.87% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
அப்துல் ரகுமான் இசுமாயில் (Abdul Rahman Ismail) |
பெரிக்காத்தான் | 47,584 | 57.05% | +57.05 | |
ஐசுதீன் ரிபின் (Aizuddin Ariffin) |
பாக்காத்தான் | 16,000 | 19.18% | -30.52 ▼ | |
அசுமுனி அசன் (Hasmuni Hassan) |
பாரிசான் | 14,489 | 17.37% | -10.80 ▼ | |
அமிருதீன் அம்சா (Amiruddin Hamzah) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 5,329 | 6.39% | +6.39 |
கெடா மாநில சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]நாடாளுமன்றம் | சட்டமன்றம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
குபாங் பாசு (Kubang Pasu) |
புக்கிட் காயூ ஈத்தாம் | ||||||
ஜித்ரா | |||||||
துஞ்சாங் |
சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
[தொகு]எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N05 | புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) |
அலிமேதன் சாதியா சாத் (Halimaton Shaadiah Saad) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N06 | ஜித்ரா (Jitra) |
முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) |
உள்நாட்டு போராளிகள் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Latar Belakang Majlis Bandaraya Alor Setar".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Taburan penduduk mengikut kawasan pihak berkuasa tempatan dan mukim 2010". Jabatan Perangkaan Malaysia. pp. 266–267.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Kubang Pasu, District in Malaysia". citypopulation.de.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
மேலும் காண்க
[தொகு]