பாவு மாவட்டம்
பாவு மாவட்டம் Bau District Daerah Bau | |
---|---|
ஆள்கூறுகள்: 1°25′0″N 110°0′9″E / 1.41667°N 110.00250°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | பாவு மாவட்டம் |
நகரம் | பாவு நகரம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 62,200 |
அஞ்சல் குறியீடு | 93250 |
தொலைபேசி | 6082 |
பாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Bau; ஆங்கிலம்: Bau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம்.[1][2]
1840-ஆம் ஆண்டுகளில் பாவு மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போர்னியோ நிறுவனத்தினால் (The Borneo Company) தங்கச் சுரங்கத் தொழில்கள் கையகப் படுத்தப்பட்டன. 1921-இல், சுரங்கத் தொழில்களில் வருமானம் குறைவானது. அதன் தொடர்ச்சியாகச் சுரங்கங்கள் மூடப்பட்டன.[3]
1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. பின்னர் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல், அந்தச் சுரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டன.[4] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[5]
வரலாறு
[தொகு]1837-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி, செக்ராங் இபான்கள் (Skrang Ibans); பிரதாக் மலை (Bratak Peak) சிகரத்தின் உச்சியில் இருந்த சகோய் - பிரதாக் பிடாயூ (Jagoi-Bratak Bidayuh) குடியேற்றப் பகுதியில் வாழ்ந்த பிடாயூ மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 2,000 சகோய் - பிரதாக் பிடாயூ ஆண்களைக் கொன்றார்கள். 1,000 பெண்களைச் சிறைபிடித்தார்கள்.
சகோய் - பிரதாக் பிடாயூ சமூகத்தின் தலைவரான பாங்லிமா குலோவ் மற்றும் அவரின் சீடர்கள் சிலர் படுகொலையில் இருந்து தப்பினர்.
சகோய் - பிரதாக் தினம்
[தொகு]ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, 1837 படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் நினைவாக பாவு பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் சகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள்.
அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது.[6][7]
1841-ஆம் ஆண்டில் சரவாக்கின் புதிய வெள்ளை ராஜா ஜேம்சு புரூக், சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் சிலரை மீட்டு எடுத்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
- ↑ "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
- ↑ "Zedex Minerals Ltd (ASX:ZDX) Bau Global JORC Resource Now 1.612 M oz Au". ABN Newswire. 5 November 2008 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528183157/http://www.abnnewswire.net/press/en/59000/.
- ↑ Chew, Daniel (1990) Chinese Pioneers on the Sarawak Frontier 1841-1941 Oxford University Press, Singapore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588915-0
- ↑ Kaur, Amarjit (February 1995) "The Babbling Brookes: Economic Change in Sarawak 1841-1941" Modern Asian Studies 29(1): pp. 65-109, p.73
- ↑ "Descendants mark Jagoi-Bratak Day." New Straits Times 10 May 2000;
- ↑ "The Jagoi-Bratak group first settled at Bung Bratak when they migrated out some 750 years ago from Mount Sungkong in West Kalimantan, Indonesia. Then sometimes in early 1840s, they moved from Bung Bratak to surrounding areas form 34 different villages. Bung Jagoi was the first Bidayuh village within Jagoi area". Visit Sarawak 2022 #BounceBackBetter.[தொடர்பிழந்த இணைப்பு]