உள்ளடக்கத்துக்குச் செல்

கத்திப்பாரா சந்திப்பு

ஆள்கூறுகள்: 13°00′26″N 80°12′13″E / 13.00727°N 80.20371°E / 13.00727; 80.20371
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கத்திப்பாரா சந்திப்பு
image
கத்திப்பாரா மேம்பாலம் தெற்கு ஆசியாவிலேயே குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு பெரியது ஆகும்.
வகைகுறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு
இடம்சென்னை,  இந்தியா
அமைத்தவர்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
திறக்கப்பட்ட நாள்2008
வழிகள்6
திசை2
பேருந்து வழிகள்0

கத்திப்பாரா சந்திப்பு, சென்னை மாநகராட்சியின் ஒரு முக்கிய சாலைச் சந்திப்பு ஆகும்.[1]

அமைவிடம்

[தொகு]
கத்திப்பாரா சந்திப்பு, கிண்டி, சென்னை, தமிழ்நாடு - ஆகாயம் காட்சி

இது ஆலந்தூரில், கிண்டிக்கு தெற்கே அமைந்திருக்கிறது. இது ஜி.எஸ்.டி சாலை (தேசிய நெடுஞ்சாலை 45), உள் வட்ட சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இடைவெட்டுச் சந்திகளை இணைக்கிறது.

குறிப்பு

[தொகு]

கத்திப்பாரா சந்திப்பு, ஒரு மிகப் பெரிய இரட்டை அடுக்கு பல்தளச்சாலை மற்றும் இடைமாற்றுச்சந்தி ஆகும். இந்த சுற்றுச்சந்தியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிலை அமைந்திருக்கின்றது.

திறப்பு

[தொகு]

ஜி.எஸ்.டி சாலையையும் (NH 45), உள் வட்ட சாலையையும் இணைக்கும் முக்கிய வழி, 9 ஏப்ரல் 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. இது முழுமையாக கட்டப்பட்டு, 26 அக்டோபர் 2008 இல் தீபாவளி பரிசாக சென்னை மக்களுக்கு, அன்றைய முதலமைச்சரால் மு. கருணாநிதியால் இந்திய சீர் நேரம் காலை 9:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Finally, Kathipara flyover opens. Times of India. Oct 27, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்திப்பாரா_சந்திப்பு&oldid=3176457" இலிருந்து மீள்விக்கப்பட்டது